அரச ஊழியர்களின் ஆடைகள் குறித்த சுற்றுநிருபம் இடைநிறுத்தம்

ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலின் பேரிலேயே வெளியிட்டதாக கூறுகிறார் அமைச்சின் செயலாளர்

0 730

பொது நிர்­வாகம் மற்றும் அனர்த்த முகா­மைத்­துவ அமைச்­சினால் கடந்த மே மாதம் 29 ஆம் திக­தி­யி­டப்­பட்டு வெளி­யி­டப்­பட்­டுள்ள அரச ஊழி­யர்­களின் ஆடை தொடர்­பான சுற்று நிருபம் இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளது.

30 வரு­டங்கள் பழைமை வாய்ந்த அரச ஊழி­யர்­களின் ஆடை தொடர்­பான குறித்த சுற்று நிரு­பத்தை மீண்டும் அமுல்­ப­டுத்­து­வ­தற்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எதிர்ப்புத் தெரி­வித்­த­தை­ய­டுத்து சுற்று நிருபம் இடை நிறுத்­தப்­பட்­டுள்­ள­தாக பொது நிர்­வாகம் மற்றும் அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சர் ரஞ்சித் மத்­தும பண்­டார தெரி­வித்­துள்ளார். குறித்த சுற்று நிருபம் தொடர்பில் இன்று திங்­கட்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்ற குழுக்­கூட்­டத்தில் கலந்­து­ரை­யா­டப்­பட்டு தீர்­மானம் ஒன்று எட்­டப்­படும் எனவும் அமைச்சர் ரஞ்சித் மத்­தும பண்­டார தெரி­வித்­துள்ளார்.

அரச ஊழி­யர்­களின் ஆடை தொடர்பில் புதிய சுற்று நிருபம் ஒன்று வெளி­யி­டப்­பட வேண்­டுமா? இன்றேல் வெளி­யி­டப்­பட்­டுள்ள சுற்று நிரு­பத்தில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டுமா? என்­பது தொடர்பில் நாம் கலந்­து­ரை­யாடி தீர்­மா­னிக்­க­வுள்ளோம் எனவும் அவர் கூறினார்.

பொது நிர்­வாக அமைச்சு திங்­கட்­கி­ழமை (இன்று) முதல் அரச ஊழி­யர்­களின் ஆடை தொடர்­பான சுற்று நிரு­பத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு தீர்­மா­னித்­தி­ருந்­தது.

பொது நிர்­வாக அமைச்சு வெளி­யிட்­டுள்ள சுற்று நிரு­பத்­தின்­படி அர­சாங்க உத்­தி­யோ­கத்­தர்கள் கட­மைக்­காக அலு­வ­லக வளா­கத்­துக்குள் வரும்­போது பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் சேலை அல்­லது ஒஸரி (கண்­டியச் சேலை) அணிந்­தி­ருத்தல் வேண்டும். ஆண் உத்­தி­யோ­கத்­தர்கள் காற்­சட்டை மற்றும் மேற்­சட்டை அல்­லது தேசிய உடை அணிந்­தி­ருக்க வேண்டும்.

கடந்த 29 ஆம் திகதி வெளி­யான இந்தச் சுற்று நிரு­பத்தின் படி முஸ்லிம் பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் பாட­சாலை, வங்கி உட்­பட அரச நிறு­வ­னங்­களில் அபாயா அணிந்து கட­மை­யாற்ற முடி­யாத நிலை உரு­வா­கி­யுள்­ளது. இந்த சுற்று நிரு­பமே தற்போது இடை நிறுத்­தப்­பட்­டுள்­ளது.

