குளியாப்பிட்டிய நகரில் வன்செயல்களில் ஈடுபட்டு, வர்த்தக நிலையங்களைத் தாக்கி சேதம் விளைவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 11 சந்தேக நபர்களை அடையாளம் காணும் முகமாக நடாத்தப்பட்ட அடையாள அணிவகுப்பின் போது முறைப்பாட்டாளர்களினால் சந்தேக நபர்களை அடையாளம் காணுவதற்கு முடியாமற்போனது.
இந்த அடையாளம் காணும் அணிவகுப்பு நேற்று முன்தினம் குளியாப்பிட்டிய நீதிமன்ற வளவில் இடம் பெற்றது. குளியாப்பிட்டிய நீதிமன்ற நீதிவான் ஜனனி எஸ். விஜேதுங்க முன்னிலையில் நடைபெற்றது.
சந்தேக நபர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த 4 முறைப்பாடுகள் தொடர்பில் இந்த அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள மேலும் 9 சந்தேக நபர்களை அடையாளம் காணுவதற்கான அடையாள அணிவகுப்பு எதிர்வரும் 30, 31 ஆம் திகதிகளிலும் ஜுன் 3 ஆம் திகதிகளிலும் நடத்தப்படும் என நீதிவான் உத்தரவிட்டார். அன்றைய தினம் சந்தேக நபர்களை உடலை மறைத்து ஆஜர்படுத்துமாறும் அவர் உத்தரவிட்டார். கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்ற வன்செயல்களில் சம்பந்தப்பட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்த சந்தேக நபர்கள் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அடையாளம் காணப்படாத சந்தேக நபர்கள் 11 பேரையும் எதிர்வரும் ஜுன் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படியும் நீதிவான் உத்தரவிட்டார்.
-Vidiveli