அரபுக் கல்லூரிகள் சட்டவரைபு மறு ஆய்வுக்காக ஹலீமிடம்

மைத்திரி , சம்பிக்க , தலதா ,நவீனும் யோசனை முன்வைப்பு

0 719

அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீ­மினால் அமைச்­ச­ர­வையின் அங்­கீ­கா­ரத்­துக்­காக சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்த இஸ்­லா­மிய கல்வி (அரபுக் கல்­லூ­ரிகள்) சட்ட வரைபு அமைச்­ச­ர­வை­யினால் மறு ஆய்­வுக்­காக மீண்டும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்­சுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

சட்ட வரைபை மறு ஆய்வு செய்து திருத்­தங்­களைச் செய்­வ­தற்­காக ஜனா­தி­பதிமைத்­தி­ரி­பால சிறி­சேன, பெரு­ந­க­ரங்கள், மேல்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க, நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள மற்றும் பெருந்­தோட்ட கைத்­தொழில் அமைச்சர் நவீன் திசா­நா­யக்க ஆகியோர் சட்­ட­வ­ரைபில் உள்­ள­டங்­கப்­பட வேண்­டிய தங்­க­ளது பரிந்­து­ரை­களைச் சமர்ப்­பித்­துள்­ளார்கள்.

ஜனா­தி­பதி உட்­பட குறிப்­பிட்ட மூன்று அமைச்­சர்­களும் இஸ்­லா­மிய கல்வி (அரபுக் கல்­லூ­ரிகள்) கல்வி அமைச்சின் கீழ் கொண்­டு­வ­ரப்­பட வேண்­டு­மென பரிந்­து­ரைத்­தி­ருக்­கி­றார்கள். அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க அரபுக் கல்­லூ­ரி­க­ளுக்­கென (இஸ்­லா­மிய கல்வி) தனி­யான சட்­ட­மொன்று தேவை­யற்­ற­தென்றும் இஸ்­லா­மிய கல்வி சில திருத்­தங்­க­ளுடன் கல்வி அமைச்­சுடன் இணைக்­கப்­பட வேண்­டு­மெ­னவும் ஆலோ­சனை தெரி­வித்­துள்ளார்.

ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து அரபுக் கல்­லூ­ரி­களில் அடிப்­ப­டை­வாதம் போதிக்­கப்­ப­டு­வ­தா­கவும் அரபுக் கல்­லூ­ரிகள் தடை செய்­யப்­பட வேண்­டு­மெ­னவும் பெரும்­பான்மை இனத்­த­வர்­களால் கோரிக்கை விடுக்­கப்­பட்ட நிலையில் அரபுக் கல்­லூ­ரி­க­ளுக்­கென தனி­யான சட்ட மூல­மொன்­றினைத் தயா­ரிக்­கு­மாறு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீ­முக்கு பணித்­தி­ருந்தார்.

அதற்­க­மை­வாக இஸ்­லா­மிய கல்வி (அரபுக் கல்­லூ­ரிகள்) சட்ட வரைபு துரி­த­மாக தயா­ரிக்­கப்­பட்டு அமைச்­ச­ர­வையின் அங்­கீ­கா­ரத்­துக்­காக சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. இது தொடர்பில் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சின் பணிப்­பாளர் ஏ.பி.எம். அஸ்­ரபைத் தொடர்பு கொண்டு வின­வி­ய­போது, சட்டவரைபு மறு ஆய்வு செய்து திருத்தங்களைச் செய்வதற்காக அமைச்சின் அவதானிப்புக்கு அனுப்பப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் நாம் எதிர்பார்க்காத பல நல்ல விடயங்கள் உள்ளடங்கியுள்ளன என்றார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.