பொது நிர்­வாக அமைச்சின் செய­லாளர் ஜே.ஜே. ரட்­ண­சிரி கருத்து தெரி­விக்­கையில் ஜனா­தி­பதி செய­லகம் 1989 ஆம் ஆண்டில் வெளி­யி­டப்­பட்­டுள்ள அர­சாங்க உத்­தி­யோ­கத்­தர்­களின் ஆடை தொடர்­பான சுற்று நிரு­பத்தை அமுல்­ப­டுத்­தும்­படி வேண்­டி­ய­தாலே அந்த சுற்று நிரு­பத்தை அமு­லுக்கு கொண்டு வர நாம் தீர்­மா­னித்தோம்.

பொது­வான சட்டம் ஒன்று அமுலில் இருப்­ப­த­னா­லேயே நாம் அந்த பொது­வான ஆடையை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு தீர்­மா­னித்தோம். இதில் மாற்­றங்கள் ஏதும் மேற்­கொள்­வ­தாயின் அமைச்­ச­ர­வையின் அங்­கீ­காரம் பெற்றுக் கொள்­ள­பட வேண்டும்.

அரச அலு­வ­ல­கங்­க­ளிலும் பாட­சா­லை­க­ளிலும் அபா­யா­வுக்கு எதி­ராக ஆர்ப்­பாட்­டங்­களும் எதிர்ப்­பு­களும் உரு­வா­ன­தை­ய­டுத்தே அரச ஊழி­யர்­க­ளுக்­கான ஆடை தொடர்­பான சுற்று நிருபம் வெளி­யிட வேண்­டி­யேற்ப்­பட்­டது.  சில பாட­சா­லை­களில் ஆசி­ரி­யைகள் சாரி அணிந்து வராது அபாயா அணிந்து வந்­ததால் அவர்கள் பாட­சாலை வளா­கத்­துக்குள் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.

இதே­வேளை அர­சாங்கம் பெண் அரச ஊழி­யர்கள் சாரி அல்­லது ஒஸரி அணிந்து கட­மைக்கு வர­வேண்டும் என சுற்று நிருபம் மூலம் நிர்ப்­பந்­திப்­பது நியா­ய­மற்­றது என இலங்கை ஆசி­ரியர் சங்­கத்தின் பொதுச் செய­லாளர் ஜோசப் ஸ்டாலின் தெரி­வித்­துள்ளார்.

பெரும்­பா­லான பெண் அரச ஊழி­யர்கள் மற்றும் ஆசி­ரி­யைகள் ஸ்கர்ட், பிளவ்ஸ் அணிந்தே கட­மைக்கு வரு­கி­றார்கள் என்றார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்க ஊழி­யர்­களின் ஆடை தொடர்பில் சுற்று நிரு­ப­மொன்­றினைத் தயா­ரித்து பொது நிர்­வாக அமைச்­சுக்கு அனுப்பி வைத்­தி­ருந்­த­தா­கவும் அதில் அபாயா அணிந்து கட­மைக்கு செல்லும் வகையில் தயா­ரிக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

பிர­த­மரின் ஆலோ­ச­னைகள் உள்­ள­டங்­கிய சுற்று நிரு­பத்தை வெளி­யி­டாது பொது நிர்­வாக அமைச்சு 1989 ஆம் ஆண்டின் சுற்று நிரு­பத்தை மீள வெளி­யிட்­டுள்­ளது.

பிர­த­மரின் உத்­த­ர­வு­க­ளையும் மீறி குறிப்­பிட்ட சுற்று நிருபம் கடந்த 29 ஆம் திக­தி­யிட்டு 31 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழ­மையே பொது நிர்­வாக அமைச்சின் செய­லா­ள­ரினால் கையொப்­ப­மி­டப்­பட்­ட­தாக அமைச்சின் அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார்.  குறிப்­பிட்ட சுற்று நிருபத்தில் திருத்தங்களைச் செய்யுமாறும் முஸ்லிம் பெண்கள் அபாயா அணிந்து கடமைக்குச் செல்லும் வகையில் மாற்றங்களை உட்புகுத்துமாறும் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறான கோரிக்கைகளை ஏனைய முஸ்லிம் அமைச்சர்களும், மேல் மாகாண ஆளுநரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சிலும் விடுத்துள்ளன.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.