கோத்தபாயவின் அடியாளாக என்னை காண்பிக்க சிலர் முயற்சி செய்கின்றனர்

நாம் ஐ .எஸ் . கொள்கைக்கு எதிரானவர்கள் : சி.ரி.ஜே செயலாளர் அப்துல் ராசிக்

0 1,121

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவிற்கும் எனக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இருந்­த­தில்லை. அவர்கள் எனக்கு சம்­பளம் கொடுக்­கவும் இல்லை. என்னை கோதா­பய ராஜபக் ஷவுடன் இணைக்­க­வேண்­டு­மென்ற தேவை சில­ருக்கு உள்­ளது என சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் அப்துல் ராசிக் பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன்­னி­லையில் தெரி­வித்தார்.

ஈஸ்டர் தாக்­குதல் குறித்து விசா­ரணை நடத்தி பாரா­ளு­மன்­றத்­திற்கு அறிக்கை சமர்ப்­பிக்கும் பாரா­ளு­மன்ற விசேட தெரி­விக்­குழு முன்­னி­லையில் நேற்று வியா­ழக்­கி­ழமை விசா­ர­ணைக்­காக அழைக்­கப்­பட்ட ‘சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்’ அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் அப்துல் ராசிக்­கிடம் விசா­ர­ணைகள் நடத்­திய வேளையில் அவர் இவற்றைக் குறிப்­பிட்டார்.

தெரி­வுக்­குழு:- உங்­களை இங்கு விசா­ர­ணைக்கு அழைத்­தி­ருக்க சில கார­ணிகள் உள்­ளன. உரிய கார­ணி­களை மாத்­திரம் நீங்கள் குழு­விடம் கூற­வேண்டும். உங்­களைப் பற்றி கூறுங்கள்,

பதில்: நான் ராசிக் ரபீக்தீன், மக்கள் மத்­தியில் அப்துல் ராசிக் என பிர­சித்தி பெற்­றுள்ளேன், இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பை 2005 ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்டு நாடு முழு­வது 86 கிளை­களை உரு­வாக்­கிக்­கொண்டோம். முஸ்லிம் மக்­க­ளுக்கு அல்­குர்ஆன் குறித்த தெளிவை ஏற்­ப­டுத்தி விழிப்­பு­ணர்வு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்தோம். அது­மட்­டு­மல்­லாது பல சமூக செயற்­பா­டு­களில் ஈடு­பட்டோம். குறிப்­பாக முஸ்லிம் இரத்­த­தானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எம்மால் உரு­வாக்­கப்­பட்­டது. இஸ்லாம் இரத்­த­தா­னத்தை நியா­யப்­ப­டுத்­து­வதை நாம் எடுத்­துக்­கூ­றி­யுள்ளோம். மத, இன வேறு­பா­டுகள் இல்­லாது இதனை நாம் செய்தோம். முஸ்லிம் மக்கள் இந்த நாட்டில் உய­ரிய சட்­டங்­களில் கட்­டுப்­பட்­ட­வர்­க­ளாக இருக்க வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­தினோம். எனினும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பில் ஏற்­பட்ட சில மார்க்க, நிரு­வாக முரண்­பா­டுகள் கார­ண­மாக நாம் அதி­லி­ருந்து வெளி­யேறி சிலோன் தவ்ஹீத் அமைப்பை உரு­வாக்­கினோம்.

Q என்ன முரண்­பா­டுகள் ஏற்­பட்­டன?

– முரண்­பா­டுகள் என்றால் பெரிய பாது­காப்பு குறித்த எந்த அச்­சு­றுத்­த­லான விட­யங்கள் அல்ல. மத ரீதி­யிலும், நிரு­வாக ரீதி­யிலும் சில முரண்­பா­டுகள் ஏற்­பட்­டன. கொள்­கைகள், பின்­பற்­றல்­களில் மற்றும் குர்பான் போன்ற மத செயற்­பா­டு­களில் முரண்­பா­டுகள் ஏற்­பட்­டன. நாம் திருக்­குர்ஆன் வழியை மட்­டுமே கட்­டுப்­பட்டு பின்­பற்ற வேண்டும் அது அல்­லாது எந்த தலை­மை­க­ளுக்கும் அல்ல என்­பதே எமது நிலைப்­பாடு.

Q கிழக்கில் மட்­டுமா நீங்கள் இயங்­கு­கின்­றீர்கள்?

இல்லை. நாட­ளா­விய ரீதியில் . கிழக்கில் எமது அமைப்பின் கிளைகள் மிகவும் குறைவு. கிழக்­கி­லுள்ள மக்கள் தொகைக்­க­மைய எமது அமைப்பின் செயற்­பாடு குறை­வா­னதே. ஏனைய பகு­தி­களில் உள்­ளது.

Q உங்­களின் உண்­மை­யான பெயர் என்ன?

