ஹிஸ்புல்லாஹ் ரிஷாட் பதியுதீன் அசாத் சாலியிடம் விசாரணைகளுக்கு 2 பொலிஸ் குழுக்கள்

பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு

0 772

முன்னாள் ஆளு­நர்கள் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ், அசாத் சாலி மற்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் ஆகி­யோ­ருக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து விசா­ர­ணை­களை மேற்­கொள்­­வ­தற்­காக இரு குழுக்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளன.

பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­களின் பின் பல குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு உள்­ளா­கி­வந்த முன்னாள் ஆளு­நர்கள் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ், அசாத் சாலி மற்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன்

ஆகியோர் குறித்த முறைப்­பா­டுகள் தொடர்பில் பொலிஸ் தலை­மை­ய­கத்தால் மூவ­ர­டங்­கிய குழு­வொன்று கடந்த 4 ஆம் திகதி நிய­மிக்­கப்­பட்­டது. இந்தக் குழு­விற்கு இவர்­க­ளுக்கு எதி­ராக 27 முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­ற­தாக பொலிஸ் தலை­மை­யகம் தெரி­வித்­தி­ருந்­தது.

இந்­நி­லையில் இவர்கள் தொடர்­பாக முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுகள் குறித்து,  விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்­காக இரு குழுக்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும்,  இந்தக் குழுக்­க­ளிலே குற்றப் புல­னாய்வு மற்றும் நிதி குற்ற விசா­ரணை பிரிவின் அதி­கா­ரிகள் உள்­ள­டங்­கு­வா­தா­கவும் தெரி­ய­வந்­துள்­ளது.

இதே­வேளை, இந்த முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு எதி­ராக  முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுகள் குறித்த விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­துடன், இந்த விடயம் தொடர்பில் சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­ன­ரிடம் சாட்­சி­யங்கள் பெற்றுக் கொள்­ளப்­பட்டு வரு­கின்­ற­மையும் குறிப்­பி­ட­தக்­கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.