‘ஹலால்’ சான்றிதழுக்கு எதிரான குற்றச்சாட்டு; முறையாக விசாரிக்குக

ஹலால் சான்றுறுதி பேரவை

0 674

இலங்­கையில் ஹலால் சான்­று­றுதி பேரவைக்கும் (HAC) ஹலால் சான்­றிதழ் நட­வ­டிக்­கை­க­ளுக்கும் எதி­ராக கடு­மை­யான குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்தக் குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் சுதந்­தி­ர­மா­னதும் அதி­கார முடை­ய­து­மான ஜனா­தி­பதி விசா­ர­ணைக்­குழு அல்­லது ஆணைக்­கு­ழு­வொன்று நிய­மிக்­கப்­பட்டு விசா­ரணை நடத்தி விசா­ரணை அறிக்கை நாட்டு மக்கள் அனை­வ­ருக்கும் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். அப்­போது இதன் உண்மைத் தன்­மையை அவர்கள் அறிந்­து­கொள்­வார்கள் என ஹலால் சான்­று­றுதி பேரவை வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கையில் தெரி­வித்­துள்­ளது.

ஹலால் சான்­று­றுதி பேரவையின் (HAC) பணிப்­பா­ளரும் பிர­தம நிறை­வேற்று அதி­கா­ரி­யு­மான அலி பத்­தா­ரலி கையொப்­ப­மிட்டு வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

‘ஹலால் சான்­று­றுதி மன்­றுக்கும் ஹலால் சான்­றிதழ் நட­வ­டிக்­கை­க­ளுக்கும் தொடர்ந்து கடு­மை­யான குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. கல­கொட அத்தே ஞான­சார தேரர் இற்­றைக்கு 6 வரு­டங்­க­ளுக்கு முன்பு 2013 இல் இந்தக் குற்­றச்­சாட்­டு­களை மிகவும் அழுத்­த­மாகப் பகி­ரங்­க­மாக முன்­வைத்தார்.

இந்த ஆதா­ர­மற்ற குற்­றச்­சாட்­டுகள் தொடர்ந்தும் இருந்து கொண்­டி­ருக்­கின்­றன. குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பான உண்மை நிலை உறுதி செய்­யப்­ப­டா­த­தி­னா­லேயே இந்த சந்­தேகம் தொடர்ந்தும் நில­வு­கி­றது.

அன்று முதல் பல்­வேறு வேறு குழுக்­களும், தனி­யார்­களும் காலத்­துக்­காலம் இந்தக் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்து பர­ப­ரப்­பான நிலை­மை­யினை உரு­வாக்­கு­கி­றாகள். அர­சியல் ரீதி­யான சம்­ப­வங்கள் நாட்டில் நிக­ழும் போது ஹலால் விவ­கா­ரமும் அதற்­கெ­தி­ரான குற்­றச்­சாட்­டு­களும் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்­தப்­பட்ட ஈஸ்டர் ஞாயிறு பயங்­க­ர­வாத தாக்­கு­தலை யடுத்து முஸ்­லிம்­களின் முழு­வாழ்க்கை முறைக்கும் நட­வ­டிக்­கை­க­ளுக்கும் சவால்கள் எழுந்­துள்­ளன. இவற்றுள் ஹலால் சான்­றி­தழும் உள்­ள­டங்­கு­கி­றது. இது தவிர்க்க முடி­யாத ஒன்­றாக உள்­ளது.

இந்த நிலை­மை­யி­னை­ய­டுத்து தற்­போ­தைய சூழலில் ஹலால் சான்­றி­த­ழுக்கு எதி­ராக பொது மக்­களின் கருத்­தினைத் திருப்­பு­வ­தற்கு மிகவும் சாத­க­மான நிலை­யா­கி­யுள்­ளது.

நாட்டின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல், மக்­களின் உயிர்ப் பலிகள் அனைத்து சமூ­கத்தின் மத்­தி­யிலும் வேத­னை­யையும் மன ­உளைச்­ச­லையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

ஹலால் சான்­றி­த­ழுக்கு எதி­ரா­கவும் ஹலால் சான்­று­றுதி பேரவைக்கு எதி­ரா­கவும் எதிர்ப்பு வெளி­யிட்டு ஒமல்பே சோபித தேரர் கடந்த மே மாதம் 13 ஆம் திகதி நுகர்வோர் விவ­கார அதி­கார சபைக்கு கடி­த­மொன்­றினைக் கைய­ளித்தார்.

அந்தக் கடி­தத்தில் பல கடு­மை­யான குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

அவற்றில் மிகவும் கடு­மை­யான குற்­றச்­சாட்டு. ஹலால் சான்­றிதழ் வழங்­கு­வ­தற்கு அளவு கடந்த கூடிய கட்­டணம் அற­வி­டப்­ப­டு­கி­றது எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்ள தாகும்.

இந்த கூடிய கட்­டணம் முஸ்லிம் அல்­லாத நுகர்­வோ­ருக்கே அற­வி­டப்­ப­டு­வ­தா­கவும் பில்­லியன் கணக்­கான வரு­மானம் பெற்றுக் கொள்­ளப்­ப­டு­வ­தா­கவும் குறிப்­பிடப் பட்­டுள்­ளது. இந்த நிதி பள்­ளி­வா­சல்கள் நிர்­மா­ணிப்­ப­தற்கும் மற்றும் தீவி­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்கு நிதி வழங்­கு­வ­தற்­குமே பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது என முறைப்­பாட்டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

எனவே, இவ்­வா­றான குற்­றச்­சாட்­டு­களை முழு­மை­யாக விசா­ரிப்­ப­தற்கு சுதந்­தி­ர­மான அதி­கா­ர­மிக்க ஜனா­தி­பதி விசா­ர­ணை­யொன்று நடத்­தப்­ப­ட­வேண்டும் அல்­லது ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வொன்று நிய­மிக்­கப்­பட வேண்டும். விசா­ரணை அறிக்கை வெளி­யி­டப்­பட்டு ஹலால் விவ­கா­ரத்தின் உண்மை நிலை பகி­ரப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

ஹலால் சான்­று­றுதி நிறு­வனம் ஜனா­தி­பதி மைத்திரிபால சிறிசேனவை சுதந்திரமானதும் நேர்மையானதுமான விசாரணையொன்றினை நடத்துமாறு வேண்டிக் கொள்கிறது.

ஜனா­தி­பதி விசா­ர­ணைக்­குழு அல்­லது ஆணைக்­குழு ஹலால் சான்­று­றுதி நிறு­வனம் தொடர்பில் விசா­ரணை நடத்தி ஆய்வு செய்­வதன் மூலம் தற்­போ­தைய பிரச்­சி­னைகள் அல்­லது சமூக அமை­தி­யின்­மையின் வீரி­யத்தைத் தடுக்­கலாம். இல்­லையேல் அது முழு நாட்­டுக்கும் நாட்டு மக்­க­ளுக்கும் பொருளாதாரத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.