நாத்தாண்டி வன்முறைகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 31 பேருக்கு பிணை
மினுவாங்கொடையில் 15 பேரும் விடுவிப்பு
கொஸ்வத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாத்தாண்டிய, – கொட்டாரமுல்லை பகுதியில் கடந்த 13 ஆம் திகதி முஸ்லிம்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட வன்முறைகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 31 பேர் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
மாரவில நீதிவான் நீதிமன்றில் அவர்கள் ஆஜர் செய்யப்பட்ட போதே, தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகளில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதற்கான உத்தரவை மாரவில நீதிவான் சிரிமெவன் மகேந்ர ராஜா பிறப்பித்துள்ளார்.
நேற்றைய தினம் முன் வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்தே இந்தப் பிணை வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே மினுவாங்கொடை வன்முறைகள் தொடர்பிலும் கைதாகி விளக்கமறியலில் இருந்த 15 சந்தேக நபர்களும் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலா 2 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மினுவாங்கொடை நீதிவான் கேசர சமரதிவாகர பிறப்பித்துள்ளார். இதனைவிட இவர்களுடன் கைதான மேலும் நான்கு பேர் வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கப் பட்டுள்ளனர்.
-Vidivelli