அடிப்­ப­டை­வா­திகள் குறித்து மேல­திக விசா­ர­ணை­களை நடாத்­துங்கள்

பொலிஸ்மா அதி­ப­ருக்கு சட்­டமா அதிபர் உத்­த­ரவு

0 606

தேசிய தௌஹீத் ஜமாஅத் அடிப்­ப­டை­வாத அமைப்பு மற்றும் அதன் உறுப்­பி­னர்­களின் செயற்­பா­டுகள் தொடர்பில், மேல­திக  விசா­ர­ணை­களை  முன்­னெ­டுக்­கு­மாறு சட்­டமா அதிபர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி தப்­புல டி லிவேரா, பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்­ர­ம­ரத்­ன­வுக்கு உத்­த­ர­விட்­டுள்ளார்.  நேற்­றைய தினம் அவர்  பதில் பொலிஸ்மா அதி­ப­ருக்கு அனுப்பி வைத்­துள்ள  விசேட ஆலோ­சனை கடி­தங்கள் இரண்டு ஊடாக அவர் இதனை தெளி­வு­ப­டுத்­தி­யுள்ளார்.

அத்­துடன் தொடர் தற்­கொலை தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து கடந்த மே 13 ஆம் திகதி வெளி­யி­டப்பட்ட 2123/2, 2123/3 ஆகிய இரு அதி­வி­சேட வர்த்­த­மா­னிகள் ஊடாக தடை செய்­யப்­பட்ட ஜமா­அத்தே மில்­லத்துல் இப்­ராஹீம், விலாயத் அல் ஸெய்­லானி ஆகிய அடிப்­ப­டை­வாத அமைப்­புக்கள் தொடர்­பிலும் உடன் விசா­ர­ணை­களை ஆரம்­பிக்­கு­மாறு சட்­டமா அதிபர் பணித்­துள்ளார். அந்த அமைப்­புக்கள் மற்றும் அதன் உறுப்­பி­னர்­களின் செயற்­பா­டுகள் தொடர்பில் இதன்­போது விசேட கவனம் செலுத்தி விசா­ரிக்­கு­மாறு ஆலோ­சனை வழங்­கி­யுள்­ள­தாக சட்­டமா அதி­பரின் செய்தித் தொடர்­பாளர் அரச சட்­ட­வாதி நிஷாரா ஜய­ரத்ன விடி­வெள்ளிக்குத் தெரி­வித்தார்.

குறிப்­பாக காத்­தான்­கு­டியை மைய­ப்ப­டுத்தி செயற்­பட்ட தேசிய தெளஹீத் ஜமாத் எனும்  அடிப்­ப­டை­வாத அமைப்பு தொடர்பில் ஏற்­க­னவே விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில்,  கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி சாய்ந்­த­ம­ருதில் தற்­கொலை குண்டு­களை வெடிக்­கச்­செய்து அந்த அமைப்பின் முக்­கி­யஸ்­தர்கள் சிலர் உயி­ரி­ழந்­துள்ள நிலை­யி­லேயே, மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க சட்­டமா அதிபர் ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.

இதே­வேளை, மாவ­னெல்ல புத்தர் சிலை­களை சேதப்­ப­டுத்­தி­யமை, ஏப்ரல் 21 குண்­டுத்­தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­களம் மற்றும் பயங்­க­ர­வாத விசா­ரணைப் பிரிவு ஆகி­யன தற்­போது வெவ்­வே­றாக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்துச் செல்­வதை சட்­டமா அதி­ப­ருக்கு அறி­யக்­கி­டைத்­துள்­ள­தாக சட்­டமா அதி­பரின் செய்தித் தொடர்­பாளர்  அரச சட்­ட­வாதி நிஷாரா ஜய­ரத்ன சுட்­டிக்­காட்­டி­ய­துடன், அந்த விசா­ர­ணைகள் மற்றும் அதன் தற்­போ­தைய நிலைமை தொடர்பில் உட­ன­டி­யாக அறிவிக்குமாறு, பதில் பொலிஸ்மா அதிபர், சி.ஐ.டி., சி.ரி.ஐ.டி. ஆகியவற்றின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்  மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோருக்கும் பிரதியொன்றுடன் அறிவித்துள்ளதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.