அரசியல் தலைமைகள் விடயத்தில் காட்டப்படும் அக்கறை அப்பாவிகள் மீதும் காட்டப்பட வேண்டும்

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வேண்டுகோள்

0 712

சிறிய கார­ணங்­க­ளுக்­கா­கவும் வெறும் சந்­தே­கங்­களின் அடிப்­ப­டை­யிலும் கைது செய்­யப்­பட்டு நூற்­றுக்­க­ணக்­கான அப்­பாவி முஸ்­லிம்கள் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்கள் தொடர்­பான விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்தி, குற்­ற­மற்­ற­வர்கள் அனை­வ­ரையும் மிக அவ­ச­ர­மாக விடு­தலை செய்­வ­தற்­கான விஷேட பொறி­மு­றை­யொன்று அமைக்­கப்­பட வேண்­டு­மென நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி வலி­யு­றுத்­தி­யுள்­ளது..

இதனை முக்­கிய வேண்­டு­கோ­ளாக அர­சியல் தலை­மைகள் வலி­யு­றுத்தி, அழுத்தம் கொடுக்க வேண்டும். அர­சியல் தலை­மைகள் மீதான குற்­றச்­சாட்­டுக்­களை தெளி­வு­ப­டுத்­து­வ­தற்­காக காட்­டப்­படும் அக்­கறை போலவே அப்­பாவி முஸ்­லிம்கள் விட­யத்­திலும் உட­னடி அவ­தா­னமும், அக்­க­றையும் காட்­டப்­ப­டுதல் வேண்டும் எனவும் அக்­கட்சி தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்பில் ந.தே.மு. வெளி­யி­ட்­டுள்ள ஊடக அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

ஏப்ரல் 21ஆம் திக­திய பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­களின் பின்னர் நாட்டில் ஏற்­பட்­டுள்ள அசா­தா­ரண சூழ­லா­னது, ஒட்­டு­மொத்த நாட்டு மக்­க­ளையும்,குறிப்­பாக முஸ்லிம் மக்­களை கடு­மை­யாக பாதித்­தி­ருக்­கி­றது. அது­மட்­டு­மன்றி தேசிய அர­சி­ய­லிலும் கொந்­த­ளிப்­பு­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. இந்த நிலைமை  இந்­நாட்டு முஸ்லிம் மக்­களின் இயல்பு வாழ்க்­கையில் பல­வா­றான நெருக்­கு­வா­ரங்­க­ளையும், அச்­சு­றுத்­தல்­க­ளையும் உரு­வாக்­கி­யி­ருக்­கின்­றன.

பயங்­க­ர­வா­திகள் விட்­டுச்­சென்­றி­ருந்த இடத்­தி­லி­ருந்து இன­வா­திகள் மற்­று­மொரு அடக்­கு­முறை கலா­சா­ரத்­தினை இந்­நாட்­களில் அரங்­கேற்றிக் கொண்­டி­ருக்­கின்­றனர். இதனால் சாதா­ராண அப்­பாவி  முஸ்­லிம்கள்,  பிர­தா­ன­மாக இரண்டு அபா­யங்­க­ளுக்கு ஏக காலத்தில்  முகம் கொடுக்கும் நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர்.

அதி­லொன்­றுதான்   ஏப்ரல் 21ஆம் திக­திக்குப் பின்னர் திட்­ட­மி­டப்­பட்ட வகையில் முஸ்லிம் மக்­களின் மீதும், அவர்­களின்  பொரு­ளா­தா­ரத்தின் மீதும் நடத்­தப்­பட்­டு­வ­ரு­கின்ற இன­வாத அச்­சு­றுத்­தல்­களும்  வன்­மு­றை­க­ளு­மாகும். இன்­னு­மொன்று, ஆதா­ரங்­க­ளே­து­மின்றி வெறும்  சந்­தே­கத்தின் பேரில் நடை­பெறும்  கைது­க­ளாகும்.

இவை இரண்­டுமே சமாந்­த­ர­மான ஓர் உள­வியல் யுத்­தத்­தினை முஸ்­லிம்கள் மீது கடு­மை­யாக  தொடுத்து வரு­கின்­றன.

குரு­நாகல், குளி­யா­பிட்டி, மினு­வாங்­கொட பிர­தே­சங்­களில் கட்­ட­விழ்த்து விடப்­பட்ட வன்­மு­றை­களைத் தொடர்ந்து, ஆளுநர்களான அசாத்­சாலி, ஹிஸ்­புல்லாஹ் உட்­பட அமைச்சர் ரிசாட் பதி­யுதீன் ஆகியோர் பதவி விலக வேண்­டு­மென்ற கோரிக்­கை­யுடன் ரதன தேரரின் தொடர் உண்­ணா­வி­ரதப் போராட்டம் தலதா மாளி­கைக்கு முன்­பாக ஆரம்­பிக்­கப்­பட்­டது.

