இலங்கை முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களிடமிருந்து தூரப்பட்டுள்ளனர்

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த விசேட அறிக்கை

0 602

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்னரான அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த
ராஜபக் ஷ நேற்றைய தினம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் முழு விபரம் வருமாறு:

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற பயங்­க­ர­வாத குண்டுத் தாக்­கு­த­லா­னது இந்­நாட்டின் வர­லாற்றில் முக்­கி­ய­தொரு சம்­ப­வ­மாகும். அந்த சம்­ப­வத்தின் ஊடாக தமது சமயக் கொள்­கை­க­ளுக்கு இணங்­காத மக்­களை கொலை செய்யும் பயங்­க­ர­வா­த­மொன்று பற்­றிய அதிர்ச்­சி­யொன்று முழு நாட்­டிலும் பர­வி­யது. நாட்டின் பொரு­ளா­தார செயற்­பா­டு­களும் தடைப்­பட்­டன. தற்­போது மீண்டும் யுத்த காலத்தைப் போன்று பெற்­றோர்கள் பாட­சா­லை­களில் காவல் புரி­கின்­றனர். யுத்த காலத்தில் இருந்­ததை விடவும் இன்று எம்மால் சமய வழி­பா­டு­க­ளிலும் பாது­காப்­பிற்கு மத்­தி­யி­லேயே ஈடு­பட வேண்­டி­யுள்­ளது. வெசாக், பொச­னையும் முன்பு போன்று கொண்­டாட முடி­யாது. விஹா­ரைகள், தேவா­ல­யங்கள், பள்­ளி­வா­சல்கள் என்­ப­வற்­றிற்கும் சோதித்­ததன் பின்­னரே உள்ளே அனு­ம­திக்­கின்­றனர்.

தற்­போது இலங்­கையின் முஸ்லிம் சமூகம் மற்றும் பிற சம­யங்கள் என்­ப­வற்­றிற்கு இடையில் பாரிய இடை­வெ­ளி­யொன்று காணப்­ப­டு­கின்­றது. குரு­நாகல் வைத்­தி­ய­சா­லையில் பணி­பு­ரிந்த மருத்­துவர் ஒரு­வரின் கடும்­போக்­கான சமய சித்­தாந்தம் கார­ண­மாக முஸ்லிம் அல்­லாத பிற சமயத் தாய்­மார்­களை கருத்­த­ரி­யா­மைக்கு உள்­ளாக்­கி­யுள்ளார் என்ற குற்­றச்­சாட்டு கார­ண­மா­கவும் இந்த அவ­நம்­பிக்­கை­யா­னது மிகவும் பயங்­க­ர­மாக நோக்கும் நிலைக்கு உள்­ளாகி வரு­கின்­றது. இவ்­வா­றான சந்­தர்ப்­பத்தில் நாட்டுத் தலை­வர்­களும் மிகவும் பொறுப்­பு­டனே செயற்­படல் வேண்டும்.

பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலின் இரண்டு மூன்று வாரங்­களின் பின்னர், திட்­ட­மிட்ட குழுக்கள் நாட்டின் ஒரு­சில பிர­தே­சங்­களில் இன­வாதக் கல­வரம் ஒன்­றினை ஏற்­ப­டுத்­த­ுவ­தற்­காக முஸ்லிம் கடை­களை தாக்­கு­வதை நாம் கண்டோம். எனினும் அதற்கு எதி­ராக எழுந்த மக்­களின் எதிர்ப்பு கார­ண­மாக அந்த வன்­மு­றைகள் விரைவில் முடி­வுற்­றது. சமூ­கத்­திலும் அந்த வன்­மு­றை­க­ளுக்கு பாரிய எதிர்ப்பு எழுந்­தது. கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு முன்­னரும் இவ்­வா­றான சம்­ப­வங்கள் 2014 ஆம் ஆண்­டிலே இடம்­பெற்­றன. 2015 ஜன­வரி மாதம் 09 ஆம் திகதி பார்க்­கும்­போது அடித்­த­வர்­களும் அடி வாங்­கி­ய­வர்­களும் பொது வேட்­பா­ளரின் பக்­கத்­தி­லேயே இருந்­தார்கள். அவ்­வா­றான சரித்­திரம் ஒன்­றைத்தான் இம்­மு­றையும் மேற்­கொள்ளப் பார்த்­தார்கள். எனினும் அந்த முயற்சி கைகூ­ட­வில்லை.

தற்­போது இடம்­பெற்று வரு­கின்ற அனைத்து விட­யங்­களும் இன்னும் சில மாதங்­களில் நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதி தேர்­த­லுடன் நெருங்­கிய தொடர்­பினைக் கொண்­டுள்­ளன என்­ப­தனை நாம் அனை­வரும் விளங்­கிக்­கொள்ள வேண்டும்.

தற்­போ­தைய அர­சாங்­க­மா­னது 2015 இற்கு முன்னர் பல்­வேறு தந்­தி­ரங்கள் ஊடாக தம்மைச் சுற்றி அமைத்துக் கொண்ட முஸ்லிம் வாக்­கு­களை அடுத்த தேர்­தலின் போதும் அவ்­வாறே தக்­க­வைத்துக் கொள்ள எதிர்­பார்க்­கின்­றது. எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அர­சாங்­கத்தின் அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்சர் ஒரு­வ­ருக்கு பயங்­க­ர­வா­தி­க­ளுடன் தொடர்­புள்­ளது என்ற அடிப்­ப­டையின் மீது நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை ஒன்­றினைக் கொண்­டு­வந்­தனர். நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை என்­பது பாரா­ளு­மன்ற மர­பிலே பிர­தா­ன­மா­ன­தொரு விட­ய­மாகும். அது எதிர்க்­கட்­சியின் உரி­மை­யு­மாகும்.

அவ்­வா­றா­ன­தொரு நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை சமர்ப்­பிக்­கப்­பட்டால் பொது­வாக இடம்­பெற வேண்­டிய விடயம் யாதெனில், அந்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை விவா­தத்­திற்கு எடுத்துக் கொண்டு வாக்­கெ­டுப்பு ஒன்­றிற்கு உட்­ப­டுத்­து­வ­தாகும். அல்­லது குறித்த அமைச்சர் பத­வியை இரா­ஜி­னாமா செய்­து­விட்டு குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லி­ருந்து விடு­பட்­டதன் பின்னர் மீண்டும் அப்­ப­த­வியில் சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்­து­கொள்­வ­தாகும். அந்த மர­பா­னது சிங்­கள, தமிழ், முஸ்லிம் அமைச்­சர்கள் அனை­வ­ருக்கும் பொது­வா­ன­தாகும். முன்­னைய காலத்தில் எம்.ஏ. பாக்கிர் மாக்கார், எம்.எச். மொஹமட் போன்ற முஸ்லிம் சபா­நா­யர்­க­ளுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைகள் கொண்­டு­வ­ரப்­பட்ட போதும் அதன் பக்கம் எவரும் இன­வாத சிந்­த­னையில் நோக்­க­வில்லை.

எனினும், இம்­முறை ஒரு முஸ்லிம் அமைச்­ச­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்ட போது அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து முஸ்லிம் அமைச்­சர்­களும் இரா­ஜி­னாமாச் செய்­தார்கள். அது பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தா­ய­மல்ல. யு.என்.பி. அர­சாங்கம் இந்த சந்­தர்ப்­பத்தில் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களை அணி­தி­ரட்டிக் கொண்டு எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலின் போது அவர்­க­ளது வாக்­கு­களை முழு­மை­யாக பெற்­றுக்­கொள்­வ­தற்கு முயற்­சிக்­கின்­றமை இதன் மூலம் தெரி­ய­வ­ரு­கின்­றது. இவைதான் இத­னுள்ளே இடம்­பெ­று­கின்ற விளை­யாட்­டாக உள்­ளது. அனை­வரும் கூட்­டாக இரா­ஜி­னாமாச் செய்­வதன் ஊடாக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை­யையும் இரத்துச் செய்து கொண்­டார்கள். ஏனைய பிரச்­சி­னை­களை மறந்து விடு­வ­தற்கும் அதனை பயன்­ப­டுத்­து­கின்­றனர்.

