ரிஷாத், ஹிஸ்புல்லாஹ், அசாத்சாலி இன்று நண்பகலுக்கு முன் பதவி நீக்கப்பட வேண்டும்

இன்றேல் நாடு முழுவதும் திருவிழா என்கிறார் ஞானசார

0 616

அமைச்சர் ரிசாத் பதி­யு­தீனும், கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்­புல்­லாஹ்வும், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியும் நாளை (இன்று) பகல் 12 மணிக்கு முன்பு பதவி நீக்­கப்­பட வேண்டும். இல்­லையேல்   அவர்­க­ளா­கவே பதவி விலக வேண்டும். 12 மணி­வ­ரை­யுமே காலக்­கெடு இல்­லை­யென்றால் நாடு முழு­வதும் திரு­வி­ழாவை காண  வேண்டி நேரிடும் என பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார்.

நேற்று கண்­டிக்கு விஜயம் செய்த ஞான­சார தேரர், கண்டி ஸ்ரீ தலதா மாளி­கைக்கு விஜயம் செய்து தலதா மாளிகை வளா­கத்தில் சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லியே ரதன தேரரைச் சந்­தித்து அவ­ரது போராட்­டத்­திற்கு ஆத­ரவு தெரி­வித்தார். அதன்­பின்பு ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு கருத்து வெளி­யி­டு­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து வெளி­யி­டு­கையில்;

‘அத்­து­ர­லிய ரதன தேரர் நாட்­டி­னதும் நாட்டு மக்­க­ளி­னதும் நன்மை கரு­தியும் முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தத்தை நாட்­டி­லி­ருந்தும் துடைத்­தெ­றி­வ­தற்­கா­க­வுமே குறிப்­பிட்ட மூவ­ரையும் பதவி விலக்கக்  கோரி போராட்­டத்தில் இறங்­கி­யுள்ளார். இது நியா­ய­மான போராட்­ட­மாகும். சிறை சென்ற எனக்கு மரணம் ஒரு பொருட்­டல்ல. எனது உயிரைக் கொடுத்­தேனும் நாட்டை முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தத்­தி­லி­ருந்தும் மீட்­டெ­டுப்பேன். நாட்டு மக்கள் தங்­க­ளுக்குள் உள்ள கருத்து வேறு­பா­டு­களைப் புறந்­தள்ளி முஸ்லிம் பிரச்­சி­னையில் ஒன்­றி­ணைய வேண்டும்.

அமைச்சர் ரிசாத் பதி­யுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்­புல்லாஹ் மூவ­ரையும் அர­சாங்கம் திங்­கட்­கி­ழமை (இன்று) 12 மணிக்கு முன்பு பதவி விலக்­க­வேண்டும். அர­சாங்கம் தவ­றினால் நாடு முழு­வதும் பெளத்த தேரர்கள் போராட்­டத்தில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வார்கள்.

முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தத்­திற்கு எதி­ரான போராட்­டத்தில் எந்த அர­சியல் கட்­சி­யு­டனும் நிபந்­த­னை­க­ளின்றி இணைந்து கொள்­வ­தற்கு தயா­ராக இருக்­கிறேன்’  என்றார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லியே ரதன தேரர் கடந்த வெள்­ளிக்­கி­ழமை அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் மற்றும் ஆளு­நர்கள் அசாத் சாலி, ஹிஸ்­புல்லாஹ் ஆகி­யோரை உடன் பதவி விலக்­கக்­கோரி சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை ஆரம்­பித்­தார்.

எனது உயிரைக் கொடுத்­தேனும் நாட்டைக் காப்­பாற்­று­வ­தற்கு நான் தீர்­மா­னித்து விட்டேன். அடிப்படைவாதிகளான ரிசாத் பதியுதீன், அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் மூவரையும் ஜனாதிபதி பதவி விலக்குவார் என்ற நம்பிக்கை எனக்குண்டு என அத்துரலியே ரதன தேரர் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.