அரசாங்க ஊழியர்களின் ஆடை விவகாரம்: சுற்று நிருபத்தை அமுல்படுத்தாதீர்

பிரதமரின் செயலாளர் கடிதம்

0 769

அர­சாங்க ஊழி­யர்­களின் ஆடை தொடர்­பாக பொது நிர்­வாக அமைச்­சினால் வெளி­யி­டப்­பட்ட 13/2019 ஆம் இலக்க 29.05.2019 ஆம் திக­தி­யிட்ட சுற்று நிரு­பத்தை அமுல்­ப­டுத்த வேண்­டா­மென பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் செய­லாளர் ஈ.எம்.எஸ்.பி. ஏக்­க­நா­யக்க பொது நிர்­வாகம் மற்றும் அனர்த்த முகா­மைத்­துவம், கிரா­மிய பொரு­ளா­தார விவ­கார அமைச்சின் செய­லாளர் ஜே.ஜே. ரத்­ன­சி­ரிக்கு நேற்று கடித மூலம் அறி­வித்­துள்ளார்.

இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் கலா­நிதி என்.டி. உட­கம பொது நிர்­வாக அமைச்சின் செய­லா­ள­ரான தங்­க­ளுக்கு 03/06/2019 ஆம் திகதி அனுப்பி வைத்­துள்ள சிபா­ரி­சு­க­ளுக்கு அமைய 13/2019 ஆம் இலக்க சுற்று நிருபம் உட­ன­டி­யாக வாபஸ் பெற்­றுக்­கொள்­ளப்­பட வேண்டும் என்­பதை கவ­னத்திற் கொள்­ளு­மாறு வேண்­டிக்­கொள்­கிறேன் எனவும் பிர­த­மரின் செய­லாளர் தெரி­வித்­துள்ளார். இதே­வேளை, மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் உட­கம பொது நிர்­வாக அமைச்சின் செய­லா­ள­ருக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் பின்­வ­ரு­மாறு தெரி­விக்கப்பட்டுள்ளதாவது, அர­சாங்க அலு­வ­ல­கங்­களில் பாது­காப்­பினை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக பொது நிர்­வாக அமைச்­சினால் வெளி­யி­டப்­பட்ட 13/2019 ஆம் இலக்க 29/05/2019 ஆம் திகதியிடப்­பட்ட சுற்­று­நி­ருபம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் கவ­னத்­திற்குக் கொண்டு வரப்­பட்­டது. ஆணைக்­கு­ழு­வுக்கு பல முறைப்­பா­டுகள் கிடைத்­தன. இச்­சுற்­று­நி­ருபம் அரச ஊழி­யர்­களின், குறிப்­பாக பெண் ஊழி­யர்­களின் அடிப்­படை உரிமை மீறல் என முறைப்­பா­டுகள் கிடைத்­தன.

சுற்­று­நி­ரு­பத்தை ஆராய்ந்த பின் மனித உரிமை ஆணைக்­குழு குறிப்­பிட்ட சுற்று நிருபம் ஊழி­யர்­க­ளி­னது அடிப்­படை உரி­மை­களை மீறி­யுள்­ள­மையை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ள­துடன் அச்­சுற்­று­நி­ருபம் உட­ன­டி­யாக வாபஸ் பெற்றுக் கொள்­ளப்­பட வேண்­டு­மென பரிந்­து­ரைக்­கி­றது. ஆண் அரச ஊழி­யர்கள் காற்­சட்­டை­யுடன் மேற்­சட்டை அல்­லது தேசிய உடையும் பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் சாரி அல்­லது ஒஸரி அணிய வேண்­டு­மெ­னவும் சுற்று நிருபம் தெரி­விக்­கி­றது. கர்ப்­பிணி ஊழி­யர்கள் குறிப்­பிட்ட ஆடைக்கு மேலால் மேல­திக உடை­யொன்று அணி­யலாம் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அது அவர்­க­ளது மத அடை­யாள ஆடை­யாக இருக்­க­லா­மெ­னவும் முகம் மறைக்­கப்­பட்­டி­ருக்கக் கூடா­தெ­னவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் அந்த மேல­திக ஆடை என்­பது என்­ன­வென தெளி­வு­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

ஆடை தொடர்­பான இந்த சட்ட ஒழுங்­குகள் அரச அலு­வ­ல­கங்­க­ளுக்கு சேவை­யினைப் பெற்­றுக்­கொள்ள வரு­ப­வர்­க­ளுக்கும் அமுலில் உள்­ளது. இந்த சுற்று நிரு­பத்­தினால் ஆண் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்குப் பாதிப்­பில்லை. ஆனால் பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் ஸ்கர்ட், பிளவ்ஸ், அபாயா, சல்வார் கமீஸ் போன்ற ஆடை­களை அணிந்து வரு­கி­றார்கள். இந்த சுற்­று­நி­ரு­பத்­தினால் பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் பல அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு உள்­ளா­கு­வார்கள். முஸ்­லிம்கள் தங்கள் கலா­சார ஆடை அணிய முடி­யாத நிலை உரு­வாகும். ஆரம்­பத்தில் பாது­காப்பு கார­ணங்­க­ளுக்­காக முழு­மை­யாக முகத்தை மறைக்கும் ஆடைக்கு தடை விதிக்­கப்­பட்­டது. இந்­நி­லையில் அரச அலு­வ­ல­கங்­களில் பாது­காப்பு கருதி புதிய சுற்­று­நி­ருபம் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

எவ்­வா­றெ­னினும் அர­ச­துறை ஊழி­யர்­க­ளுக்கும் சேவை­களைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக அரச அலு­வ­ல­கங்­க­ளுக்கு வருகை தரு­ப­வர்­க­ளுக்கும் இவ்­வா­றான கட்­டாய ஆடையை அமுல்­ப­டுத்­து­வது விவே­க­மற்ற திட்ட ஒழுங்­கற்ற, அர­சி­ய­ல­மைப்பின் 12 (1) பிரி­வினை மீறு­கிற செயற்­பா­டாகும்.

அத்­தோடு பெண்கள் தங்­க­ளுக்கு விருப்­ப­மான ஆடையைத் தெரி­வு­செய்ய முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ள­துடன் குறிப்­பாக சிறு­பான்மைப் பெண்­க­ளுக்கு பாதிப்­பாக அமைந்­துள்­ளது.

அத்­தோடு இந்த சுற்­று­நி­ருபம் கார­ண­மாக குறிப்­பாக சிறு­பான்மை சமூ­கத்தைச் சேர்ந்த சாரி மற்றும் ஒசரி அணி­யாத பெண்கள் அரச தொழில்­க­ளி­லி­ருந்தும் விலகிச்செல்லும் நிலைமை ஏற்படும் அல்லது அரச துறையில் தொழில் வாய்ப்புகளை எதிர்பார்க்காத நிலைமை ஏற்படும். இது சுதந்திரமாக தொழிலில் ஈடுபடுவதற்கான உரிமையினை மீறுவதாகவும் தெரிவு செய்யும் உரிமையினை மீறுவதாகவும் அமையும். குறிப்பிட்ட சுற்றுநிருபம் அனைத்துச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு, குறிப்பாக சாரி மற்றும் ஒஸரி அணியாத பெண்களுக்கு பல அசௌகரியங்களை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.