நாட்டின் நிலைமைகள் காரணமாக ஹஜ் யாத்திரையிலிருந்து 100 பேர் இதுவரை விலகல்

0 783

ஏப்ரல் மாதம் இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் மற்றும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்­க­ளை­ய­டுத்து நாட்டில் அசா­தா­ரண நிலைமை உரு­வா­கி­யுள்­ளதால் இவ்­வ­ருட ஹஜ் யாத்­தி­ரைக்கு உறுதி செய்­தி­ருந்த விண்­ணப்­ப­தா­ரி­களில் இது­வரை சுமார் 100 பேர் தங்கள் ஹஜ் யாத்­தி­ரையை இவ்­வ­ருடம் இரத்துச் செய்­துள்­ள­தாக அரச  ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி எம்.ரி. சியாத் தெரி­வித்தார்.

இவ்­வ­ருட ஹஜ் யாத்­தி­ரையை இரத்துச் செய்­துள்­ள­மை­யை­ய­டுத்து ஏற்­பட்­டுள்ள வெற்­றி­டங்­க­ளுக்கு 25 ஆயிரம் ரூபா பதிவுக் கட்­டணம் செலுத்­தி­யுள்ள, ஏற்­க­னவே இவ்­வ­ருட ஹஜ் பய­ணத்­திற்கு தெரிவு செய்­யப்­ப­டாத விண்­ணப்­ப­தா­ரிகள் இணைத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். எனவே 25 ஆயிரம் ரூபா பதி­வுக்­கட்­டணம் செலுத்­தி­யுள்ள இவ்­வ­ருட ஹஜ் கட­மைக்­காக தெரிவு செய்­யப்­ப­டாத ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் உட­ன­டி­யாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பா­ளரைத் தொடர்பு கொள்­ளு­மாறு வேண்­டப்­ப­டு­கி­றார்கள் என்றும் அவர் கூறினார்.

மேலும் அவர் கருத்துத் தெரி­விக்­கையில், அவ்­வாறு தொடர்­பு­கொள்ளும் விண்­ணப்­ப­தா­ரிகள் வெற்­றி­டங்­க­ளுள்ள ஹஜ் முக­வர்­க­ளு­டனே இணைத்துக் கொள்­ளப்­ப­டு­வார்கள்.

ஹஜ் கட­மையை மேற்­கொள்­வ­தற்கு முன்­வரும் ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் வெற்­றி­டங்­க­ளுள்ள முகவர் நிலை­யங்­களின் விப­ரங்­களை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்­ளலாம்.

வெளி­நா­டு­களில் கடமை புரியும் இலங்­கை­யரில் ஒரு தொகை­யி­னரும் தங்­க­ளது ஹஜ் பய­ணத்தை இவ்­வ­ருடம் நிறுத்தி வைக்­கு­மாறு கோரி­யுள்­ளனர். அவர்கள் இலங்­கைக்கு வருகை தந்து இங்­கி­ருந்தே ஹஜ் யாத்­தி­ரையை மேற்­கொள்ள திட்­ட­மிட்­டி­ருந்­தவர்களாவர்.

இறுதி நேரத்தில் எத்தகைய சிக்கல்கள் உருவாகினாலும் ஹஜ் ஏற்பாடுகளை எவ்வித குறைகளுமின்றி நிறைவேற்றுவதற்கு ஹஜ் குழு தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.