ராசிக் ரபீக்தீன், இறை­வனின் பெயரில் ராபிக் என்ற அடை­யாளம் உள்­ளது.

Qமன்சூர் என்ற பெயரில் நீங்கள் செயற்­பட்­டீர்­களா?

இல்லை

Q-இந்­தி­யா­வி­லா­வது?

இல்லை. அவ்­வாறு ஒரு பெயர் எனக்கு இல்லை.

Q நீங்கள் ஏன் பெளத்த மதத்­துக்கு எதி­ரான கீழ்த்­த­ர­மான வார்த்­தை­களை பேசி­னீர்கள்?

– உண்­மையில் 2013ஆம் ஆண்டில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக சிங்­கள அடக்­கு­முறை ஏற்­பட்­டது. அதற்குப் பதில் தெரி­வுக்கும் போதே இவற்றை நன் கூறினேன், எனினும் நான் கூறி­யது முழு­மை­யாக வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

Q நீங்கள் கூறி­யது தவ­று­தானே?

ஆம். அந்த தவறை நான் ஏற்­றுக்­கொண்டேன். பிர­சித்­தமாக நான் எனது மன்­னிப்பை கூறினேன். அதற்­கான ஆதா­ரங்கள் உள்­ளன. மகா­நா­யக்க தேரர்­களை சந்­தித்து மன்­னிப்புக் கேட்­கவும் நான் முயற்­சித்தேன். ஆனால் வாய்ப்பு கிடைக்­க­வில்லை. ஊட­கங்­களில் ஒரு கார­ணியை வைத்து மட்­டுமே என்னை விமர்­சித்­தனர். பின்னர் ஒரு ஆண்­டுக்கு பின்னர் எனக்கு வழக்கு தொடுக்­கப்­பட்­டது. நீதி­மன்­ற­திலும் நான் மன்­னிப்­புக்­கோ­ரினேன்.

Q இந்த மாதிரி வேறு பிர­சா­ரங்கள் செய்­தீர்கள் தானே?

இல்லை, புத்தர் இறைச்சி உண்டார் என்று  கூறினேன் அதை தவிர நான் வேறு ஒன்றும் கூற­வில்லை.

Q – வேறு மதங்­க­ளையும் இவ்­வாறு விமர்­சித்­துள்­ளீ­களா?

இல்லை, பெளத்­தத்தை பற்றி கூற­வேதான் அதை கூறினேன். வேறு எந்த மதங்­க­ளையும் நான் விமர்­சித்­த­தில்லை.

Q ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை நீங்கள் நிரா­க­ரிக்­கின்­றீர்­களா?

– ஆம், பல தட­வை­கைகள் இதனை நான் எதிர்த்து கருத்­துக்­களை கூறி­யுள்ளேன். ‘விடி­வெள்ளி’ பத்­தி­ரி­கையில் நான் இதனை தெளி­வாக கூறினேன். இவர்கள் முஸ்­லிம்கள் இல்லை, இவர்கள் இஸ்­லா­மிய விரோத அமைப்­புகள் என்­றெல்லாம் கூறி­யுள்ளேன். நான் தொடர்ச்­சி­யாக இந்த அமைப்பை நிரா­க­ரித்து பேசி­யுள்ளேன். 2018ஆம் ஆண்டு இறு­திக்­கா­லத்தில் கூட நான் ஐ.எஸ். அமைப்பை நிரா­க­ரித்துப் பேசினேன். அதற்­கான ஆதா­ரங்கள் என்­னிடம் உள்­ளன. எனினும் இன்று ஐ.எஸ். அமைப்பை நான் ஆத­ரி­கின்றேன் என என்­மீது கூறும் விமர்­ச­னங்­களை நான் முற்­றாக நிரா­க­ரிக்­கிறேன்.

Q வஹா­பிஸம் என்­பதை நீங்கள் ஏற்­றுக்­கொள்­கி­றீர்­களா?

வஹா­பிஸம் என்­பது குறித்து யாருக்கும் உறு­தி­யான தெளி­வில்லை. இது அரா­பியக் கொள்கை. இது­கு­றித்து பல ஆதா­ரங்கள் உள்­ளன. புத்­தங்கள் உள்­ளன. இலங்­கையில்…..

Q இல்லை. கேட்ட கேள்வி அது­வல்ல, சரி இங்கு வஹா­பிஸ பள்­ளிகள் எத்­தனை உள்­ளன?

– தவ்ஹீத் என்ற நபர்­களை வஹா­பி­ஸ­வா­திகள் என கூறி அவர்­களை அடிப்­ப­டை­வா­திகள் என்றே கூறு­கின்­றனர். இது தவ­றான கருத்து. இலங்­கையில் வஹாப்­வாதம் என்று கூறும் பயங்­க­ர­வாத அமைப்பு ஒன்­றுமே இல்லை.

