தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிக்காக குரல்கொடுக்க முன்வரவேண்டும்

தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிக்காக குரல்கொடுக்க முன்வரவேண்டும்

0 626

தென்­னி­லங்கை அர­சியல் தலை­வர்கள் முஸ்லிம் சமு­கத்தின் குறை­களை மாத்­திரம் விமர்­சித்துக் கொண்­டி­ருக்­காமல் முஸ்­லிம்­க­ளுக்கு  எதி­ராக மேற்­கொள்­ளப்­படும் அநீ­திக்­கா­கவும் குரல்­கொ­டுக்க முன்­வ­ர­வேண்டும்.  இனங்­க­ளுக்­கி­டையில் பரஸ்­பர நல்­லு­றவு இருந்­தால்தான் நாட்டின் பொரு­ளா­தா­ர­தத்தை கட்­டி­யெ­ழுப்­பலாம் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரி­வித்தார்.

பயங்­க­ர­வாத தாக்­கு­த­லுக்கு பின்னர் தென்­னி­லங்கை அர­சியல் தலை­மைகள் முஸ்­லிம்கள் தொடர்­பாக கடைப்­பி­டித்­து­வரும் நட­வ­டிக்கை தொடர்பில் தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

இது­தொ­டர்­பாக அவர் தொடர்ந்து தெரி­விக்­கையில், பயங்­க­ர­வாத தாக்­கு­த­லுக்கு பின்னர் தென்­னி­லங்கை அர­சியல் தலை­மை­களின் பேச்­சுக்கள் முஸ்லிம் மக்­க­ளுக்கு அறி­வுரை செய்­வ­திலும் அவர்­களின் கலா­சாரம் மற்றும் ஆடைகள் தொடர்­பாக விமர்­சிப்­ப­தி­லுமே இருக்­கின்­றன. ஆனால் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­படும் அழுத்­தங்கள் கெடு­பி­டிகள் தொடர்­பாக குரல்­கொ­டுப்­பதை மிகவும் குறை­வா­கவே பார்க்­கின்றோம். அது மிகவும் துர்ப்­பாக்­கி­ய­மான நிலை­யாகும்.

ஏப்­ரல் 21ஆம் திக­திக்கு முன்னர் ஞான­சார தேரர் போன்­ற­வர்­களின் நட­வ­டிக்­கை­களை எதிர்த்து குரல்­கொ­டுக்கும் தலை­மைகள் தெற்கில் இருந்­தனர். பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டிலான் பெரேரா போன்­ற­வர்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான அநீ­தி­களை தட்­டிப்­பே­சக்­கூ­டி­ய­வர்­க­ளாக இருந்­தார்கள். ஆனால் இப்­போது இவர்­களும் முஸ்­லிம்­களின் செயற்­பா­டுகள் நடை உடை­களில் குறை­காண்­ப­திலே இருக்­கின்­றனர். இது முஸ்லிம் சமூ­கத்­துக்கு ஒரு­வ­கையில் மன அழுத்­தத்தை கொடுக்கும் வகை­யிலே இருக்­கின்­றது.

அத்­துடன் பயங்­க­ர­வா­தத்தை ஒழித்து நாட்டில் அமை­தி­யான சூழலை ஏற்­ப­டுத்த முஸ்லிம் சமூகம் ஒத்­து­ழைத்து வரு­கின்­றது என்­பது அவர்­க­ளுக்குத் தெரியும். அதனால் நியூ­சி­லாந்தில் பயங்­க­ர­வாதி ஒரு­வரின் தாக்­கு­த­லுக்கு பின்னர் அந்­நாட்டு பிர­தமர் எவ்­வாறு நடந்­து­கொண்டார் என்­பதை உதா­ர­ண­மாக கொண்டு செயற்­ப­ட­வேண்டும். எமது அண்­டை­நா­டான இந்­தி­யாவில் 20கோடிக்கும் மேற்­பட்ட முஸ்­லிம்கள் சகல மாநி­லங்­க­ளிலும் வாழ்­கின்­றார்கள். அந்த நாடும் இன்று காஷ்மீர் பிரச்­சினை என்றும் நக்­சலைட் போன்ற ஆயு­த­தா­ரி­களின் போராட்­டத்­துக்கு முகம்­கொ­டுத்­து­வ­ரு­கின்­றது.

என்­றாலும் இந்­திய அர­சாங்­கமும் அந்­நாட்டு அர­சி­யல்­வா­தி­களும் ஒரு­போதும் அந்­நாட்டு முஸ்­லிம்­களை வெறுப்­பூட்டும் கருத்­துக்­களை எதி­ரொ­லிப்­ப­தில்லை. பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் இருக்கும் அந்த நாட்டில் புர்கா, நிகாப் பாவ­னையில் இருக்­கின்­றது. அரபு மொழி பதா­தைகள் தாரா­ள­மாக காணப்­ப­டு­கின்­றன. அரபு மத்­ர­சாக்கள் தாரா­ள­மாக இருக்­கின்­றன.முஸ்லிம் விவாக சட்டம் என்றும் வக்பு வாரியம் என்றும் தனி­யாக இயங்­கு­கின்­றன. குறிப்­பாக ஹஜ்­ஜுக்கு செல்­ப­வர்­க­ளுக்குக் கூட அந்த அர­சாங்கம் மானியம் வழங்­கு­கின்­றது.

எனவே எமது நாட்டில் திடீ­ரென ஒரு குழு மேற்­கொண்ட குண்டுத் தாக்­கு­த­லுக்­காக ஆயிரம் வரு­டத்­துக்கும் மேற்­பட்ட உறவை கேள்­விக்­குட்­ப­டுத்­தும்­வ­கையில் தெற்கில் முஸ்­லிம்­க­ளுக்கு எதிராக மேற்கொள்கின்ற நடவடிக்கை மிகவும் துரதிஷ்டவசமானதாகும். இதனை தகர்த்தெறிய தெற்கில் இருக்கும் அரசியல் தலைவர்கள் துணிந்து முன்வரவேண்டும். இனங்களுக்கிடையில் பரஸ்பர நல்லுறவு இருந்தால்தான் நாட்டின் பொருளாதாரதத்தை கட்டியெழுப்பலாம். எம்மனைவருக்கும் நாடு முக்கியம் என்பதை உணர்ந்து செயற்படவேண்டும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.