மு.கா. தலைவருடன் கபீர், ஹலீம் பேச்சு

அமைச்சுப் பதவிகள் குறித்து ஆராய்வு

0 764

இரா­ஜி­னாமா செய்த முன்னாள் அமைச்­சர்கள் கபீர் ஹாசிமும், ஹலீமும் மீண்டும் அமைச்சுப் பத­வி­களை பொறுப்­பேற்­பது குறித்து முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்­கீ­முடன் ஏற்­க­னவே கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­கி­றார்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் உறுப்­பி­னர்­க­ளான பதவி வில­கிய அமைச்­சர்கள் கட்­சியின் உயர் பீடத்தின் அனு­ம­தி­யினைப் பெற்­றுக்­கொண்டு பதவி வில­க­வில்லை. அது போன்று மீண்டும் அமைச்­சுப்­ப­த­வி­களை கையேற்­பதா இல்­லையா என்­பது தொடர்பில் அவர்­க­ளா­கவே தீர்­மானம் மேற்­கொள்­வார்கள் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பிரதித் தவி­சாளர் எம். நயீ­முல்லாஹ் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

இரா­ஜி­னாமா செய்து கொண்ட தமது அமைச்சுப் பத­வி­களை முஸ்லிம் காங்­கிரஸ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மீண்டும் பெற்­றுக்­கொள்­வார்­களா? என்­பது தொடர்பில் வின­வி­ய­போதே முஸ்லிம் காங்­கி­ரஸின் பிரதித் தவி­சாளர் எம். நயீ­முல்லாஹ் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­த­லை­ய­டுத்து கட்­சியின் உயர்­பீட கூட்டம் நடை­பெ­ற­வில்லை. நோன்பு காலத்­திலும் கூட்­டப்­ப­ட­வில்லை. அதனால் உயர்­பீ­டத்தில் ஆலோ­சிக்­கப்­ப­டா­மலே கட்­சியின் தலை­வ­ருக்கு அவ­சர நிலை­மை­க­ளின்­போது சொந்த தீர்­மானம் மேற்­கொள்­ளலாம் என்ற அடிப்­ப­டையில் அவர்கள் பத­வி­யி­லி­ருந்தும் வில­கி­னார்கள். அது சமூ­க­நலன் கரு­திய தீர்­மா­ன­மாகும்.

அதனைப் பிழை­யா­கக்­கொள்ள முடி­யாது. இதே­போன்று மீண்டும் பதவிகளை ஏற்பது தொடர்பில் அவர்கள் மேற்கொள்ளும் தீர்மானம் எதுவாக இருந்தாலும் அதற்கு கட்சி பதில் சொல்லியாக வேண்டும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.