Q இங்கு ஏற்­க­னவே சாட்­சிக்கு வந்­த­வர்கள் வஹா­பி­சத்தை தவ­றான ஒன்­றாகக் கூறு­கின்­ற­னரே?

அவர்கள் தவ­றான கருத்­துக்­களை கூறி­யுள்­ளனர். வஹா­பிஸம் என்­பது எமது கொள்கை. நாம் எமது கொள்­கையில் பல நல்ல கார­ணி­களை கூறி­யுள்ளோம். எமது நாட்டுக் கலா­சா­ரத்­துக்­கேற்ற முஸ்லிம் கொள்­கையை நாம் வலி­யு­றுத்­து­கின்றோம். எனினும் சிலர் இதனை தவ­றாகக் கூறி எம்மை எதிர்க்­கின்­றனர்.

Q யார் எதிர்த்­தது?

உலமா சபை இதனை தவ­றாகக் கூறு­கின்­றது. முகத்தை மூட­வேண்டும் என்­றெல்லாம் உலமா சபைதான் கூறு­கின்­றது. பெண்கள் முகத்தை மூட­வேண்டாம், சாதா­ரண பெண்கள் முகத்தை மூட வேண்டாம் என்று நாம் கூறு­வது தவ­றெனக் கூறி அவர்கள் இறுக்­க­மான கோட்­பாட்டை வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.

Q இவ்­வாறு நன்­றாகப் பேசும் நீங்கள் ஏன் அடிப்­ப­டை­வாதக் கருத்­துக்­களை கூறு­கின்­றீர்கள்?

ஒரு தடவை நான் அந்த தவறை விட்­டு­விட்டேன். எனது தவறை நான் திருத்­திக்­கொண்டு ஆரோக்­கி­ய­மான நகர்­வு­க­ளுடன் முன்­ன­கர்­கின்றேன். நான் கூறி ஒரு மாதத்­திலே அதனை திருத்­திக்­கொண்டு மன்­னிப்பும் கேட்­டுக்­கொண்டு என்னை திருத்­திக்­கொண்டேன்.

Q நீதி­மன்ற வழக்கு இருந்­ததே?

அது ஞான­சார தேர­ருடன் ஏற்­பட்ட ஒரு கருத்து முரண்­பாடு கர­ண­மாக சிக்கல் ஏற்­பட்­டது. தேரர் ஒரு­வரை ‘அவன்’ என்று கூறி­யதே சிக்­க­லாக அமைந்­தது.

Q நீங்கள் எங்கு மதக் கல்­வியை கற்­றீர்கள்?

நான் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட நிறு­வ­னத்தில் மதக் கல்­வியை படிக்­க­வில்லை.

Q இலங்­கையில் மதத் தலை­மைகள் உள்­ளதை அறிந்­துள்­ளீர்­களா?

ஆம்.

Q அதில் நீங்கள் இணைந்து செயற்­பட்­டுள்­ளீர்­களா?

இல்லை, நான் அதில் இணைந்­தி­ருந்தால் நானும் ஹலால் கொள்கை, இறுக்­க­மாக கொள்­கையில் இருக்க வேண்டி வரும். ஆகவே நான் இணை­ய­வில்லை. இது மதப் பிரச்­சினை இதில் நான் கலந்­து­கொள்­ள­வில்லை.

Q ஏனைய அமைப்­புகள் உலமா சபை­யுடன் இணைந்­துள்­ளன, நீங்கள் மட்­டும்­தானே இல்லை?

எமது எல்­லைக்­குள்­ளி­ருந்து நாம் செயற்­பட்டு வரு­கின்றோம். தேவைப்­படும் நேரங்­களில் சில விட­யங்­களில் உல­மாக்­களை தொடர்­பு­கொள்வோம்.

Q அங்­கீ­காரம் இல்­லாத மத கற்­கை­களை பெற்று உங்­களின் நினைப்­பிற்கு அமைய மத பிர­ச­சாரம் செய்­வது சரியா?

ஆம் உண்­மைதான். எனக்கு தெளிவு உள்­ளது. அவற்றை நான் அறிந்து தெரி­யப்­ப­டுத்­து­கின்றேன்.

Q உங்­க­ளுக்கு தெளி­வுள்­ளது. ஆகவே இதனை மற்­றவர் ஏற்­றுக்­கொள்ள வேண்டும் என்று கூறு­கின்­றீர்கள் அப்­ப­டியா?

இல்லை, எனக்கு சாட்­சி­யங்களில், தெளிவு உள்­ளது.

Q அரபு மொழியை பின்­பற்ற வேண்டும் என்­பது கட்­டா­யமா?

