அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்பதா? மு.கா.உயர்பீடம் கூடி ஆராய்வு

0 659

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் அர­சியல் உயர்­பீடம் கட்­சியின் அர­சியல் கள­நி­லைமை தொடர்பில் நேற்று முன்­தினம் இரவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்­கீமின் தலை­மையில் ஒன்­று­கூடி கலந்­து­ரை­யா­டி­யது. இக்­கூட்டம் முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்­கீமின் இல்­லத்தில் நடை­பெற்­றது. கூட்­டத்தில் கொழும்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த அர­சியல் உயர்­பீட உறுப்­பி­னர்கள் கலந்­து­கொண்­டனர்.

கூட்­டத்தில், அமைச்சுப் பத­வி­களை இரா­ஜி­னாமா செய்து கொண்­டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் உறுப்­பி­னர்கள் மீண்டும் அமைச்­சுப்­ப­த­வி­களைப் பொறுப்­பேற்­பதா? இல்­லையா? என்­பது தொடர்பில் நீண்ட நேரம் ஆலோ­சிக்­கப்­பட்­டது.

மீண்டும் அமைச்சுப் பத­வி­களை பொறுப்­பேற்­பது தொடர்பில் ஆத­ர­வா­கவும் எதி­ரா­கவும் கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டன. அர­சாங்­கத்­திடம் முன்­வைக்கப்பட்­டுள்ள முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னைகள் தொடர்­பான கோரிக்­கைகள் நிறை­வேற்­றப்­படும் வரை அமைச்சுப் பொறுப்­பு­களை ஏற்­றக்­கூ­டாது என்று சிலரும், அமைச்சுப் பத­வி­களை ஏற்­க­வேண்டும் என்று சிலரும் வாதங்­களை முன்­வைத்­தனர்.

பெரும்­பான்மை சமூ­கத்தைப் பகைத்­துக்­கொள்­ளாது நகர்­வு­களை முன்­னெ­டுக்க வேண்டும் என ஒரு தரப்­பினர் கருத்துத் தெரி­வித்­தனர். முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு உத்­த­ர­வாதம் வழங்­கும்­வரை அமைச்சுப் பத­வி­களை ஏற்­கக்­கூ­டாது என்­பதே பெரும்­பா­லா­னோரின் நிலைப்­பா­டாக இருந்­தது.

அர­சியல் உயர்­பீட கூட்டம் தீர்­மானம் ஒன்று எட்­டப்­ப­டாத நிலையில் நிறை­வுற்­ற­தா­கவும் தொடர்ந்தும் கலந்­து­ரை­யா­டல்­களை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தவிசாளரும், அரசியல் உயர்பீட உறுப்பினருமான எம்.நயீமுல்லாஹ் தெரிவித்தார்.
-Vidivellli

Leave A Reply

Your email address will not be published.