- எம்.எம்.எம். ரம்ஸீன்
தெற்காசியாவில் இலங்கையர்கள் உயர்ந்த எழுத்தறிவு வீதத்தைக் கொண்டிருப்பதற்கு இலவச கல்வி முறையும் ஒரு காரணமாகும். இதனால நமது மாணவர்களுக்கு முதலாம் தரம் முதல் பல்கலைக்கழகம் வரை இலவசமாகப் கல்வி பயிலும் வசதி வாயப்புக்கள் கிடைக்கின்றன.
நாட்டிற்குப் பயனுள்ள நற்பிரஜைகள், பயனுள்ள மனித வளம் என்பதாக இதன் எதிர்பார்ப்புக்கள் அமைந்துள்ளன. இம்மனிதவளம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் பங்களிப்புச் செய்யத்தக்கதாகும்.
கல்வியின் அடைவு மட்டத்தை அளவிடவும் மதிப்பிடவும் பரீட்சைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இலங்கையிலும் ஏனைய நாடுகளில் போல் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வி முறையில் பரீட்சைகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இப்பரீட்சைகள் மூலம் மாணவர்களின் அறிவு மட்டம் மற்றும் ஞாபகத்திறன் பரீட்சிக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் பாடசாலைகளில் நடைபெறும் மாதாந்த பரீட்சைகள், தவணைப் பரீட்சைகள் மற்றும் தேசியமட்ட புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை, க.பொ.த உயர்தரப் பரீட்சை என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.
மாணவர்களின் கற்றல் அடைவை இரண்டு, மூன்று மணித்தியாலங்களில் அளவிடுவதும் மதிப்பிடுவதும் எந்தளவுக்குப் பொருத்தமானது? பரீட்சைகள் மூலம் வெறும் புத்தகப்பூச்சிகள் தெரிவு செய்யப்படுகின்றனர் என்ற விமர்சனங்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.
எனவே, மாணவனின் அடைவு மட்டம் தொடர்ச்சியாக மதிப்பீட்டிற்குட்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது. இதற்காக பாடசாலைகளில் ஆரம்ப பிரிவுகளில் மாணவர்களின் அடைவு மட்ட தேர்ச்சிகள் மதிப்பிடப்படுகின்றன. தரம் ஆறு முதல் க.பொ.த. உயர்தரம் வரை பாடசாலை மட்ட மதிப்பீட்டு கணிப்பீட்டு முறைகள் (School Base Assessment) அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் போட்டிப் பரீட்சைகளை அறிந்தவர்களும் பழக்கப்பட்டவர்களுமாவர் என்ற அடிப்படையில் பிள்ளைகளை போட்டிப் பரீட்சைக்குத் தயார்படுத்துவதில் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்பின்னணியில் பெற்றோர் மத்தியில் பாடசாலை மட்ட மதிப்பீட்டு கணிப்பீட்டு முறையில் போதிய விழிப்புணர்வு காணப்படவில்லை எனலாம்.
பிள்ளைகள் முதல் தடவையாக முகங்கொடுக்கும் தேசிய மட்ட போட்டிப் பரீட்சையான புலமைப் பரிசில் பரீட்சை 1952 ஆம் ஆண்டு முதல் நடாத்தப்பட்டு வருகின்றது. இப்பரீட்சையை போட்டிப் பரீட்சை என்ற நிலையில் இருந்து தவிர்ப்பதற்காக 70 புள்ளிகளைப் பெறும் மாணவர்கள் யாவரும் சித்தியடைந்தவர்கள் என்று அரசாங்கம் அறிவித்தாலும் கூட வெட்டுப்புள்ளி நிர்ணயம் பரீட்சையை போட்டிப் பரீட்சையாக மாற்றிக் காட்டுகின்றமை தவிர்க்க முடியாததாகும்.
வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களில் திறமைமிக்க பிள்ளைகளுக்கு உபகார நிதி வழங்குதல், திறமைமிக்க மாணவர்களுக்கு பிரபல பாடசாலைகளில் அனுமதி பெறும் வாய்ப்பை வழங்குதல் முதலான நோக்கங்களுக்காக புலமைப் பரிசில் பரீட்சை ஆரம்பிக்கப்பட்டது. இதன் பேரில் வருடாந்தம் 32 ஆயிரம் மாணவர்கள் உதவிப்பணமும் பிரபல பாடசாலைகளில் அனுமதியும் பெறுகின்றனர். இப்பரீட்சையின் நோக்கங்கள் ஆரம்பத்தில் நிறைவேறி வந்தாலும் பின்னைய காலங்களில் இந்நோக்கங்கள் அடையப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை எல்லோரும் ஏற்றுக் கொள்கின்றனர்.
இதற்கான காரணங்களில் ஒன்று இப்பரீட்சை பெற்றோர்களின் பரீட்சையாக மாறி விட்டமையாகும். வசதி படைத்த பெற்றோர்கள் தமது பிள்ளைகளை இரவு பகல் பாராமல் பல ஆயிரங்கள் செலவு செய்து வகுப்புக்களுக்கு அனுப்பி அறிவைத் திணித்து பரீட்சையில் சித்தியடையச் செய்ய வைக்கின்றனர். இப்பிள்ளைகளுக்கு உபகார நிதி கிடைப்பதில்லை. ஆனால் பிரபல பாடசாலைகளில் அனுமதி மட்டும் கிடைகின்றது. இதனால் மறுபக்கத்தில் திறமைமிக்க வசதி குறைந்த மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது.
