அரச ஊழியர்களின் ஆடை ஒழுங்கு சுற்று நிருபத்தினால் முஸ்லிம் பெண்கள் பலர் கடமைக்கு செல்லவில்லை

இது உங்களுக்குத் தெரியுமா என பொது நிர்வாக அமைச்சின் செயலாளரிடம் தெரிவுக் குழுவில் ஹக்கீம் கேள்வி ;விடுமுறையில் நின்றோருக்கு மானியம் வழங்குமாறும் கோரிக்கை

0 685

அரச நிறு­வ­னங்­களில் ஊழி­யர்கள் அணிய வேண்­டிய ஆடை தொடர்­பாக வெளி­யி­டப்­பட்­டி­ருந்த சுற்று நிரு­பத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்ள வேண்­டு­மாக இருந்தால் அதனை மேற்­கொள்­வது தொடர்­பாக கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்டு வரு­வ­தாக பொது நிர்­வாக மற்றும் உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்சின் செய­லாளர் ரட்­ண­சிறி தெரி­வித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் சம்­பவம் தொடர்­பான பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன்­னி­லையில் நேற்று வியா­ழக்­கி­ழமை சாட்­சி­ய­ம­ளிக்கும் போதே அவர் இதனை தெரி­வித்தார்.

நேற்று பிற்பல் 3.50 மணி­ய­ளவில் பொது நிர்­வாக அலு­வல்கள் அமைச்சர் செய­லாளர் ரட்­ண­சிறி  தெரி­வுக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ளிப்­ப­தற்­காக வருகை தந்­தி­ருந்தார். இதன்­போது குழு உறுப்­பி­னர்கள் அவ­ரிடம் ஏப்ரல் 21 பயங்­க­ர­வாத தாக்­குதல் சம்­ப­வத்தை தொடர்ந்து அரச நிறு­வ­னங்­களில் சாரி அணி­வதை கட்­டா­யப்­ப­டுத்தும் வகையில் பொது நிர்­வாக அமைச்­சினால் வெளி­யி­டப்­பட்­டி­ருந்த சுற்று நிருபம் தொடர்­பாக குழு உறுப்­பி­னர்கள் அவ­ரிடம் கேள்­வி­களை எழுப்­பினர். இதன்­போது அவர் பதி­ல­ளிக்­கையில்,

ஏப்ரல் 21 சம்­ப­வத்தின் பின்னர் அரச நிறு­வ­னங்­களின் பாது­காப்பு, அரச ஊழி­யர்­களின் பாது­காப்பு மற்றும் பொது மக்­களின் பாது­காப்பு விடயம் தொடர்­பாக எமக்கு பல்­வேறு கோரிக்­கைகள் கிடைத்­தன. இதனை தொடர்ந்து அமைச்­சு­களின் செய­லா­ளர்­களின் கூட்­டத்தில் அது தொடர்­பாக தீர்­மா­னங்கள் சில எடுக்­கப்­பட்­டன. இதன்­படி சீ.சீ.ரி.வி கம­ராக்­களை பொருத்­து­வது , அலு­வ­ல­கங்­க­ளுக்கு வரு­வோரின் பாது­காப்பை உறுப்­ப­டுத்தும் வகையில் அவர்­களின் பைகளை சோத­னை­யி­டுதல் உள்­ளிட்ட விட­யங்கள் தொடர்­பாக தீர்­மா­னங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

இதே­வேளை வேறு திணைக்­க­ளங்கள் , செய­ல­கங்­க­ளி­லி­ருந்து ஆடை தொடர்­பா­கவும் கவனம் செலுத்த வேண்­டு­மென்ற கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்­டன. இதன்­படி முன்னர் இருந்த சுற்­று­நி­ருபம் தொடர்­பாக மீண்டும் நினை­வூட்டும் வகையில் நட­வ­டிக்­கை­களை எடுத்தோம்.

ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெற்ற செய­லா­ளர்­களின் கூட்­டத்­திலும் இது பற்றி கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. புத்­தளம் , கரு­வ­ல­கஸ்­வெவ உள்­ளிட்ட பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து ஊழி­யர்கள் சிலரின் கையொப்­பங்­க­ளு­டனும் கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்­டன. இதனை தொடர்ந்தே அது பற்­றிய சுற்று நிரு­பத்தை வெளி­யிட வேண்­டி­யி­ருந்­தது. பல்­வேறு ஆடை­களை அணிந்து கொண்டு வரு­வதால் அது அச்­சு­றுத்­த­லா­னது என முறைப்­பா­டுகள் முன்­வைக்­கப்­பட்­டன. இதன்­படி சிறந்த ஒழுக்­கத்தை உறு­திப்­ப­டுத்தும் வகையில் எந்­த­வொரு ஆடை­யையும் தடை செய்­யாது பொருத்­த­மான ஆடையை அணிய வேண்­டி­யது தொடர்­பாக சுற்­று­நி­ரு­பத்தின் ஊடாக கூறப்­பட்­டது என அவர் தெரி­வித்தார்.

எவ்­வா­றா­யினும் இவ்­வா­றான சுற்று நிரு­பத்­தினால் ஏற்­பட்ட பிரச்­சி­னையால் முஸ்லிம் பெண்கள் பலர் தொழி­லுக்கு செல்ல முடி­யாது விடு­மு­றையில் வீட்டில் இருக்­கின்­றனர். இது பற்றி நீங்கள் அறிந்­துள்­ளீர்­களா? என குழு உறுப்­பினர் ரவூப் ஹக்கீம் கேள்­வி­யெ­ழுப்­பிய போது, அது பற்றி தான் அறி­ய­வில்­லை­யெ­னவும் எவ்­வா­றா­யினும் அது பற்றி தனக்கு அறி­விக்­கப்­ப­ட­வில்­லை­யெ­னவும் செய­லாளர் தெரி­வித்தார். அத்­துடன் யாரேனும் இதன்­மூலம் பாதிக்­கப்­பட்­டி­ருந்தால் தங்­க­ளுக்கோ அரச சேவை ஆணைக்­கு­ழு­வுக்கோ அறி­விக்க முடி­யு­மெ­னவும் தெரி­வித்தார்.

இந்­நி­லையில் இந்த சுற்­று­நி­ரு­பத்தால் அரச நிறு­வ­னங்­களில் ஊழி­யர்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் தொடர்­பா­கவும் மற்றும் அரச நிறு­வ­னங்­க­ளுக்கு சேவை­களை பெற்­றுக்­கொள்­வ­தற்கு வரும் பொது­மக்கள் எதிர்­கொள்ளும் அசௌ­க­ரி­யங்கள் தொடர்­பா­கவும் குழு உறுப்­பி­னர்கள் அவ­ரிடம் மேலும் பல கேள்­வி­களை எழுப்­பி­யி­ருந்­தனர்.

இதன்­போது குறித்த சுற்று நிருபம் தொடர்­பாக பிர­த­மரோ , அமைச்­சரோ , அமைச்­ச­ர­வையோ ஏற்­றுக்­கொள்­ளாத நேரத்தில் எவ்­வாறு இந்த சுற்று நிருபம் வெளி­யா­னது என குழு உறுப்­பினர் அவ­ரிடம் கேட்ட போது அது செய­லா­ளர்­களின் கூட்­டத்தில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னங்­க­ளுக்கு அமைய செய்­யப்­பட்­டது எனவும் இதில் மாற்­றங்­களை மேற்­கொள்­வது தொடர்­பாக கலந்­து­ரை­யாடி வரு­வ­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பாக காலம் தாழ்த்தாது பொருத்தமான உடையென தெரிவித்து புதிய சுற்றுநிருபமொன்றை வெளியிட நடவடிக்கையெடுக்குமாறு குழுவினர் அவரிடம் கோரிக்கை விடுத்திருந்ததுடன் இந்த விடயத்தால் பாதிக்கப்பட்டுள்ள யாரேனும் விடுமுறையில் இருந்திருந்தால் அவர்களுக்கு உரிய மானியங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக நடவடிக்கையெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.