09 ஒன்றிணைய வேண்டுமென நிதியமைச்சர் மங்கள சமரவீர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“அனைத்து உயிர்கள் மீதான அமைதி மற்றும் அன்பு தொடர்பான எமது சிறந்த தத்துவத்தை தலிபான்மயப்படுத்துவதற்கு எதிராக உண்மையான பௌத்தர்கள் தற்போது ஒன்றிணைய வேண்டும். மற்றொரு மனிதரை கல்லெறிந்து கொல்லுமாறு கூறுவதை எந்தவொரு பௌத்தரும் ஏற்றுக்கொள்ள முடியாது” என நிதியமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டரில் நேற்று தெரிவித்துள்ளார்.
அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரான வரக்காகொட ஞானரத்ன தேரர் முஸ்லிம்களுக்கு எதிராக கருத்து வெளியிட்டிருந்த நிலையில், அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மக்கள சமரவீர இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரான வரக்காகொட ஞானரத்ன தேரர் கண்டி, யட்டிநுவர, தியகெலினாவ கித்சிரிமெவன் ரஜமகா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையில் “சிங்களவர்கள் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களைப் பகிஷ்கரியுங்கள். முஸ்லிம் கடைகளுக்கு செல்லாதீர்கள். அந்தக் கடைகளில் உண்ணவோ, அருந்தவோ வேண்டாம். முஸ்லிம்கள் சிங்கள மக்களை அழிப்பதற்கு எடுத்தசெயற்பாடுகள் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. சிங்கள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிங்கள பெண்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சை செய்த முஸ்லிம் டாக்டர் ஒருவர் தொடர்பில் ஊடகங்கள் பகிரங்கப்படுத்தியுள்ளன. அந்த முஸ்லிம் டாக்டரை கல்லெறிந்து கொல்ல வேண்டுமென பலர் என்னிடம் கூறினார்கள். இவ்வாறான இனத்துரோகிகளை சுதந்திரமாக விடக்கூடாது என சீலம் இருக்கும் (சில்) பெண்கள் என்னிடம் கூறினார்கள். அவரை கல்லால் அடித்துக்கொல்ல வேண்டும் என்றார்கள். நான் அப்படிக்கூற மாட்டேன். ஆனால் செய்யப்பட வேண்டியது அதுதான்” எனவும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் தெரிவித்திருந்தார்.
இக்கருத்து தொடர்பில் இதுவரை சிங்கள பௌத்த சமூகத்தின் தலைவர்கள் எவரும் கண்டனங்களை தெரிவிக்காத நிலையிலேயே, நிதியமைச்சர் மங்கள சமரவீர மாத்திரம் இதற்கு பதிலளித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, முஸ்லிம் அமைச்சர்களை இராஜினாமா செய்ய வலியுறுத்தி அதுரலியே ரதன தேரர் முன்னெடுத்த உண்ணாவிரதம் குறித்தும் குறித்த உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்த கத்தோலிக்க பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் மீதும் அவர் விமர்சனங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli