சுற்று நிரு­பத்தை எதிர்த்து அடிப்­படை உரிமை மீறல் மனு

மனித உரிமை ஆணைக்­கு­ழு­விலும் முறைப்­பா­டுகள்; குரல்கள் இயக்கம் நட­வ­டிக்கை

0 755

பொது நிர்­வாகம் மற்றும் அனர்த்த முகா­மைத்­துவ அமைச்­சினால் கடந்த வெள்­ளிக்­கி­ழமை அரச அலு­வ­ல­கங்­களில் பணி­பு­ரியும் ஊழி­யர்­க­ளுக்­கான ஆடை ஒழுங்­கு­முறை தொடர்பில் வெளி­யி­டப்­பட்ட சுற்று நிரு­பத்தை எதிர்த்து அடிப்­படை உரிமை மீறல் மனு­வினைத் தாக்கல் செய்ய நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாக ‘குரல்கள் இயக்கம்’ தெரி­வித்­துள்­ளது.

குறித்த சுற்று நிரு­ப­மா­னது ஊழி­யர்­களின் அடிப்­படை உரி­மை­களை மீறி­யுள்­ளது என்ற அடிப்­ப­டையில் உச்ச நீதி­மன்­றத்தில் அடிப்­படை உரிமை மீறல் வழக்­கினைத் தாக்கல் செய்­வ­தற்கும் இந்த சுற்று நிரு­பத்­திற்கு எதி­ரான இடைக் காலத் தடையைக் கோரி மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­திலும் எழுத்­தாணை மனு­வொன்­றையும் தாக்கல் செய்­வ­தற்­கான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொண்­டுள்­ள­தாக குரல்கள் இயக்கம் தெரி­வித்­துள்­ளது. குறிப்­பிட்ட சுற்று நிரு­ப­மா­னது பெண் ஊழி­யர்கள் சேலை அல்­லது ஒசரி அணிந்துஅதற்கு மேலால் மத அடை­யா­ளங்­களைக் கொண்ட ஆடை­களை அணி­யலாம் என்று குறிப்­பிட்­டி­ருந்­தது. இது சேலை இல்­லாத ஆடை­களை அணிந்து கொண்டு அலு­வ­ல­கங்­க­ளுக்கு வரும் ஊழி­யர்­களை அதிக சங்­க­டத்­திற்கு உள்­ளாக்­கி­யது மாத்­தி­ர­மல்­லாமல் முஸ்லிம் பெண் ஊழி­யர்கள் ஹபாயா அணிந்து வேலைக்குச் செல்­ல­மு­டி­யாத ஒரு­நி­லையை தோற்­று­வித்­தது.

இந்தச் சுற்று நிரு­ப­மா­னது இலங்கை அர­சியல் யாப்பில் உறு­தி­செய்­யப்­பட்ட அடிப்­படை உரி­மை­க­ளையும் குறிப்­பாக விரும்­பிய மதத்­தையும் விரும்­பிய கலா­சா­ரத்­தையும் பின்­பற்றும் உரி­மைக்கு முர­ணாகக் காணப்­பட்­ட­தனால் இந்த சுற்று நிரு­பத்தின் வலிதான தன்­மையை எதிர்த்து சட்ட நட­வ­டிக்­கை­ககள் எடுக்­கப்­ப­ட­வுள்­ளன.

அது மாத்­தி­ர­மின்றி குறிப்­பிட்ட சுற்று நிரு­பத்­திற்கு எதி­ராக மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் அர­சாங்க பெண் ஊழி­யர்கள் நாட­ளா­விய ரீதியில் முறைப்­பா­டுகள் செய்­வ­தற்­கான முன்­னேற்­பா­டு­க­ளையும் குரல்கள் இயக்கம் மேற்­கொண்­டுள்­ளது.

இச் சந்­தர்ப்­பத்தில் சர்ச்­சைக்­கு­ரிய சுற்­று­நி­ருபம் இரத்­து­செய்­யப்­பட்­ட­தாக அமைச்சர் மத்­து­ம­பண்­டா­ரவை மேற்­கோள்­காட்டி  ஊட­கங்கள் நேற்று செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

இருப்­பினும் அதனை இரத்துச் செய்­தமை தொடர்பில் எந்த உத்­தி­யோ­க­பூர்வ உறு­திப்­பாடும் இல்­லாத நிலையில் தங்­க­ளு­டைய வழ­மை­யான ஆடை­களை அணிந்து அலு­வ­ல­கங்­க­ளுக்குச் செல்­ல­மு­டி­யுமா என்ற கேள்­விக்­கான பதில் இன்னும் கிடைக்­க­வில்லை.

குறிப்­பிட்ட சுற்று நிருபம் ரத்துச் செய்­யப்­பட்­ட­தற்­கான உத்­தி­யோ­க­பூர்வ அறி­வித்தல் வரும் வரைக்கும் அது இன்னும் அமுலில் இருப்பதாகவே கணிக்கப்பட வேண்டும். அதனால் அச் சுற்று நிருபம் ரத்துச் செய்யப்பட்ட உத்தியோகபூர்வ அறிவித்தல் வரும் வரைக்கும் அது அமுலில் இருப்பதாக கருதி அதனை சவால்விடுக்கும் சட்டரீதியான நடவடிக்கைகளை  முன்னெடுத்து வருவதாக குரல்கள் இயக்கம் மேலும் தெரிவித்துள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.