எனது இரா­ஜி­னாமா மூலம் இலங்கை முஸ்லிம் சமூகம் பாது­காக்­கப்­படும் என நம்­பு­கிறேன்

இரா­ஜி­னாமாக் கடி­தத்தில் ஹிஸ்­புல்லாஹ் சுட்­டிக்­காட்டு

0 845

நான் எனது பத­வியை இரா­ஜி­னாமாச் செய்­யா­விட்­டாலோ அல்­லது பதவி நீக்கம் செய்­யப்­ப­டா­விட்­டாலோ என்னைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் முஸ்லிம் சமூ­கத்தின் உயிர்­க­ளையும் உடை­மை­க­ளையும் அழித்­தொ­ழிப்­ப­தற்­கான கார­ண­மாக அமைந்து விடக்­கூ­டிய வகை­யி­லான அச்­சு­றுத்­தல்­களை அவ­தா­னிக்க முடி­கி­றது. என­வேதான் இந்த இரா­ஜி­னாமா எனது சமூ­கத்தின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் வகையில் உங்­க­ளது கைகளை பலப்­ப­டுத்தும் என நான் மிக உறு­தி­யாக நம்­பு­கிறேன் என கிழக்கு மாகாண ஆளுநர் பத­வியை இரா­ஜி­னாமாச் செய்­தமை தொடர்பில் ஜனா­தி­ப­திக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். அக் கடி­தத்தில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது, 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்­பெற்ற பயங்­க­ர­வாத தாக்­கு­த­லுக்கு எதி­ராக உல­மாக்­களும் முஸ்லிம் சமூ­கமும் தமது கண்­ட­னங்­களை பாரிய அளவில் வெளிப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்கும் நிலையில் முஸ்லிம் சமூ­கத்தை மேலும் அவ­மா­னப்­ப­டுத்தி மலி­னப்­ப­டுத்தும் வகையில் மிக நுண்­ணி­ய­மாகத் திட்­ட­மி­டப்­ப­டு­கின்ற செயற்­பா­டுகள் மூலம் முஸ்லிம் சமூ­கத்தை அச்­ச­மான சூழ்­நி­லையில் மூழ்­க­டிக்­கின்ற சூழ்­நி­லை­களை அவ­தா­னிக்க முடி­கி­றது.

ஆளு­ந­ராக நேர்­மை­யா­கவும்,விசு­வா­ச­மா­கவும் சகல சமூ­கங்­க­ளி­னது நலன்­களை பேணும் வகை­யிலும் நாட்டின் நலன் கரு­தியும் சேவை­யாற்­றினேன். எனினும் எனது சமூகம் மிக மோச­மாக குறி வைக்­கப்­ப­டு­வ­துடன் இன­வாத சக்­திகள் எவ்­வித அடிப்­ப­டை­க­ளு­மின்றி நான் இரா­ஜி­னாமா செய்ய வேண்டும் என கோரு­கின்­றன. அத்­தோடு நான் எனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­யா­விட்­டாலோ அல்­லது பதவி நீக்கம் செய்­யப்­ப­டா­விட்­டாலோ நான் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் முஸ்லிம் சமூ­கத்தின் உயிர்­க­ளையும் உடை­மை­க­ளையும் அழித்­தொ­ழிப்­ப­தற்­கான கார­ண­மாக அமைந்­து­விடக் கூடிய வகை­யி­லான அச்­சு­றுத்­தல்­களை அவ­தா­னிக்க முடி­கி­றது. நான் இரா­ஜி­னாமா செய்­யா­விட்­டாலோ அல்­லது பதவி நீக்கம் செய்­யா­விட்­டாலோ எனது சமூ­கத்தின் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­மாட்­டாது என்­பதும் என்­ப­தையும் நான் உண­ரத்­த­லைப்­பட்­டுள்ளேன்.

எனவே, இவ்­வா­றா­ன­தொரு சூழ்நிலையில் நான் எனது சமூகத்தின் நன்மை கருதி எனது இராஜினாமாவை சமர்ப்பிக்கிறேன். எனது இந்த இராஜினாமா எனது சமூகத்தின் பாதுகாப்பை உறு­திப்­ப­டுத்தும் வகையில் உங்­க­ளது கைகளை பலப்­ப­டுத்தும் என நான் மிக உறு­தி­யாக நம்­பு­கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.