தேடப்பட்ட காலத்தில் காத்தான்குடிக்கு ரில்வான் இரகசியமாக வந்துள்ளார் சஹ்ரான் வந்ததாக தகவலில்லை

காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.பி கஸ்தூரி ஆராச்சி சாட்சியம்

0 677

சஹ்ரான், ரில்வான் மற்றும் ஆமி மொய்தீன் ஆகி­யோ­ருக்கு  எதி­ராகப் பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்டு அவர்கள் தேடப்­பட்ட காலத்தில் ரில்வான் இர­க­சி­ய­மாக வந்து சென்­றுள்ளார், ஆனால் சஹ்ரான் வந்­தாரா என்ற தகவல் எவையும் கிடைக்­க­வில்­லை­யென  காத்­தான்­குடி பொலிஸ் பொறுப்­ப­தி­காரி எம்.பி கஸ்­தூரி ஆராச்சி தெரி­வித்தார். சஹ்ரான் குழு­வுடன் தொடர்­பு­பட்­ட­தாகக் கைது­செய்­யப்­பட்ட  13 நபர்­களும் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுடன் நேர­டி­யாகத் தொடர்பில் இருந்­த­வர்கள் என்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது எனவும் அவர் சாட்­சி­ய­ம­ளிக்­கையில் கூறினார்.

ஈஸ்டர் தாக்­குதல் குறித்து விசா­ரணை நடத்தி பாரா­ளு­மன்­றத்தில் அறிக்கை சமர்ப்­பிக்க நிய­மிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு நேற்று காத்­தான்­குடி பொலிஸ் பொறுப்­ப­தி­காரி எம்.பி கஸ்­தூரி ஆராச்­சி­யிடம் விசா­ரணை நடத்­தி­யது. இதன்­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் கூறி­ய­தா­வது,

நான் 2017 ஓகஸ்ட் மாதம் காத்­தான்­குடி பிர­தேச பொறுப்­ப­தி­கா­ரி­யாக நிய­மிக்­கப்­பட்டேன். எனது பொறுப்­பி­லி­ருந்த  காலத்தில் காத்­தான்­கு­டியில் எந்­த­வொரு பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களோ அல்­லது எந்த அடிப்­ப­டை­வாத செயற்­பா­டு­களோ இடம்­பெ­ற­வில்லை. மிகவும் அமை­தி­யா­கவே இருந்­தது. இன்றும் அவ்­வாறே இருக்­கின்­றது. எனினும் 2017ஆம் ஆண்­டுக்கு முன்னர் காத்­தான்­கு­டியில் மிகவும் மோச­மான நிலை­மைகள் இருந்­த­தாக நான் அறிந்­து­கொண்டேன். குறிப்­பாக சஹ்ரான் குழு­வினர் ஒவ்­வொரு வெள்­ளிக்­கி­ழ­மையும் பள்­ளி­வா­சலில் தொழுகை முடிந்­த­பின்னர் அடா­வடி நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டனர் என்ற முறைப்­பாடு இருந்­தது. எனினும் நான் இருந்த காலத்தில் சஹ்ரான், ரில்வான் மற்றும் ஆமி மொய்தீன் ஆகியோர் ஊரில் இருக்­க­வில்லை. அதற்கு முன்னர் இடம்­பெற்ற கல­வர செயற்­பா­டு­களில் இந்தக் குழு­வுடன் தொடர்­பு­பட்ட 13 நபர்கள் கைது­செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தனர். பின்னர் குண்டு வெடிப்பு சம்­பவம் இடம்­பெற்ற பின்னர் இந்த நபர்­களில் இருவர் உயி­ரி­ழந்­தனர். அதில் சஹ்­ரானின் தந்தை மற்றும் சகோ­தரர் இருந்­தனர். ஏனைய நபர்­களும் இந்தப் பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலில் தொடர்­பு­பட்­ட­வர்கள் என்­பதும் தெரி­ய­வந்­தது. அவர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்­க­ளுக்கு மேல­தி­க­மாக 64  பேர் சந்­தே­கத்தின் பெயரில் கைது­செய்­யப்­பட்­டனர்.

சஹ்ரான் மற்றும் ஏனைய இருவர் மீதான பிடி­யாணை இருந்­த­துடன் நீதி­மன்ற விசா­ர­ணைகள் இருந்­தன. ஆனால் இவர்கள் மூவ­ரையும் கண்­ட­றிய முடி­ய­வில்லை. பல சந்­தர்ப்­பங்­களில் இவர்­களை தேடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. ஆனால் இவர்கள் சிக்­க­வே­யில்லை. தடுப்­புக்­கா­வலில் இருந்து 13 பேரும் பின்னர் ஒரு வரு­டத்தில் பிணையில் விடு­விக்­கப்­பட்­டனர். மாதம் ஒரு­முறை பொலிஸ் நிலை­யத்­திற்கு வந்து கையொப்­ப­மிட வேண்டும். அதனை தவ­றாது அவர்கள் செய்­தனர். இவர்கள் கடந்த காலங்­களில் இஸ்­லாத்­திற்கு எதி­ரான, அதேபோல் ஏனைய மதங்­களை இழி­வு­ப­டுத்தும் செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டி­ருந்­தனர். அத்­துடன் சஹ்ரான் இவர்­களை வழி­ந­டத்­தி­யி­ருந்­த­துடன், அவர் மௌல­வி­யல்ல என்ற முறைப்­பா­டுகள் ஆரம்­பத்தில் பதி­வா­கி­யி­ருந்­தன. மேலும் இவர்­க­ளுடன் பொலிஸ் அதி­கா­ரிகள் எவரும் தொடர்பில் இருந்­தார்­களா என்ற காரணி எனக்குத் தெரி­யாது. ஆனால் இருந்­தி­ருக்க வாய்ப்­பில்லை. ஏனெனில் இவர்கள் தொடர்ச்­சி­யாக தேடப்­பட்டு வந்த நபர்கள். எனவே அதற்­கான வாய்ப்­புகள் இருக்­காது என்றே கரு­து­கிறேன்.

மேலும் 17ஆம் திகதி மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்­பி­டித்­த­தாக முறைப்­பாடு ஒன்று கிடைக்­கப்­பெற்­றது. உரிய காணியின் உரி­மை­யாளர் இந்த முறைப்­பாட்டை செய்­தி­ருந்தார். ஆனால் அங்கு சென்று பார்த்­த­போது அது தீப்­பி­டிக்­க­வில்லை வெடித்து என்­பது தெரிந்­தது. இதன் பின்னர்  விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. எனினும் இதில் பயன்­ப­டுத்­திய இர­சா­யன வெடிப்­பொருள் என்ன என்­பது தெரி­ய­வில்லை. அத்­துடன் இவர்கள் ஆரம்­பத்­தி­லி­ருந்து வாக­னங்­களை வாட­கைக்கு பெற்றே பயன்­ப­டுத்­தி­யுள்­ளனர். ஆகவே அது குறித்து சரி­யாகத் தக­வல்­பெற  முடி­ய­வில்லை. அதேபோல் காத்­தான்­கு­டியில் இவர்­களின் பயிற்சி முகாம் இருந்ததாகக் கூறினாலும் அது பயிற்சி முகாம் என்ற உறுதியான தகவல் இல்லை. எனினும் இந்த நிலையத்தின் உரிமையாளர் சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். ரில்வான் இவரை சந்தித்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.  இருப்பினும் பிடியாணை காலத்தில்  ரில்வான் இரகசியமாக வந்து சென்றார் என்று தெரிகின்றது. ஆனால் சஹரான் வந்தாரா என்று தெரியவில்லை என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.