பிறை தீர்மானிக்கும் மாநாடு நாளை மாலை

0 658

நோன்புப் நெருநாள் தின­மான ஷவ்வால் மாதத்­திற்­கான தலைப்­பி­றையைத் தீர்­மா­னிக்கும் மாநாடு நாளை செவ்­வாய்க்­கி­ழமை மஃரிப் தொழு­கையைத் தொடர்ந்து கொழும்பு பெரி­ய­பள்­ளி­வா­சலில் இடம்­பெ­ற­வுள்­ளது.

மேற்­படி பள்­ளி­வா­சலின் நிரு­வா­கிகள், பிறைக்­குழு உறுப்­பி­னர்கள், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பிறைக்­குழு உறுப்­பி­னர்கள், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள அதி­கா­ரிகள், மேமன், ஹனபி பள்­ளி­வாசல் நிரு­வா­கிகள் ஆகியோர் மெள­லவி அப்துல் ஹமீத் பஹ்­ஜியின் தலை­மையில் தலைப்­பி­றையைத் தீர்­மா­னிக்கும் மாநாட்டில் கலந்து கொள்­ள­வுள்­ளனர்.

குறித்த தினம் தலைப்­பி­றையைக் கண்­ட­வர்கள் 011 2432110, 077 7140939, 077 7316415 ஆகிய தொலை­பேசி இலக்­கங்­க­ளுடன் தொடர்பு கொண்டு அறி­விக்­கும்­படி கேட்­கப்­ப­டு­கின்­றனர்.

மேற்­படி மாநாட்டில் எடுக்­கப்­படும் தீர்­மானம் இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­பன முஸ்லிம் சேவை­யூ­டா­கவும் ஏனைய ஊட­கங்கள் மூல­மா­கவும் மாநாட்டுத் தலை­வ­ரினால் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­படும். தலைப்­பிறை தொடர்­பாக ஊர்ஜிதமற்ற தகவல்களையோ வதந்திகளையோ பகிரப்படுவதைத் தவிர்க்குமாறும் மக்கள் கேட்கப்படுகின்றனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.