தற்­போது பிணை­முறி மோசடி பற்றி கதை­யில்லை. நாட்டின் கடன் சுமை பற்­றியும் கதை­யில்லை. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தலின் பின்னர் இன்­னமும் காயப்­பட்டோர் மருத்­து­வ­ம­னை­களில் உள்­ளனர். அவர்­க­ளையும் மறந்­துள்­ளனர். அடிப்­ப­டை­வா­திகள் பற்­றியும் கதை­யொன்­று­மில்லை. தேடு­தல்­களும் நின்­று­விட்­டன. ஆயு­தங்கள் கண்­டு­பி­டிக்­கப்­ப­டு­வ­து­மில்லை. கைது செய்த பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­படும் நட­வ­டிக்­கைகள் பற்­றியும் கதை­யில்லை. இந்தச் சூட்­டுடன் அர­சாங்­க­மா­னது நாட்டின் சொத்­துக்­களை விற்­பனை செய்ய முயற்­சிக்­கின்­றது. ஒரே கல்லால் நூற்­றுக்கும் மேற்­பட்ட குரு­வி­களைக் கொன்­றுள்­ளார்கள்.

தமது அர­சியல் கருத்­திட்­டத்­திற்­காக அவர்கள் இந்­நாட்டின் முஸ்லிம் சமூ­கத்­தையும் நன்­றாகப் பயன்­ப­டுத்தி வரு­கின்­றனர். ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு நடு­நிலை முஸ்­லிம்­களைப் போன்றே கடும்­போக்கு முஸ்­லிம்­களின் வாக்கும் தேவை. வாக்குக் கிடைப்­பது யாரி­ட­மி­ருந்து என்று அவர்­க­ளுக்கு முக்­கி­ய­மில்லை. அவ்­வாறே முஸ்லிம் தலை­வர்­க­ளுக்கு தமக்கு அடங்கிச் செல்லும் அர­சாங்­க­மொன்று தேவை. எனினும் இந்த இணைப்பின் மூலம் சாதா­ரண முஸ்லிம் மக்கள் முகம்­கொ­டுத்­துள்ள பிரச்­சி­னைக்கு தீர்வு ஏதும் கிட்­டப்­போ­வ­தில்லை. இந்­நாட்டின் பொது­மக்­க­ளுக்குத் தேவைப்­ப­டு­வது சம­ய­வாத பயங்­க­ர­வா­தத்தில் இருந்து தமது உயிரைப் பாது­காத்துக் கொள்­வ­தாகும். இந்­நாட்டின் சாதா­ரண முஸ்லிம் மக்­க­ளுக்குத் தேவைப்­ப­டு­வதும் தமது சமூ­கத்­தி­லி­ருந்து பயங்­க­ர­வா­தி­களை அகற்­றி­விட்டு இயல்பு வாழ்க்­கைக்கு மீண்டும் திரும்­பு­வ­தாகும்.

