சூறையாடப்படும் சூடான்

0 763

இன்று சர்­வ­தே­சத்தின் முழுப்­பார்­வையும் சூடான் என்ற நாட்டின் மீதே படிந்­துள்­ளது. அதற்குக் காரணம் அந்த நாட்டில் இடம்­பெறும் தொடர்ச்­சி­யான போராட்­டங்­களும் மக்­க­ளுக்கு இழைக்­கப்­படும் அநீ­தி­க­ளு­மே­யாகும்.

சூடான் நாட்டை சுமார் 30 வரு­டங்­க­ளாக ஒமர் அல் பஷீர் ஆட்சி செய்து வந்தார். ஒமரின் ஆட்­சியால் அதி­ருப்தி அடைந்த மக்கள் நாடு முழு­வதும் ஒமரை பதவி வில­கு­மாறு கூறி ஆர்ப்­பாட்­டங்­களை கட்­ட­விழ்த்து விட்­டனர். அதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் இரா­ணு­வத்தால் ஒமர் கைது செய்­யப்­பட்­ட­துடன் பதவி கவிழ்க்­கப்­பட்டார். இதனால் 1989 இல் ஒமர் தொடங்கி வைத்த 3 தசாப்த ஆட்சி முடி­வுக்கு வந்­தது.

ஒமரின் பதவி கவிழ்ப்பைத் தொடர்ந்து சூடானின் ஆட்­சியை இரா­ணுவம் கைப்­பற்­றி­யது. ஆட்­சியின் தலை­வ­ராக சூடான் இரா­ணுவ சபையின் பிரதித் தலைவர் ஜெனரல் முஹம்மத் ஹம்தான் டகாலோ நிய­மிக்­கப்­பட்டார்.

எனினும் ஒமர் ஆட்சி செய்­த­போது அவ­ரது ஆட்­சிக்கு எந்­த­ளவு எதிர்ப்பு எழுந்­ததோ அதே அளவு எதிர்ப்பு இரா­ணுவ சபையின் ஆட்­சிக்கு எதி­ரா­கவும் எழுந்­தது. மக்­க­ளாட்சி நிலை நாட்­டப்­பட வேண்டும் என சூடான் மக்கள் தடை­களை தாண்டி போரா­டி­வ­ரு­கின்­றனர். இந்தப் போராட்­டத்தை அடக்க இரா­ணுவம் வன்­மு­றை­க­ளையும் மனி­தா­பி­மா­ன­மற்ற அடக்­கு­மு­றை­க­ளையும் கட்­ட­விழ்த்­து­விட்­டுள்­ளமை சர்­வ­தே­சத்தின் கவ­ன­யீர்ப்பைப் பெற்­றுள்­ளது.

நடந்­தது என்ன?

சூடான் மக்கள் இரா­ணு­வத்­து­டைய ஆட்­சியில் திருப்­தி­ய­டை­ய­வில்லை. மக்­களை மக்­களே ஆட்சி செய்யும் ஜன­நா­யக வழி­யொன்றை மக்கள் விரும்­பினர். ஜன­நா­யக ஆட்­சி­யொன்றை தோற்­று­விப்­ப­தாயின் அதற்கு 3 வருட கால அவ­காசம் தேவை என இரா­ணுவத் தரப்பில் இருந்து ஜன­நா­யக ஆட்­சியை கோரும் குழுவின் பிர­தி­நி­தி­க­ளிடம் தெரி­விக்­கப்­பட்­டது. என்ற போதிலும் இரா­ணுத்தின் இந்த முடி­வுக்கு மக்கள் எதிர்ப்பு தெரி­வித்த வண்­ண­மே­யுள்­ளனர்.

மக்­க­ளாட்­சிதான் வேண்டும் என போராட்­டக்­கா­ரர்கள் விடாப்­பி­டி­யாக இருந்­தார்கள். போராட்­டத்தின் உச்­ச­கட்­ட­மாக இரா­ணு­வத்தின் தலை­மை­யகம் முன்பு பெரு­ம­ள­வி­லான மக்கள் போராட்­டத்தில் ஈடு­பட்­டனர். அதனைத் தொடர்ந்து மக்­க­ளாட்­சிக்கு ஆத­ர­வான பிர­தி­நி­தி­க­ளிடம் பேச்­சு­வார்த்தை நடத்த இரா­ணுவம் இசைந்­தது. இந்த பேச்­சு­வார்த்தை முடிவில் 3 வருட காலத்தில் தேர்­தலை நடத்த இரு தரப்பும் ஒப்­புக்­கொண்­டது.