ஆம், பௌத்தம் எவ்­வாறு பாளி மொழியில் உள்­ளதோ அதேபோல் எமது அடிப்­ப­டை­களை அர­பி­மூ­லமே கொண்டு செல்ல வேண்டும். எம்மால் அரபி மொழியை நிரா­க­ரிக்க முடி­யாது. உலகின் இரண்­டா­வது பிர­தான மொழி­யாக அரபி உள்­ளது. ஐக்­கிய நாடுகள் சபையில் ஆங்­கி­லத்­துக்கு அடுத்த படி­யாக அரபி மொழி உள்­ளது. அப்­படி இருக்­கையில் ஏன் பின்­பற்­றக்­கூ­டாது

Q ஆங்­கிலம் இங்கு போதாதா அர­பியும் வேண்­டுமா?

நான் அவ்­வாறு கூற­வில்லை. எமது பிர­தான மொழி எமது மதங்கள், எமது வழி­பா­டுகள், வணக்­கங்கள் அனைத்தும் அரபி மொழி­யில்தான் கூறு­கின்றோம்.

Qஅதற்­காக இங்கு அரபி வேண்டும் என்று கூறு­வது தவறு. பதா­கைகள் வைத்து இதனை செய்ய வேண்­டுமா?

நான் அதைத்தான் கூறு­கின்றேன். அரபி கலா­சாரம் ஒன்று இங்கு வர­வேண்­டு­மென நாம் கூற­வில்லை. அர­புக்­களை பின்­பற்றல் இங்கு வேண்­டா­மென்று உறு­தி­யான நிலைப்­பாட்டில் நாம் உள்ளோம். நபிகள் நாயகம் அரபி கலா­சா­ரத்தை தான் பின்­பற்ற வேண்­டு­மெனக் கூற­வில்லை. நாம் இங்­குள்ள முறை­மை­களை பின்­பற்­றலாம்.

Q பெண்­களின் திரு­மண வயது குறித்து பேசி­யது குறித்து உங்­களின் கருத்து என்ன ?

நான் கூறி­யதை முழு­மை­யாக எவரும் கேட்­க­வில்லை. வயது எல்லை பற்றி நாம் கூற­வில்லை. 18வயது என்­பதை நான் நிரா­க­ரிக்­க­வில்லை. பொது திரு­மண சட்­டத்தில் 12 வயது அடிப்­படை வயது என்று உள்­ளது. ஆனால் சில விசேட கார­ணி­க­ளுக்­க­மைய, அவர்­களின் அங்­கீ­கா­ரத்­திற்­க­மைய மாற்­றிக்­கொள்ள முடியும்.

Q நீங்கள் கூறு­வதை கூறி­விட்டு மன்­னிப்பு கேட்­பது ஏன்?

நான் அவ்­வா­றல்ல. எனது கதையை நீங்கள் யாரும் முழு­மை­யாகக் கேட்­க­வில்லை. திரு­மண வயது குறித்து ஒரு உறு­தி­யான திட்டம் வேண்டும். யாரும் நினைத்த நேரத்தில் மாற்ற வேண்டாம். 18வயது சிறந்­தது. அதை­விடக் குறைந்த வயதில் தேவை ஏற்­பட்டால் விசேட செயற்­பா­டு­களை கருத்­திற்­கொண்டு திரு­மணம் செய்து வைக்க முடியும் என்றே கூறினேன்.

Q ஒரு சிறுவன் ஒரு பதா­கையை ஏந்திக் கொண்டு அதில் சிறு வயது திரு­ம­ணத்தை வலி­யு­றுத்தும் புகைப்­படம் உள்­ளது. இதன்­மூலம் சிறு­வர்­களை இள வயதுத் திரு­ம­ணத்­திற்கு வலி­யு­றுத்­து­வ­தா­கவே உள்­ளதே?

நாம் சிறு­வர்­களை வைத்து பதா­கையை எந்தக் கூற­வில்லை. பெண்­களை நாம் சம­மாக மதிக்­கிறோம். எமது போராட்­டங்­க­ளுக்கு முஸ்­லிம்கள் வரு­வார்கள். குடும்­ப­மாக வரும்­போது அதில் சிறு­வர்­களும் வரு­கின்­றனர். அவ்­வாறு நடந்­தது ஒன்றே இந்தப் படங்­களில் உள்­ளன.

Q இதன் பின்­ன­ணியில் யாரும் உள்­ள­னரா?

-யாரும் இல்லை, கோத்­தா­பய ராஜபக் ஷ கூட பின்­ன­ணியில் இல்லை.

Qஇப்­போது நீங்கள் ஏன் அவ­ரது பெயரை கூறி­னீர்கள்? கேள்வி கேட்க முன்­னரே நீங்கள் ஏன் தடு­மா­று­கின்­றீர்கள்?

இல்லை. எப்­போதும் என்­னுடன் அவரை தொடர்­பு­ப­டுத்தி பேசு­வது வழக்கம் அதுதான் கூறினேன். இந்தக் கேள்வி வரும் என்று தெரியும்.

Qஉங்­க­ளுக்கு நிதி எவ்­வாறு வரு­கின்­றது?

அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களில் இருந்து நான் உத­வி­களை பெற்­றுக்­கொள்­கிறேன். ஆரம்­பத்தில் எனக்கு தொழில் இல்­லாத நேரங்­களில் அமைச்சர் ரவூப் ஹக்­கீமை சந்­தித்து கூட உதவி பெற்­றுக்­கொண்டேன். அவர் வழங்­கிய கடி­தமும் என்­னிடம் உள்­ளது.

Q இல்லை நான் கேட்ட கேள்­விக்கு பதில்?

எனக்கு யாரி­டமும் இருந்து பணம் வந்­தது, நான் எவ்­வாறு இந்த பணத்தைச் செல­வ­ழித்தேன் என்ற சகல ஆதா­ரமும் கணக்கு வழக்கும் உள்­ளன. நாம் முஸ்லிம் மக்­க­ளுக்­காக சேவை செய்­கின்றோம். சதகா, ஸகாத் என்ற புண்­ணிய கோட்­பா­டுகள் எமது மதத்தில் உள்­ளன. அதற்­க­மைய நாம் சேவை செய்­கின்றோம். எனது வங்கிக் கணக்கு, எமது அமைப்பின் வங்கிக் கணக்கு உள்­ளது தேடிப்­பார்த்தால் தெரியும்.

Q கோத்­தா­ப­யவின் பெயரை ஏன் கூறி­னீர்கள்?

அவ­ரது பெயரை வைத்து என்னை அவரின் அடியாள் என்று கூற சில­ருக்கு தேவை இருந்­தது. அதனை நிரா­க­ரிக்க வேண்­டிய தேவை இருந்­தது.

Q பி.ஜே. என்­ப­வரை தெரி­யுமா ?

ஆம், அவர் ஒரு பிர­சித்­தி­பெற்ற மதத் தலைவர்.

Q அவரை இலங்­கைக்கு வர­வ­ழைக்க நட­வ­டிக்கை எடுத்­தீர்­களா?

ஆம். ஆனால் அவரை பயங்­க­ர­வா­தி­யாகக் கூற முயற்­சிக்­கின்­றனர்.

Q அவர் இங்கு வரு­வ­தற்கு எதிர்ப்பு இருந்­தது தெரி­யுமா?

அது ஒரு அர­சி­யல்­வா­தியின் நோக்கம் மட்­டுமே. அவர் முஸ்லிம் எதிர்ப்­பு­வா­தி­யல்ல. அசாத் சாலி மட்டும் எப்­போ­துமே எமக்கு எதி­ராக செயற்­பட்டு வரு­கின்றார். நாம் பி.ஜே.வை வர­வ­ழைக்க முயற்­சிகள் எடுத்த போதெல்லாம் அசாத் சாலி அவற்றை தடுத்தார். இதற்கு எதி­ராக நாம் வழக்கும் தொடுத்தோம்.

Q நீங்கள் என்ன கோரி­னாலும் இவர் குறித்து அர­சாங்கம் அச்ச்­பப்­ப­டு­கின்­றது, புல­னாய்வு எச்­ச­ரிக்­கி­றது என்றால் அவரைத் தடுக்க வேண்­டி­யது கட­மை­தானே. இவர் ஆரம்­பத்­தில்­கூட முரண்­பட கருத்­துக்­களை கோரி குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த எடுத்த முயற்­சிகள் குறித்து பல குற்­றச்­சாட்­டுக்கள் உள்­ளன. இது தெரி­யுமா?

இது வேறு அர­சியல் தலை­யீ­டுதான். இந்­தி­யாவில் ஏழு இலட்சம் மக்கள் ஆத­ரவை கொண்ட ஒரு­வ­ருக்கு எப்­படி அவ்­வாறு கூறு­வது.

Q- உங்­க­ளுக்கு சரி என்று நினைப்­பதை பேச முடியும், ஆனால் இன்­னொரு மதத்­திற்குப் பிரச்­சி­னை­யாக அமையும் தானே?

நான் தூண்­டு­வ­தான கருத்­து­களை ஒரு­போதும் பேசி­ய­தில்லை.

Q நீங்கள் கூறு­வது சரி, ஏனை­ய­வர்கள் கூறு­வது பிழை அப்­ப­டியா?

ஒன்று சரி­யென்றால் இன்­னொன்று பிழை­யாக இருக்க வேண்டும். ஆனால் எமது கொள்­கையை பின்­பற்­றுங்கள் என வலி­யு­றுத்­த­வில்லை. நாம் சரி­யென்­பதை நாம் நினைக்­கிறோம். இது மத தர்மம்.

Q “பக்­தா­தியின் கருத்­துக்­களை ஏற்­று­கொண்ட ராசிக் ஒரு பயங்­க­ர­வாதி” என அசாத் சாலி கூறினார். இது குறித்து உங்­களின் கருத்து என்ன?