இன்று பிற சம­யத்­தி­னரை கொலை செய்யும் கொடூர சம­ய­வாத பயங்­க­ர­வா­த­மொன்று உரு­வாகி உள்­ளது. பௌத்த, இந்து, கிறிஸ்­தவ அனைத்து சம­யத்­த­வர்­களும் தமது பாது­காப்­பிற்­காக அந்தப் பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ராக அணி திரண்டு வரு­கின்­றனர். இந்த சந்­தர்ப்­பத்தில் நடு­நிலை போக்­கு­டைய அதி­க­மான முஸ்லிம் மக்கள் பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ராக அந்த அணி­தி­ரள்தல் மூலம் தனி­மைப்­ப­டுத்­தப்­படக் கூடாது. கடும்­போக்குக் கருத்­துக்கள் நாட்­டினுள் வந்­த­மையால் இலங்கை முஸ்லிம் மக்கள் படிப்­ப­டி­யாக ஏனைய இலங்கை சமூ­கத்­தி­ன­ரிடம் இருந்து விலகிச் சென்­றதை முஸ்லிம் சமயத் தலை­வர்­களும் புத்­தி­ஜீ­வி­களும் உயிர்த்த ஞாயிறு தற்­கொலை தாக்­கு­தலின் பின்னர் சுய விமர்­ச­னத்­துடன் ஏற்றுக் கொண்­டனர்.

1980 காலப் பகு­தி­யி­லி­ருந்து தனி­யான முஸ்லிம் கட்­சிகள் உரு­வாக்­கப்­பட்­ட­மையால் அர­சியல் துறை­யிலும் அவர்கள் தனி­யான ஒரு பய­ணத்தை ஆரம்­பித்­தனர். இலங்கை முஸ்லிம் சமூகம் ஏனைய இலங்கைப் பிர­சை­க­ளி­ட­மி­ருந்து தூரப்­ப­டுத்தும் இச்­செ­யற்­பாட்டின் மோச­மான விளை­வைத்தான் அண்­மையில் அனைத்து முஸ்லிம் அமைச்­சர்­களும் இரா­ஜி­னாமாச் செய்­ததன் மூலம் நாம் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது. இவ்­வாறு இரா­ஜி­னாமா செய்த அமைச்­சர்கள் எதிர்க்­கட்சித் தலைவர் என்ற வகையில் என்னைச் சந்­திக்க வந்­த­போது நான் இவ்­வி­டயம் பற்றி அவர்­களை எச்­ச­ரித்தேன்.

1980 காலப் பகு­தியில் முதல் முறை­யாக தனி­யான முஸ்லிம் அர­சியல் கட்சி ஒன்­றினை ஆரம்­பித்த எனது நண்பர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள், சம­ய­வாத அர­சியல் கட்சி ஒன்­றினை உரு­வாக்­கி­யதன் தவறை உணர்ந்­தி­ருந்தார். அத­னால்தான் அவர் இறுதிக் காலத்தில் தேசிய ஐக்­கிய முன்­னணி எனும் பெயரில் அனைத்து சம­யத்­த­வர்­க­ளுக்கும் பொது­வா­ன­தொரு அர­சியல் கட்­சியை உரு­வாக்­கினார். அவ­ரது மர­ணத்தின் பின்னர், அந்த இணைவு இல்­லாது போனது. தனி­மை­யாக செயற்­படும் போக்கு மேலும் தீவி­ர­மா­னது.

இன்­றுள்ள முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் முஸ்லிம் வாக்­கு­களில் மாத்­திரம் தங்கி வாழ்­வ­தனால் அவர்­க­ளுக்கு அந்தச் சமூ­கத்­திலே உள்ள கடும்­போக்­கா­ளர்­களும் தேவைப்­ப­டு­கின்­றனர். கடந்த காலப் பகுதி முழு­வதும் முஸ்லிம் கடும்­போக்­கு­வாதம் இந்­நாட்டில் விருத்­தி­ய­டைந்த போதிலும் அதற்கு எதி­ராக செயற்­பட அர­சியல் தலை­மை­களால் முடி­ய­வில்லை. பயந்­தனர். அத­னால்தான் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் சிங்­க­ளத்தில் நல்­லி­ணக்கம் பற்றி பேசி­விட்டு தமிழில் இன­வா­தத்தைக் கக்­கு­கின்­றார்கள் என்ற பாரிய குற்­றச்­சாட்டு எழுந்­தது.