இந்­நி­லை­யில்தான் கடந்த திங்­கட்­கி­ழமை தினத்­தன்று நிரா­யு­த­பா­ணி­க­ளாக போராட்டம் நடத்திக் கொண்­டி­ருந்த பொது மக்கள் மீது ஆயுதம் தாங்­கிய பாது­காப்பு படை­யினர் துப்­பாக்கிச் சூடு நடத்­தி­யுள்­ளனர். இதில் 100 பேர்­வரை உயி­ரி­ழந்­துள்­ள­தாக உத்­தி­யோ­க­பூர்­வ­மற்ற தக­வல்கள் தெரி­விக்­கின்­ற­போதும் 46 பேரை தாம் கொன்­றுள்­ள­தாக சூடான் இரா­ணுவம் ஒப்புக் கொண்­டுள்­ளது. மற்­று­மொரு தக­வலில் 500 பேர் வரை கொல்­லப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

இந்தத் துப்­பாக்­கிச்­சூட்டை தொடர்ந்து ஜெனரல் முஹம்மத் ஹம்தான் டகாலோ ஒப்­பந்­தங்­களை இரத்துச் செய்­வ­தாக அறி­வித்­துள்ளார். மேலும் எதிர்­வரும் 9 மாத கால இடை­வெ­ளியில் தேர்தல் நடத்­தப்­படும் எனவும் தெரி­வித்­துள்ளார். கடந்த புதன்­கி­ழ­மை­யன்று எந்­த­வித நிபந்­த­னை­க­ளு­மின்றி போராட்­டக்­கு­ழு­வுடன் பேச்­சு­வார்த்தை நடத்த புர்கான் இணங்­கி­ய­போதும் போராட்டக் குழு பேச்­சு­வார்த்தை நடத்த மறுத்­துள்­ளது.

துப்­பாக்கிச் சூட்டில் பெரு­ம­ள­வி­லான மக்கள் உயி­ரி­ழந்­ததால் மக்கள் இரா­ணு­வத்தின் மீது கடுங்­கோ­பத்­துடன் இருக்­கி­றார்கள். இத­னா­லேயே போராட்­டங்­க­ளுக்கு தலைமை தாங்­கிய ஸ்பா எனும் அமைப்பின் பேச்­சாளர் அம்ஜத் பரீட் “சூடான் மக்கள் பேச்­சு­வார்த்­தைக்கு தயா­ராக இல்லை” எனத் தெரி­வித்தார். தற்­கா­லி­க­மாக ஆட்சி நடத்தும் இரா­ணுவ கவுன்­ஸி­லா­னது மக்­களைக் கொல்­கி­றது. அவர்­க­ளோடு பேச்­சு­வார்த்தை நடத்த மக்கள் தயா­ராக இல்லை என அவர் ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்தார்.

இதற்கு பதி­ல­ளித்­துள்ள இரா­ணுவம் “நாட்டில் குழப்பம் ஏற்­பட நாம் ஒரு போதும் அனு­ம­திக்­க­மாட்டோம். நாட்டில் சட்ட திட்­டங்­களை மக்கள் மதித்து நடப்­பது உறுதி செய்­யப்­பட வேண்டும். அதற்­கான நட­வ­டிக்­கையை நாம் எடுப்போம்” என தெரி­வித்­துள்­ளது.

கார்டூம் நகரில் மக்கள் இவ்­வாறு கொல்­லப்­ப­டு­வதும் சித்­தி­ர­வதை செய்­யப்­ப­டு­வதும் இது முதல் தட­வை­யல்ல. ஏப்­ரலில் இரா­ணுவம் ஆட்­சியை பொறுப்­பேற்­றது முதல் இந்த இன்­னல்­களை மக்கள் அனு­ப­வித்து வரு­கின்­றனர். துணை இரா­ணுவப் படை­யினர் பொது மக்­க­ளு­டைய வசிப்­பி­டங்­க­ளுக்குச் சென்று அங்­குள்ள மக்­களை சுட்டு வீழ்த்­தி­யுள்­ளனர். மேலும் கத்தி, அரிவாள் போன்ற ஆயு­தங்­களால் அங்­கங்­களை துண்­டாக்­கி­யு­முள்­ளனர்.

நைல் நதியில் சட­லங்கள்

சூடான் இரா­ணு­வத்­தினால் சிறு­வர்கள், பெண்கள் மற்றும் ஆண்கள் என 100 இற்கும் மேற்­பட்­ட­வர்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர். கடந்த வாரம் புதன்­கி­ழ­மை­யன்று கார்டூம் நக­ருக்கு விஜயம் செய்த வைத்­தியர் குழு­வொன்று வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யின்­படி நைல் நதியில் இருந்து 40 சட­லங்கள் மீட்­கப்­பட்­டுள்­ளதை உறுதி செய்­துள்­ளது.