இது முற்­றிலும் பொய்­யா­னது. இந்த அமைப்­புகள் குறித்து என்­னிடம் கேட்ட ஒரு கேள்­விக்கு நான் பதில் தெரி­வித்தேன். இவர்கள் இஸ்லாம் என்று கூறிக்­கொண்டு பயங்­க­ர­வாதம் தான் இலக்­காக உள்­ளது. இவர்கள் இஸ்லாம் பற்றி பேசு­கின்­ற­போது இவர்கள் தான் சரி என உடல் புல்­ல­ரிக்கும். முதலில் இவர்கள் மனங்­களை வெற்­றி­கொள்ள பேசு­வர்கள். ஆனால் இறு­தி­யாக பயங்­க­ர­வா­தத்தில் தான் முடியும் என்றேன்.

Q முடிகள் சிலிர்க்கும் என்று கூறி­யது ஏன்?

இல்லை, அவர் கூறிய ஒரு உரையை கேட்­கும்­போது முடிகள் சிலிர்க்கும். ஆனால் இறு­தி­யாகக் தீவி­ர­வா­த­மாக அமையும் என்றே கூறினேன்.

Qபயங்­க­ர­வாதம் பற்றி என்ன கூறு­கி­றீர்கள் ?

ஜிஹாத் என்­பதில் எமது நிலைப்­பாடு வேறு. ஆயுதம் ஏந்தி போரா­டு­வது ஜிஹாத் அல்ல. அதனை நாம் ஏற்­று­கொள்ள மாட்டோம். அந்­நிய மக்­களை கொள்­வது ஜிஹாத் அல்ல.

Q உங்­களின் கொள்­கையை கூறுங்கள், சஹ்­ரானின் பின்னர் தவ்ஹீத் என்றால் அச்­ச­மாக உள்­ளது. ஆகவே சிங்­கள மக்கள் மத்­தியில் குழப்பம் உள்­ளது ?

அனைத்து முஸ்­லிம்­களும் தவ்ஹீத் என்­பதை ஏற்­று­கொள்ள வேண்டும். ஒரு கடவுள் என்­பது அது. முஸ்­லிம்­க­ளுக்கு ஒவ்­வாத பல கலா­சா­ரங்கள் எமக்குள் வந்­துள்­ளன. சிலை, மந்­திர தந்­திரம் என அனைத்தும் வந்­தது. நான் ஏனைய மதங்­களை கூற­வில்லை. ஆனால் முஸ்­லிம்கள் அவற்றை நோக்கிப் பய­ணிக்க ஆரம்­பித்­தனர். திருக்­குர்ஆன் பற்றி ஏனைய மதத்­த­வ­ருக்கு தெளி­வில்லை. அவ்­வாறு இருக்­கையில் அவர்கள் தவ­றான எண்­ணக்­க­ருத்தை கொள்­வார்கள். எனவே, முஸ்லிம் இல்­லாத ஒரு­வ­ருக்கும் முஸ்லிம் பற்றி தெரிந்­து­கொள்ள வேண்டும். இதில் முரண்­பா­டுகள் வரக்­கூ­டாது என்­ப­தற்­காக நாம் இல­கு­வாக இவற்றை செய்­கின்றோம். முஸ்லிம் அல்­லா­த­வர்கள் பள்­ளிக்கு வரக்­கூ­டாது என கூறு­வது தவறு, அவர்­களும் வர­வேண்டும் என்று கூறு­வது நாம்தான். பெண்­க­ளுக்கு உரிமை கொடுக்க வேண்டும் என்று கூறு­வதும் நாம்தான். இவற்றை எல்லாம் கூறும்­போது எம்மை தவ­றாகக் கூறு­கின்­றனர்.

Q நீங்கள் ஆக்­ரோ­ஷ­மாகப் பேசு­வது இளை­ஞர்­களை தூண்­டி­வி­டும்­தானே?

நான் எங்­கேயும் ஆக்­ரோ­ஷ­மாக மக்­களை தூண்டும் பிர­சா­ரங்­களை செய்­ய­வில்லை.

Q சஹ்­ரா­னுடன் நீங்கள் இருந்­தீர்­களா?

இல்லை. எப்­போதும் அவர் எங்­க­ளுடன் இருந்­த­தில்லை. சிலர் பொய்­யான கருத்­துக்­களை கூறு­கின்­றனர். அவர் எம்­முடன் இருந்­த­தாக எந்த ஆதா­ரமும் இல்லை.

Q நீங்கள் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யதும் இல்­லையா?

