ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்த முஸ்லிம் கட்சிகள் ஆட்சியமைப்பதற்கு யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து பரிசீலனை செய்து வருகின்றன. நேற்று இரவு முஸ்லிம் காங்கிரஸ் அதனது உயர்பீடத்தை கூட்டி இது குறித்து கலந்தாலோசித்தது. அத்துடன், அகில இலங்கை மக்கள் காங்கிஸ் கட்சி மட்டத்தில் தொடர்ந்தும் ஆலோசித்து வருகின்றது.
மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் நேற்று இரவு 8 மணிக்கு பின்னர் இவ்வாறு கட்சியின் உயர் பீடம் கூடியது. இதன்போது, தமது கட்சி மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆதரவளிப்பதா அல்லது தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதா என ஆராயப்பட்டது.
அத்துடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மட்டத்தில் தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருகின்றன. இந்நிலையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கட்சி உயர்பீட உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் சட்டவல்லுனர்களுடன் தீவிரமாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றார். இது இவ்வாறிருக்க, நேற்று முன்தினம் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் ஐக்கிய தேசிய முன்னணி அலரி மாளிகையில் நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ரணில் விக்கிரம சிங்கவிற்கு தொடர்ந்து ஆதரவளிக்கப்போவதாக தெரிவித்தனர்.
ரவூப் ஹக்கீம்
இன்று அரசியல் யாப்பு மீறல் ஒன்று நடைபெற்றிருக்கிறது. இதனால், அரசியல் ரீதியில் ஸ்திரத்தன்மை காணப்படுவதால் நாட்டில் குழப்பகரமான சூழ்நிலையொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரம சிங்க பெரும்பான்மையை இழந்துவிட்டார் என்பதற்கான நியாயமான காரணங்கள் எதுவும் கூறப்படவில்லை. இவ்வாறானதொரு நிலையில் பிறிதொரு பாராளுமன்ற உறுப்பினரை பிரதமராக வர்த்தமானி அறிவித்தல் விடுத்துள்ளமை சட்டத்துக்கு முரணானது. எனவே, உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டவேண்டும்.
முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்தும் தனித்தும் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டது. எனவே நாம் தொடர்ந்தும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்திருக்கிறோம்.
ரிஷாட் பதியுதீன்
ஐக்கிய தேசிய முன்னணியில் பங்காளிக்கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சம்பவமானது எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதை நாம் எதிர்பார்க்கவில்லை. பாராளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையை பெற்றவர்கள்தான் பிரதமர் பதவி வகிக்க வேண்டும். எனவே, பாராளுமன்றத்தை கூட்டுகின்றபட்சத்தில் இதற்கான தீர்வை பெறலாம். நாம் தொடர்ந்தும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து செயற்பட தீர்மானித்திருக்கிறோம் என்றார்.
இவ்வாறு இரு முஸ்லிம் கட்சித் தலைவரும் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை குறிப்பிட்டிருந்தநிலையில் நேற்றை தினம் கட்சி மட்டத்தில் மீளவு