குறித்த 40 சட­லங்­களும் வைத்­தி­ய­சா­லையில் பிரேத பரி­சோ­த­னை­க­ளுக்­காக வைக்­கப்­பட்­டுள்ள நிலையில் உயி­ரி­ழந்த அனை­வரும் போராட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்­கள்தான் என்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. தமது உரி­மைக்­காக போரா­டிய மக்­களை அர­சாங்­கமே வெட்டி ஆற்றில் வீசி­யுள்ள சம்­பவம் சர்­வ­தே­சத்தை அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யுள்­ளது. கொல்­ல­பட்­ட­வர்­களுள் பலர் நீரில் மூழ்­க­டிக்­கப்­பட்டும் வெட்­டியும் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.

பாதிக்­கப்­பட்ட மக்கள்

மக்­க­ளாட்சி வேண்டும் என போராட்டம் நடத்­திய ஒரே கார­ணத்­துக்­காக சூடானில் மக்கள் கொன்று குவிக்­கப்­பட்­டுள்­ளார்கள். பலர் அங்­கங்கள் துண்­டாக்­கப்­பட்ட நிலையில் படு­கா­ய­ம­டைந்­துள்­ளார்கள். இத்­தனை இன்­னல்­களை அனு­ப­வித்த பின்­னரும் தமக்கு மக்­க­ளாட்சி வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் இருந்து சூடா­னி­யர்கள் தள­ராமல் இருக்­கி­றார்கள்.

சூடான் இரா­ணு­வத்­தினர் பொது மக்­களை அடித்துக் காயப்­ப­டுத்தும் காணொ­லிகள் சமூக வலைத்­த­ளங்­களில் வைர­லாகி பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. மிரு­கத்­த­ன­மான முறையில் தாக்­கப்­பட்டு வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள ஒருவர் தெரி­வித்த கருத்­தின்­படி சுமார் 10 பேரை அவர் முன்­னி­லையில் இரா­ணு­வத்­தினர் கொன்­றுள்­ளார்கள்.

மேலும் ரமழான் காலத்தில் நோன்­பி­ருந்த ஒருவர் கடு­மை­யாக கொடு­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார். நோன்­பா­ளி­யான அவர், கழிவு நீரை குடிக்­கும்­படி நிர்­பந்­திக்­கப்­பட்­டுள்ளார். இதே­போல பலர் துன்­பு­றுத்­தப்­பட்­ட­தா­கவும் அவர் தெரி­வித்தார். மேலும் அவ­ரு­டைய தலை­மு­டியை தீயினால் எரித்­து­முள்­ளனர்.

“நாங்கள் வீட்டை விட்­டு­விட்டு வெளியே வர முடி­யாத நிலை­மை உள்­ளது. ஏன் என்றால் நாம் வெளியே வந்தால் பாது­காப்பு படை­யி­னரால் கொல்­லப்­ப­டுவோம்” என தனது பெயரை வெளி­யிட விரும்­பாத ஒருவர் தெரி­வித்தார்.

மக்கள் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெறு­வதை தடுக்கும் வகையில் கார்டூம் நகரில் உள்ள வைத்­தி­ய­சா­லை­க­ளையும் மருத்­துவ நிலை­யங்­க­ளையும் பாது­காப்புப் படை­யினர் மூடி வரு­வ­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

“அவர்கள் மக்­களை மிரட்­டு­கி­றார்கள். ஆயு­தங்­களை பிர­யோ­கிக்­கி­றார்கள். நாங்கள் பாது­காப்­பாக உண­ர­வில்லை. எங்களுக்கு பாதுகாப்பு படை மீது நம்பிக்கையும் இல்லை” என கார்டூமில் வசிக்கும் சுலைமா என்ற பெண் தெரிவித்தார்.

ஐ.நா. கண்டனம்

சூடானில் இராணுவத்தினரால் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டதற்கு எதிராக ஐ.நா. வின் பாதுகாப்பு அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.

மனிதாபிமானமற்ற முறையில் இவ்வாறு மக்கள் கொல்லப்பட்டமையானது மனித உரிமை மீறல் என ஐ.நா. தெரிவித்துள்ளது. மேலும் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளும் சூடானுக்கு எதிராக இதேபோன்ற கண்டனத்தை தெரிவித்துள்ளன.

சூடான் இராணுவம் சுமார் 100 இற்கும் மேற்பட்டவர்களை கொன்றுள்ளதாக ஐ.நா. குற்றம் சுமத்தியது என்ற போதிலும் சூடான் இராணுவம் இந்தக் குற்றச்சாட்டை மறுத்து வருவதுடன் 46 பேரை தாம் கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.