இல்லை, சந்­தித்­ததும் இல்லை. பேச்­சு­வார்த்தை நடத்­தி­யதும் இல்லை. எமக்கும் அவ­ருக்கும் இடையில் கொள்கை ரீதியில் முரண்­பா­டுகள் உள்­ளன. நோன்பு விட­யங்கள், பெண்கள் குறித்த கோட்­பா­டுகள், ஜிஹாத் குறித்த கோட்­பா­டு­களில் எமக்கும் அவ­ருக்கும் இடையில் மாறு­பட்ட கருத்­துக்கள் இருந்­தன. அவர்கள் பொது­மக்­களை, மற்ற மக்­களை கொல்­ல­வேண்டும் என்ற கொள்­கையில் இருந்­தனர். முஸ்லிம் இல்­லா­த­வர்கள் கொல்­லப்­பட வேண்டும் என்று குர்ஆன் ஒரு­போதும் கோர­வில்லை. ஒரு­போதும் அதற்கு அங்­கீ­காரம் இல்லை. இவற்றை எல்லாம் நாம் எடுத்துக் கூறி­ய­போது முரண்­பட்டார்.

Q அவர் இல்­லா­விட்­டலும் வேறு எவ­ரா­வது உங்­க­ளுடன் இருக்­க­வில்­லையா?

ஹஸ்தூன் என்ற நபர் மட்டும் இருந்தார். அவ­ரது காத­லியை கூட்­டி­வந்து முஸ்லிம் மதத்­திற்கு மாற்­றினார். பின்னர் சில தொடர்­புகள் இருந்­தன. குடும்­பத்தில் சில பிரச்­சி­னைகள் இருந்­தன. அவள் ஒரு இந்துப் பெண். அவ­ளது விருப்­பத்தின் பெயரில் இஸ்­லாத்­துக்கு வந்தார். நாம்தான் மாற்­றினோம். எனினும் வீட்டில் முரண்­பா­டுகள் இருந்­தன. ஹஸ்தூன் என்­ப­வ­ருடன் வந்தே அவரை திரு­மணம் செய்­ய­வேண்டும் என்று கூறினார். எனினும் வீட்டில் பிரச்­சினை இருந்­தது. பின்னர் இரு­வ­ருக்கும் இடையில் பிரி­வேற்­பட்­டது. இஸ்­லாத்தை விட்டும் வில­கி­ய­தாக கூறி கடி­தத்தில் தெரி­வித்­தி­ருந்தார்.

Q நீங்கள் கூறும் கருத்­துக்கள் முஸ்­லிம்கள் மத்­தியில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளதே?

கொள்­கை­களை பின்­பற்­றும வழியில் முரண்­பா­டுகள் வரும். எம்­மத்­தியில் நம்­பிக்கை ஏற்­ப­டுத்­திய நபர்கள் எம்­முடன் நன்­றாகப் பழ­கு­கின்­றனர். நாம் இன­வா­தத்தை பரப்­ப­வில்லை. நாம் கூறும் கருத்­துக்­களை ஊட­கங்கள் தவ­றாக முன்­வைத்து எம்மை தவ­றாக சித்­தி­ரிக்­கின்­றது.

Q சஹ்­ரானை அனைத்து முஸ்­லிம்­களும் அறிந்­தி­ருந்­தனர் என்று கூறி­யது ஏன்?

– தவ்ஹீத் கருத்தில் சஹ்ரான் பிர­சித்­தி­யா­னவர். அதனால் தெரியும் என்று கூறினேன்.

Q இல்லை. நீங்கள் அவ்­வாறு கூறி­யது ஏன்?

கேட்கும் அனைத்தும் தலை­வர்­களும் சஹ்­ரானை தெரியும் என்று கூறினர். அர­சி­யல்­வா­திகள் அனை­வ­ரு­டனும் புகைப்­படம் எடுத்­துள்­ளனர். ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூகம் அல்ல பெரும்­பாலும் தெரியும் என்று அர்த்தம்.

Q சஹ்ரான் நல்ல பேச்­சா­ளரா?

ஆம்.

Q ஐ.எஸ். அமைப்பின் கொடி தெரி­யுமா?

ஆம். அது சாத­ர­ண­மாகத் தெரிந்த ஒன்­று­தானே.

Q வாழைச்­சே­னையில் பாரிய ஆர்ப்­பாட்டம் நடந்­தது, அதில் ஐ.எஸ் .கொடி­யுடன் வந்­த­தெல்லாம் நடந்­துள்­ளது. இது குறித்து நீங்கள் அறிந்­தி­ருக்­க­வில்­லையா?

இல்லை. எமக்கு ஆரம்­பத்தில் எமக்கு இது தெரி­ய­வில்லை. அப்­போதே தெரிந்­தி­ருந்தால் நாம் இதற்கு எதி­ராக நட­வை­டிக்கை எடுத்­தி­ருப்போம்.

Q உங்­க­ளுக்கு அனைத்தும் தெரிந்­துள்­ளது, மதப் பிரி­வுகள் குறித்து பேசு­கின்­றீர்கள், இந்த சம்­பவம் தெரி­ய­வில்­லையா? நீங்கள் கூறு­வதில் எனக்கு சந்­தேகம் உள்­ளது?

