அரேபிய, ஷரீஆ சட்டங்களை நாட்டில் அமுல்படுத்த முடியாது

உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர

0 723

‘நாட்டு மக்கள் அனை­வ­ருக்கும் ஒரு சட்­டமே அமுலில் உள்­ளது. சமய ரீதியில் சட்­டங்கள் மாறு­ப­ட­மாட்­டாது. அரபு மொழி, அரே­பிய சட்டம் மற்றும் ஷரீஆ சட்டம் என்­ப­ன­வற்றை ஒரு போதும் இந்­நாட்டில் நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யாது’ என உள்­நாட்­ட­லு­வல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் வஜிர அபே­வர்­தன தெரி­வித்தார்.

உள்­நாட்­ட­லு­வல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சில் நடை­பெற்ற அரச அதி­கா­ரி­களைத் தெளிவு படுத்தம் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது, நாட்டில் சிங்­களம், தமிழ் மற்றும் ஆங்­கிலம் ஆகிய மொழி­க­ளுடன் கூடிய பெயர் பல­கை­க­ளையும் அறி­விப்புப் பல­கை­க­ளையும் மாத்­தி­ரமே காட்­சிப்­ப­டுத்­த ­மு­டியும். அரபு மொழியில் எந்த அறி­விப்­பு­க­ளையும் காட்­சிப்­ப­டுத்­த மு­டி­யாது. வீதி­களின் பெயர்கள் கூட சிங்­களம், தமிழ், ஆங்­கிலம் ஆகிய மொழி­களில் மாத்­தி­ரமே பொறிக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். அரபு மொழியில் காட்சிப் படுத்­தப்­பட்­டுள்ள பெயர்­ப­ல­கைகள் மற்றும் அறி­விப்புப் பல­கை­களை அப்­பு­றப்­ப­டுத்­து­மாறு அரச அதி­கா­ரி­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்ளேன்.

கிழக்கு மாகா­ணத்தில் சில பகு­தி­களில் அரபு மொழி­யி­லான பெயர்ப்­ப­ல­கைகள், அறி­விப்புப் பல­கைகள் காணப்­ப­டு­வ­தாக முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெற்­றுள்­ளன. இதனால் அரபு மொழி­யி­லான அனைத்து அறி­விப்­புக்­க­ளையும் பெயர் பல­கை­க­ளையும் அகற்றி விடு­மாறு கோரி அனைத்து திணைக்­க­ளங்­களின் செய­லா­ளர்கள் மற்றும் அர­சாங்க அதி­பர்கள், பிர­தேச செய­லா­ளர்கள், மாகாண உள்­ளூ­ராட்சி நிறு­வ­னங்­களின் செய­லா­ளர்கள் என்­போ­ருக்கு சுற்று நிருபம் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. பிர­தமர் மற்றும் ஜனா­தி­ப­தியின் ஆலா­ச­னையின் பேரிலே  சுற்­று­நி­ருபம் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பு யாப்பின் அடிப்­ப­டையில் மூன்று மொழி­களை மாத்­தி­ரமே உப­யோ­கிக்க முடியும். மூன்று மொழி­களும் சிங்­களம், தமிழ், ஆங்­கி­ல­மாகும். அரபு மொழியில் பெயர் மற்றும் அறி­விப்பு பல­கைகள் காட்சிப் படுத்­தப்­பட்­டி­ருந்தால்  அவை அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

நாட்டில் இரண்டு சட்­டங்கள் இருக்க முடி­யாது. ஒரு சட்­டமே அமுலில் இருக்க வேண்டும். எந்த சம­யத்தைச் சேர்ந்­த­வர்­க­ளென்­றாலும் அவர்கள் இந்தச் சட்­டத்­துக்கு கட்­டுப்­பட்­ட­வர்­க­ளாவர். ஷரீஆ சட்­டத்தை இங்கு அமுல் நடத்த முடி­யாது. கல்­லெ­றிந்து கொலை செய்­வது, கழுத்தை வெட்டி கொலை செய்­வ­தெல்லாம் இங்கு முடி­யாது.  அதற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது.

இந்­நாட்டில் 2010 –2015 ஆண்டு காலப்­ப­கு­தியில் பாரா­ளு­மன்­றத்தில் அவ­சர சட்­டங்கள் சில நிறை­வேற்றிக் கொள்­ளப்­பட்­டுள்­ளன. இந்த சட்­டங்­க­ளுக்குள் ஷரீஆ சட்­டமும் உள்­ள­டங்­கி­யி­ருக்­கி­றது.  சில அரச வர்த்­த­மா­னிகள் கூட இக்­கால கட்­டத்தில்  வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. இந்த அரச வர்த்­த­மா­னிகள் அனைத்­தையும் இரத்துச் செய்­வ­தற்குத் தீர்­மா­னித்­துள்ளோம். தவ­றான முறையில் நிறை­வேற்­றிக்­கொள்­ளப்­பட்­டுள்ள சட்­டங்­களில் திருத்­தங்­களைச் செய்யவுள்ளோம்.

அவசர அவசரமாக நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட சட்டத்தின் கீழ் பல அரச சார்பற்ற நிறுவனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை தொடர்பில் தேடிப்பார்த்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம். ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனையின் பேரில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.