இலங்கை முஸ்லிம் சமூ­கத்­திலே கடும்­போக்­கு­வாதம் வளர்ந்த விடயம் இன்று நேற்று திடீ­ரென உரு­வான ஒன்­றல்ல. இது பல வருட கால­மாக வாதப் பிர­தி­வா­தங்கள், அச்­சு­றுத்­தல்கள், மோதல்கள், பள்­ளி­வா­சல்­க­ளுக்கு தீவைத்தல், வீடு­க­ளுக்கு தீ வைத்தல், கொலைகள் அவை அனைத்­து­டனும் இடம்­பெற்ற ஒரு செயற்­பா­டாகும். அவை அனைத்தும் இடம்­பெ­று­கின்ற போதும் இலங்­கையின் அர­சியல் தலை­வர்கள் தமது அர­சியல் ஸ்திரத்­தன்­மைக்­காக அந்தத் தீவி­ர­வா­தி­க­ளுக்கு அனு­ச­ரணை வழங்கி வள­ர­விட்­டனர். உயிர்த்த ஞாயிறு குண்டு வெடித்­ததன் பின்னர் சில தலை­வர்கள் “நாம் இந்­த­ளவு நடக்­கு­மென்று எதிர்­பார்க்­க­வில்லை” என்று கூறினர்.

எனவே, நாம் இன்று இடம்­பெற்­றுள்ள அந்த விட­யத்­திற்கு தீர்வு ஒன்­றினைக் காண வேண்டும். பயங்­க­ர­வா­தத்­திற்கு இந்­நாட்டின் ஏனைய மக்கள் சமூகம் ஒரு­போதும் இட­ம­ளிக்கப் போவ­தில்லை. இந்தப் பயங்­க­ர­வா­தத்தை நாம் எந்த வழி­யி­லா­வது அழித்­தொ­ழித்தல் வேண்டும். மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பயங்­க­ர­வாதம் கார­ண­மாக சிங்­க­ள­வர்கள் கைது செய்­யப்­பட்­டனர். சிங்­கள வீடுகள் மற்றும் விஹா­ரை­களில் தேடு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. புலிப் பயங்­க­ர­வாதம் கார­ண­மாக தமி­ழர்கள் கைது செய்­யப்­பட்­டனர். தமிழ் வீடுகள் மற்றும் கோவில்­களில் தேடு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. முஸ்லிம் சமூ­கத்­தி­லி­ருந்தும் எழு­கின்ற பயங்­க­ர­வா­தத்தை ஒழிக்க வேண்­டு­மாயின் நிச்­ச­ய­மாக முஸ்­லிம்­களை கைது செய்ய வேண்டும். முஸ்லிம் வீடுகள், வர்த்­தக நிலை­யங்கள், பள்­ளி­வா­சல்கள் என்­ப­வற்­றினை தேடு­த­லுக்கு உட்­ப­டுத்த வேண்டும். அவ்­வாறு செய்­யாது வேரூன்­றி­யுள்ள தீவி­ர­வாதம் ஒன்றின் மூலம் உரு­வா­கி­யுள்ள பயங்­க­ர­வாதம் ஒன்­றினை கட்­டுப்­ப­டுத்த முடியும் என்­பது போலி­யான கருத்­தாகும்.

மத­வாதப் பயங்­க­ர­வாதம் என்­பது எமக்கு புதி­ய­தொன்­றல்ல. உலகின் அனைத்து முஸ்லிம் நாடு­க­ளுக்கும் இது மிகவும் நன்கு பழக்­க­மான ஒன்­றாகும். நடுத்­தர போக்­கினை உடைய முஸ்லிம் சமூ­கங்­கள்தான் உலகில் அதிகம் உள்­ளன. இந்­தோ­னே­சியா, மலே­சியா முதல் ஓமான், டுபாய், மொரொக்கோ வரையும் முஸ்­லிம்கள் அதிகம் வாழ்­கின்ற நாட்டு மக்கள் எம்மை போன்று சாதா­ரண வாழ்க்­கை­யினை வாழ்ந்து வரு­கின்­றனர். முஸ்­லிம்கள் அதி­க­மாக வாழ்­கின்ற நாடு­களில் பிற மதங்­களைப் பின்­பற்றும் ஆயி­ரக்­க­ணக்­கான, இலட்சக் கணக்­கான மக்கள் உள்­ளனர். தீவி­ர­வா­தத்தை ஒழித்­தி­ருக்கும் அள­வுடன் ஒப்­பி­டு­கையில் அந்த நாடு­களில் பிற மதத்­த­வர்­களின் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.