உண்­மையில் நான் அறிந்­தி­ருக்­க­வில்லை. தெரிந்­தி­ருந்தால் நான் அப்­போதே எதிர்ப்பை தெரி­வித்­தி­ருப்பேன். நான் அறிந்­தி­ருக்­க­வில்லை.

Qநீங்கள் எங்­களை விடவும் நன்­றாக சிங்­களம் பேசு­கின்­றீர்கள். ஆனால் நீங்கள் புத்­தரை விமர்­சித்­தமை குறித்து பேசிய கருத்­து­களை பார்க்­கும்­போது உங்­களை நம்ப முடி­யாது உள்­ளது. நீங்கள் இவ்­வ­ளவு அறி­வுள்ள ஆளாக இருந்தும் உங்­களின் மனதில் வரும் கருத்­துகள் அவை.

நான் பதில் கூறவா?

Q- நீங்கள் கூறு­வீர்­கள்தான். ஆனால் நம்ப முடி­யாது, நாம் குடித்­து­விட்டு கூட நபி­களை, யேசுவை விமர்­சிக்­க­மாட்டோம். நீங்கள் ஏன் புத்­தரை கீழ்த்­த­ர­மாகப் பேசி­னீர்கள். இதில்தான் சந்­தேகம் உள்­ளது.

நான் அவரை இழி­வு­ப­டுத்த நினைக்­க­வில்லை. ஒரு கார­ணியை நியா­யப்­ப­டுத்த நான் அவ்­வாறு கூறினேன். இதற்கு மேல் நான் எவ்­வாறு என்னை நியா­யப்­ப­டுத்­து­வது. அப்­போது நான் கூறி­யது சரி என்றே இருந்தேன். பின்னர் நான் ஆராய்ந்தே எனது தவறை திருத்­திக்­கொண்டேன்.

Q டென்மார்க் நாட்டில் நபி அவர்­க­ளுக்கு எதி­ராக கார்ட்டூன் வரைந்­தனர். இதனை அடுத்து பாரிய சிக்கல் வந்­தது. முஸ்லிம் சமயம் போலவே ஏனைய சமூ­கத்தை விமர்­சிக்க நீங்கள் முன்­வந்­த­போது அதன் விளை­வு­களை நீங்கள் சிந்­தித்­தி­ருக்க வேண்டும்.

ஆம், நான் செய்த தவறை திருத்­திக்­கொண்டு முன்­ன­க­ரவே நினை­கின்றேன்.

குழு:- நீங்கள் போதகராக மாறி கருத்துக்கள் தெரியாது போதிக்க வேண்டாம். உங்களின் போதனைகளை நிறுத்துங்கள்.

பதில்:- நான் 19 ஆண்டுகள் போதனை செய்துள்ளேன்.

Q நீங்கள் மதத் தலைவரா?

இல்லை, மதம் கற்பிக்கும் பிரசாரகன்.

Q நீங்கள் பிரசாரம் செய்யும்போது மக்களை உங்கள் பக்கம் மாற்றுகின்றீர்களா?

அப்படி இல்லை, என்னை பின்பற்றும் நபர்கள் வரலாம்.

Q உங்களின் பிரசாரங்களில் மாற்று மதத்தவர் உங்களை சார்ந்துள்ளனரா?

இல்லை, எனது கருத்துக்களை கேட்டு மாற்றுமதத்தவர் யாரும் இணையவில்லை.

Q மக்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் என்ன அர்த்தம்?

எமது மக்கள் தொகை கூடியுள்ளது, கல்வி கீழ் மட்டத்தில் உள்ளது. பல பிரச்சினைகள் உள்ளன. எமது சமூகத்தை சரியான பக்கம் கொண்டுசெல்ல தேவை உள்ளது. அதனையே நான் அவருக்கு கூறினேன்.

Q உங்களின் அமைப்பில் அடிப்படைவாதம் உள்ளதா?

இல்லை, அடிப்படைவாதமும் பயங்கரவாதமும் இல்லை.

Q 18வயதிற்கு மேல் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது ஏற்றுக்கொள்கிறீர்களா?

ஆம், ஆனால்……

குழு:-ஆனால் அல்ல, நீங்கள் எப்போதுமே உங்களின் கருத்துக்களில் இருந்து நழுவிக்கொள்ள முயற்சிக்கின்றீர்கள்.

Q சஹ்ரான் எவ்வாறு பயங்கரவாதியாகப் பயணிக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

சஹ்ரான் தனது முகப்புத்தகதில் ஜிஹாத் என்ற காரணிகளை கொண்டு செயற்படும் போதே எமக்கு அவரது செயற்பாடுகள் குறித்து சந்தேகம் இருந்தது. அப்போதே நாம் இதனை உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தோம்.

Qஉங்களுக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவு சம்பளம் கொடுத்தது தானே?

இல்லை.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.