குறித்த நாட்­களில் அடுத்து என்ன நடக்­குமோ என்ற பயங்­க­ர­மான ஒரு பதற்ற நிலை­மை­யினை நாட்டில் தோற்­று­வித்து, அதன் மூல­மாக கண்டி உட்­பட நாட்டின் பல பாகங்­க­ளிலும் கல­வ­ரங்­களை தோற்­று­விப்­ப­தற்­கான சகல முயற்­சி­க­ளையும் இன­வாத சக்­திகள் மேற்­கொண்­டன. இத­னை­ய­டுத்து, முஸ்லிம் அமைச்­சர்கள், இரா­ஜாங்க, பிர­தி­ய­மைச்­சர்கள்  என அனை­வரும் ஒன்­றி­ணைந்து தங்­க­ளது பத­வி­களை இராஜி­னாமா செய்­தது உண்­மையில் பாராட்­டத்­தக்­கது. அது இந்­நாட்டில் திட்­ட­மிட்டு அரங்­கேற்­றப்­ப­ட­வி­ருந்த இன­வாத அழி­வு­களை தோல்­வி­ய­டையச் செய்­தது.

அதன் பின்­ன­ரான தேசிய அர­சியல் களம் முற்­றிலும் மாறு­பட்­ட­தாக இப்­பொ­ழுது மாறி­யி­ருக்­கி­றது.

அமைச்­சர்­களின் ஒட்­டு­மொத்த இரா­ஜி­னாமா முழு உலகின் கவ­னத்­தி­னையும் ஈர்த்­துள்­ளது. இதனால் இலங்கை அரசு நாளுக்கு நாள் பல கண்­ட­னங்­க­ளுக்கும், அழுத்­தங்­க­ளுக்கும் ஆட்­பட்டு வரு­கின்­றது. இந்த நிலை­மை­யினை தவிர்க்­கு­முக­மாக இப்­பொ­ழுது அமைச்­சர்­க­ளையும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும் மீள தமது பத­வி­களில் இணைந்து கொள்­ளு­மாறு, மகா­நா­யக்க தேரர்கள் உட்­பட பலரும் அழைப்பு விடுத்து வரு­கின்­றனர்.

அதே சமயம் அர­சாங்­கத்தின் பணிப்­பு­ரைக்கு அமை­வாக உட­ன­டி­யாக விசா­ர­ணை­களை மேற்­கொண்டு, குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள அர­சியல் தலை­மை­களின் விவ­கா­ரங்­களை கையாள  விசேட குழுக்­களும் நிய­மிக்­கப்­பட்டு விசா­ர­ணை­களும் துரி­தப்­ப­டுத்­தப்­பட்டு  வரு­கின்­றன.

‘ஒரு மாத காலத்­திற்குள் அனைத்தும் தெளி­வு­ப­டுத்­தப்­பட்டு, இதற்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­படல் வேண்டும்’ என முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களால் வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கி­றது. இதுவும் உண்­மையில் வர­வேற்­கத்­தக்க ஒரு விட­மே­யாகும்.

எனினும், இங்கு அனை­வரும் கவ­னத்தில் கொள்­ள­வேண்­டிய மற்­று­மொரு பாரிய விடயம் உள்­ளது. அதுதான் 21ஆம் திக­திக்குப் பின்னர் சந்­தே­கத்தின் பெயரில் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள  நூற்­றுக்­க­ணக்­கான  சாதா­ரண மக்­களின் விடு­தலை விவ­கா­ர­மாகும். தற்­கொலைக் குண்­டுத்­தாக்­குதல் இடம்­பெற்று சுமார் ஒன்­றரை மாதம் கடந்­துள்ள நிலையில் இவ்­வாறு கைது செய்­யப்­பட்ட பலரும் இது­வரை எது­வித முறை­யான விசா­ர­ணை­க­ளு­மின்றி தொடர்ந்தும் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இவர்­களில் பலர் சாதா­ர­ண­மாக குர்ஆன் பிர­தி­களை வைத்­தி­ருந்­த­தற்­கா­கவும், சமை­ய­லுக்கு பயன்­ப­டுத்தும் கத்­தி­களை வைத்­தி­ருந்­த­தற்­கா­கவும், கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக உல­க­வ­ரை­படம் வைத்­தி­ருந்தார் என்ற குற்­றச்­சாட்­டிலும் , பௌத்த மதத்தை அவ­ம­திக்கும் சின்­னங்­க­ளை­யு­டைய ஆடை அணிந்­தி­ருந்தார் என்­பன போன்ற சிறிய சிறிய கார­ணங்­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

அது மாத்­தி­ர­மன்றி இவ்­வாறு கைது செய்­யப்­ப­டு­கின்­ற­வர்­களை  உட­னடிப் பிணையில் விடு­விக்க முடி­யா­த­வாறும், அவர்கள் தொடர்­பான விட­யங்­களில் மஜிஸ்ட்ரேட் நீதி­மன்­றங்­களில் பிணை பெற  முடி­யா­த­வாறும் பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் மற்றும் ICCPR சட்­டங்­க­ளுக்கு கீழால்   அவர்­க­ளுக்­கான வழக்­குகள் பதி­வு­செய்­யப்­பட்­டுள்­ளன.