அண்மைக்காலம் வரை இப்பரீட்சையை மையப்படுத்தி வகுப்புக்களும் பிரசுரங்களும் கருத்தரங்குகளும் பிரமாண்டமாக நடாத்தப்பட்டு வருகின்றன. இவ் வகுப்புக்கள், பிரசுரங்கள், கருத்தரங்குகள் என்பவற்றின் கவர்ச்சிகரமான சந்தைப்படுத்தல் செயற்பாடுகள் பெற்றோர்களின் மத்தியில் பரீட்சை மீதான ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளமை கண்கூடாகும். இதனால், புலமைப் பரிசில் பரீட்சை மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அல்லது உறுதிப்படுத்தும் பரீட்சை என்ற தோற்றப்பாட்டை பெற்றுள்ளது. இப்பரீட்சையில் சித்தியடைந்த யாவரும் பல்கலைக்கழக அனுமதியைப் பெறுவதுமில்லை சித்தியடையாத பலர் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர் என்பதை பல பெற்றோர்கள் அறிந்து வைத்திருப்பதில்லை.
புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தயார்படுத்தப்படும் பிள்ளைகள் இயந்திரங்களாக மாற்றப்படுகின்றனர். பிள்ளைகளின் இயல்புக்கு மாற்றமாக கல்வித் திணிப்பு செய்யப்படுகின்றது. இப்பின்னணியில், புலமைப் பரிசில் பரீட்சையில் பிள்ளைகள் சித்தியடைதல் பெற்றோர்களின் கௌரவமாக நோக்கப்படுகின்றது. பிள்ளைகள் பரீட்சையில் சித்தியடையத் தவறும் பட்சத்தில் பெற்றோர்கள் மத்தியில் ஏற்படும் தோல்வி மனப்பான்மை, தாழ்வு மனப்பான்மை என்பன பிள்ளைகளை உடல், உள ரீதியாக வதைக்கப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளன. பரீட்சைப் பெறுபேறுகளைத் தொடர்ந்து கடந்த காலங்களில் பதிவாகிய பிள்ளைகளை வீட்டை விட்டு விரட்டுதல், சூடுவைத்தல், திட்டித் தீர்த்தல், கூண்டில் அடைத்து வைத்தல் முதலான சம்பவங்கள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுக்களாகும்.
இதனால், ஐந்தாம்தர புலமைப் பரிசில் பரீட்சையை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் அவ்வப்போது சமூகத்தில் எழுந்தன. இப்பரீட்சைக்குப் பதிலாக இடைநிலைப் பிரிவில் மற்றுமோர் பரீட்சையை நடாத்த வேண்டும் என்று மற்றுமொரு சாரார் கருத்து தெரிவித்து வந்தனர். எப்படியாயினும் இவர்கள் யாவரும் புலமைப் பரிசில் பரீட்சையில் மாற்றம் தேவை என்ற கருத்தில் உடன்பாடு கண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இப்பரீட்சைக்கு வருடாந்தம் சுமார் 3 இலட்சம் மாணவர்கள் தோற்றும் நிலையில் பரீட்சையை ரத்து செய்வது என்பது அரசியல் ரீதியில் பாதிப்பை தோற்றுவிக்கலாம் என்று அரசியல்வாதிகள் கருதி வந்தமை பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற வினாவை தோற்றுவித்து வந்துள்ளது. இதனால், கடந்த காலங்களில் பரீட்சை முடிவுகள் வெளிவரும்போது பாதிக்கப்படும் மாணவர்கள் சார்பாக பேசிய பலர் சிறிது காலத்தில் மௌனித்துப் போவதை கண்டுள்ளோம்.
இப்பின்புலத்தில் ஜனாதிபதி கடந்த மார்ச் 25 ஆம் திகதி பொலநறுவையில் புலமைப் பரிசில் பரீட்சை பற்றி தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து புலமைப் பரிசில் பரீட்சை மீண்டும் பேசுபொருளாகியது. இதனையடுத்து மக்கள் மத்தியில் எழுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கையை வெளியிட்டு இப்பரீட்சை கட்டாயமில்லை என்ற விடயத்தை முன்வைத்துள்ளது. இதன் மூலம் பிள்ளைகள் எந்தளவுக்கு உள நெருக்கீடுகளிலிருந்து விடுதலையாகுவர் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இவ்வருடம் பொதுவாக தரம் 5 இல் கற்கும் மாணவர்கள் யாவரும் பரீட்சைக்குத் தயாராகி வருவதைக் காணமுடிகின்றது.
எனவே, அடுத்த வருடம்தான் இப்பரீட்சை தொடர்பான பெற்றோர்களின் நிலைப்பாடுகளை அறிந்துகொள்ள முடியும் என்று எதிர்பார்க்கலாம். எம்.எம்.எம். ரம்ஸீன்

எனவே, அடுத்த வருடம்தான் இப்பரீட்சை தொடர்பான பெற்றோர்களின் நிலைப்பாடுகளை அறிந்துகொள்ள முடியும் என்று எதிர்பார்க்கலாம்.
-Vidivelli