உலமா சபை தலைவரின் கருத்துக்கு பதிலளிக்க வாய்ப்பு கோருகிறது பொதுபலசேனா

0 651

பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­கு­ழுவின் முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளித்த உலமா சபையின் தலைவர் பொது­ப­ல­சேனா அமைப்பைப் பற்­றியும் ஞான­சார தேரர் பற்­றியும் பொய்ச்­சாட்­சியம் வழங்­கி­யி­ருக்­கிறார். அது பொய்ச் சாட்­சியம் என்­பதை நிரூ­பிப்­ப­தற்கு பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­கு­ழுவின் முன்­னி­லையில் சாட்­சி­ம­ளிப்­ப­தற்கு நேரம் ஒதுக்கித் தரு­மாறு பொது­ப­ல­சேனா அமைப்பு சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­வி­டமும் பாரா­ளு­மன்ற செய­லா­ள­ரி­டமும் கோரிக்கை விடுத்­துள்­ளது.

தெரி­வுக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்கு சந்­தர்ப்பம் வழங்­கு­மாறு பொது­ப­ல­சேனா அமைப்பு சபா­நா­ய­க­ருக்கும் பாரா­ளு­மன்ற செய­லா­ள­ருக்கும் கடி­தங்­களை அனுப்பி வைத்­துள்­ளது.

உலமா சபையின் தலைவர் ஐ.எஸ். அமைப்பு இலங்­கையில் வேரூன்­று­வ­தற்கு பொது­ப­ல­சே­னாவின் வெறுப்புப் பேச்­சுக்­களே காரணம் என்று குற்றம் சுமத்­தி­யுள்ளார். பொது­ப­ல­சேனா அமைப்பு 2012 இலே உரு­வாக்­கப்­பட்­டது. ஆனால் இதற்கு முன்பே அடிப்­ப­டை­வாதம் இலங்­கையில் வேரூன்­றி­யி­ருந்­தது. இவ்­வாறு பொய் வாக்கு மூலங்­களை வழங்கும் உலமா சபையின் தலைவர் முஸ்லிம் சமூ­கத்தை வழி நடத்­து­வ­தற்குத் தகு­தி­யற்­றவர். முஸ்லிம் சமூகம் ஐ.எஸ். அமைப்­புடன் மாத்­தி­ர­மல்ல உலமா சபையின் தலைவர் தொடர்­பிலும் எச்­ச­ரிக்­கை­யாக இருக்கவேண்டும் என பொதுபலசேனாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலன்த விதானகே ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.