இதனால்  இவ்­வா­றான கைது­களை எப்­படிக் கையாள்­வது? இது தொடர்­பான முறைப்­பா­டு­களை யாரிடம் தெரி­விப்­பது? இவர்கள் தரப்பு நியா­யங்­களை எப்­படி நிரூ­பிப்­பது? இவர்­களை எப்­படி விடு­விப்­பது? என திக்­குத்­தெ­ரி­யாத நிலையில் இன்று கைது செய்­யப்­பட்­ட­வர்­களின் குடும்­பங்கள் நாள்­தோறும் நீதி­மன்ற வளா­கங்­க­ளுக்கும் பொலிஸ் நிலை­யங்­க­ளுக்­கு­மாக அலைந்து திரி­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது.

புனித ரமழான் மாதத்­திலும் கூட பல ஏழைத்­தாய்­மார்கள் இவ்­வாறு தங்­க­ளது குழந்­தை­க­ளுடன் கண்­ணீரும் கம்­ப­லை­யு­மாக அலைந்த காட்சி அனை­வ­ரையும் கண்­க­லங்­கச்­செய்­தி­ருந்­தது.  எனினும் இவ்­வாறு பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­களின் பிரச்­ச­ினை­களை உட­ன­டி­யாகத் தீர்க்கும் வகையில் இது­வரை எவ்­வித காத்­தி­ர­மான  முயற்­சி­க­ளையும் அர­சாங்கம் மேற்­கொண்­ட­தாகத் தெரி­ய­வில்லை.

இன்று முஸ்லிம் அர­சியல் தலை­மை­க­ளு­டைய விட­யங்­களை விரை­வாக முடி­விற்கு கொண்­டு­வரும் வகையில் இவ்­வாறு விசா­ரணை நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­து­வ­ரு­வது போலவே, அர­சாங்கம் மக்­க­ளு­டைய விட­யங்­க­ளையும் விரை­வாக கையா­ளவும்  விசேட குழுக்­களை அமைக்க வேண்டும். இதனை மிக முக்­கிய நிபந்­த­னை­யாக எமது அர­சியல் பிர­தி­நி­திகள் முன்­வைப்­ப­தோடு, இது தொடர்­பான தொடர் அழுத்­தங்­க­ளையும் சாத்­தி­ய­மான அனைத்து வழி­க­ளிலும் கொடுக்க வேண்டும்.

அரசும், அர­சியல் தலை­மை­களும் மக்­க­ளுக்­கா­கவே பணி­யாற்­று­கின்­றன. மக்­க­ளுக்­கா­கவே நிர்­மா­ணிக்­கப்­ப­டு­கின்­றன. மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­களை தீர்க்­காது அர­சியல் தலை­மை­க­ளு­டைய பிரச்­சி­னை­களை மாத்­திரம் தீர்ப்­ப­தனால் எதிர்­பார்க்­கின்ற அமை­தியை நாட்டில் ஏற்­ப­டுத்த முடி­யாது.

இன்று இவ்­வாறு கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்­க­ளி­னதும் அவர்­க­ளது குடும்­பங்­க­ளி­னதும் இயல்பு வாழ்க்கை வெகு­வாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலைமை தொடர்ந்தும் நீடிக்கும் பட்சத்தில் இக்குடும்பங்கள் பல வழிகளிலும் விரக்தியான மனோ நிலைக்கு தள்ளப்படுவர்.

பயங்கரவாதத்திற்குள் நாட்டை மீண்டும் தள்ள நினைக்கும் சக்திகளுக்கு இது சாதகமாக அமைந்துவிடும் என்ற அபாயமும் இங்கு கவனிக்கப்படல் வேண்டும்.எனவே இது தனிப்பட்ட குடும்பங்களுக்கன்றி ஒட்டுமொத்த நாட்டிற்குமே அச்சுறுத்தலான விடயமாகும்.

எனவே, விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கான விஷேட குழுக்களை அமைத்து , விஷேட பொறிமுறைகளை வகுத்து  கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி மக்கள் அனைவரையும்  உடனடியாக விடுவிக்க அரசாங்கம்  நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்த  அவசர வேண்டுகோள் ஒன்றினை  நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அனுப்பி வைப்பதோடு சர்வதேச இராஜதந்திரிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளிடமும் இதுபற்றி வலியுறுத்தி  அவர்களின் ஒத்துழைப்புகளையும்  பெறுவதற்கான  முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.