அட்மிரல் ரவீந்திர இன்று சி.ஐ.டி.க்கு அழைப்பு

0 862
  • எம்.எப்.எம்.பஸீர்

வெள்ளை வேனில் 5 மாணவர் உள்­ளிட்ட 11 பேரை கடத்­திய விவ­கா­ரத்தில் பிர­தான சந்­தேக நபர் நேவி சம்­பத்­துக்கு அடைக்­கலம் கொடுத்­தமை தொடர்பில் குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளா­கி­யுள்ள முப்­ப­டை­களின் அலு­வ­லக பிர­தானி அட்­மிரல் ரவீந்திர விஜே­கு­ண­ரத்ன அதுகுறித்த விசா­ர­ணை­களின் நிமித்தம் இன்று சி.ஐ.டி.க்கு அழைக்­கப்­பட்­டுள்ளார்.

இன்று காலை 10.00 மணிக்கு சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவில் அவரை ஆஜ­ரா­கு­மாறு  அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக சி.ஐ.டி. தெரி­வித்­தது.

ஐந்து  மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்­திச்­சென்று சட்­ட­வி­ரோ­த­மாகத் தடுத்­து­வைத்து கப்பம் பெற்­றமை மற்றும்  காணா­ம­லாக்­கி­யமை தொடர்பில்  பிர­தான சந்­தே­க­ந­ப­ரான நேவி சம்பத் எனப்­படும் கடற்­படை புல­னாய்வுப் பிரிவின் முன்னாள் லெப்­டினண்ட் கொமாண்டர் ஹெட்­டி­யா­ராச்சி முதி­யன்­ச­லாகே சந்­தன பிரசாத் ஹெட்­டி­யா­ராச்­சிக்கு சட்­டத்தின் பிடி­யி­லி­ருந்து தப்பி மறைந்­தி­ருக்க உத­வி­யமை தொடர்பில் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால்  முன்னாள் கடற்­படை தள­ப­தியும் தற்­போ­தைய முப்­ப­டை­களின் அலு­வ­லக பிர­தா­னி­யு­மான அட்­மிரல் ரவீந்திர விஜே­கு­ண­ரத்ன  மீது குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் அவரை கைது செய்ய நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ள நிலையிலேயே இன்று அவர் இவ்வாறு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.