இலங்­கையில் மாத்­தி­ர­மல்ல, உலக முஸ்லிம் சமூ­கத்தின் பிர­தான எதி­ரிதான், தீவி­ர­வாதப் பயங்­க­ர­வாதம். முஸ்லிம் நாடு­களை அழிப்­ப­தற்கு ஏகா­தி­பத்­திய பலம் பொருந்­தி­ய­வர்கள் பயன்­ப­டுத்தும் ஒரே ஆயு­தம்தான் இந்த இன­வாதப் பயங்­க­ர­வாதம். அந்த செயற்­பாட்­டிற்கு வேண்­டு­மென்றே உதவி செய்து ஏகா­தி­பத்­திய அதி­காரம் படைத்­த­வர்கள் ஆப்­கா­னிஸ்தான், ஈராக், சிரியா, லிபியா, யேமன் போன்ற நன்­றாக இருந்த நாடு­களை முழு­மை­யாக அழித்­து­விட்­டனர். எமது நாட்­டிற்கும் இன்று நுழைந்­தி­ருப்­பது தீவி­ர­வாதப் போக்­கு­டைய பயங்­க­ர­வாதம் ஊடாக இலங்­கைவாழ் முஸ்லிம் சமூகத்திற்கு தீங்கு ஏற்படுவதைத் தவிர எதுவித நன்மையும் ஏற்படப் போவதில்லை. சிறிய பிரிவினரின் அரசியல் தேவைக்காக இந்நாட்டு முஸ்லிம் மக்கள் மற்றைய சமூகத்திலிருந்து ஒதுக்கி தனிமைப்படுத்தி வைப்பதன் பயங்கரமான தன்மையினை தற்போதாவது அவர்களது தலைவர்கள் புரிந்து கொள்வார்களென நான் நம்புகிறேன்.

ஏனைய அனைத்து சமூகத்தினரும் இணைந்து இச்சந்தர்ப்பத்தில் எமது நாட்டிலுள்ள நடுநிலைப் போக்குடைய பெரும்பான்மை முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பினை வழங்குதல் வேண்டும். அவர்களை தனிமைப்படுத்தலாகாது. இந்த நேரத்தில் அனைத்து முஸ்லிம் நபர்களும் தமது புத்திசாதுர்யத்தைப் பயன்படுத்தி, இலங்கை கலாசாரத்தை மதித்து, தமது சமூகத்தை மென்மேலும் படுகுழிக்கு இட்டுச் செல்கின்ற குறுகிய நோக்கம் கொண்ட இனவாத அரசியலிலிருந்து விடுபட வேண்டும். அந்த மாற்றமானது முஸ்லிம் சமூகத்திலிருந்தே வரவேண்டும்.

பயங்கரவாதத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு சமூகத்தினர் அணிதிரண்டு வருகின்ற இச்சந்தர்ப்பத்தில் உலகின் பெரும்பான்மை முஸ்லிம்களின் வழியில் சென்று, நடுநிலையான இலங்கை முஸ்லிம் சமூகமும் அந்த அணியில் இணைவார்கள் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். நான் தலைமைத்துவம் வழங்கும் ஒரு அரசாங்கத்தின் கீழ், எந்தவொரு பயங்கரவாதமும் இந்நாட்டிலே தலைதூக்க இடமளிக்க மாட்டேன் என இச்சந்தர்ப்பத்தில் மக்கள் முன்னிலையில் உறுதியாகக் குறிப்பிட விரும்புகின்றேன்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.