அவிழ்க்கப்பட வேண்டிய முடிச்சுகள்

0 830

வெள்­ளிக்­கி­ழ­மை­களில் பள்­ளி­வா­சல்­களில் நிகழும் குத்­பாக்கள் சிங்­கள மொழி­யி­லும் அமைய ஏற்­பாடு செய்­யப்­போ­வ­தாக தபால் மற்றும் முஸ்லிம் விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் கூறி­யுள்ளார். நாம் நீண்ட கால­மாகப் பெரும்­பான்மை இனத்­தோடு நெருக்­க­மாக வாழ்ந்­து­வரும் சமூ­க­மாவோம். அது மென்­மேலும் நீடிக்க வேண்டும். அதற்­காக வெள்­ளிக்­கி­ழமை குத்­பாக்­களை சிங்­கள மொழியில் நிகழ்த்­துங்கள்.

இச்­ச­ம­யங்­களில் ஏனைய மதங்­களின் குரு­மார்­க­ளையும் அங்கு அழை­யுங்கள். அதுபோல் 317 அரபு மத்­ர­ஸாக்­க­ளையும் முறை­யாக நிர்­வ­கிக்கப் புதிய சட்­டத்­தி­ருத்­தத்­தையும் அறி­மு­கப்­ப­டுத்த எதிர்­பார்க்­கிறேன் எனவும் அவர் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

மேலும் அவர் குறிப்­பி­டு­கையில், கடந்த காலத்தில் மத்­ர­ஸாக்­களின் பாடத்­திட்­டத்தில் ஒரு குறிப்­பிட்ட முறை இருக்­க­வில்லை. அத­னால்தான் இவ்­வி­ட­யத்தில் இப்­பி­ரச்­சினை ஏற்­படும் என முன்பே நான் ஒரு தீர்­மா­னத்­துக்கு வந்­தி­ருந்தேன். புதி­தாக மத்­ர­ஸாக்கள் ஆரம்­பிக்­கப்­ப­டு­வதைத் தடுக்க வேண்டும் என முடிவு செய்­தி­ருந்தேன். அதுபோல் தற்­போ­தி­ருக்கும் மத்­ர­ஸாக்­க­ளையும் கூட சரி­யான முறைக்குள் கொண்டு வர­வேண்டும் எனவும் சிந்­தித்­தி­ருந்தேன். இவற்றில் கற்­பிக்­கப்­ப­டு­வதைப் பற்றி விசேஷ ஒரு முகப்­பட்ட பாடத்­திட்டம் அவ­சி­ய­மாகும். இவற்றைச் சோதிக்க வேண்டும். மதக்­கல்­வி­யோடு நாட்டின் அடிப்­படைக் கல்­வி­யும்­கூட போதிக்­கப்­பட வேண்டும். இவை யாவு­முள்ள பாடத்­திட்­டத்­தையே எதிர்­கா­லத்தில் மத்­ர­ஸாக்­களில் அமு­லாக்க எண்­ணு­கிறேன் என்றார்.

நாடு முழுக்க நூற்­றுக்­க­ணக்­கான பள்­ளி­வா­சல்கள் இருக்­கின்­றன. ஒரு சில ஆலிம்­க­ளுக்கு மட்­டுமே சிங்­கள மொழி தெரியும். ஏனைய பெரும்­பான்மை ஆலிம்­களின் நிலை என்ன? எடுத்த எடுப்பில் அதில் தேர்ச்சி பெற்­று­விட முடி­யுமா? ஐந்து வருட தவணை கொடுத்­தா­லா­வது பலர் கற்­றுக்­கொள்ள வாய்ப்பு ஏற்­படும். ஜும்ஆ தொழ வரு­வோரில் 100 க்கு 90 சத­வீ­த­மா­னோ­ருக்கு சிங்­கள மொழி தெரி­யாது. வடக்கு கிழக்கைப் பொறுத்­த­வரை இந்த விதிப்­புரை அங்­குள்ள ஆலிம்­க­ளுக்கும் தொழ­வ­ரு­வோ­ருக்கும் அறவே பொருந்­தாது.

ஆக சிங்­கள மொழியைக் குத்­பாக்­களில் கட்­டா­யப்­ப­டுத்­து­வ­தா­னது தமிழ் மொழியைத் தாய்­மொ­ழி­யாகக் கொண்ட 90 வீத முஸ்­லிம்­க­ளுக்கும் மிகப் பெரும் பாதிப்­பாகும். தமக்­கு­ரிய மார்க்­கத்தை உரிய முறையில் தெளி­வாகப் புரிந்து கொள்ள முடி­யாத நிலை இதனால் உரு­வா­கி­வி­டு­கி­றது. முறைப்­படி சிங்­க­ள­மொழி தெரி­யாத கதீப்மார் எதையும் தப்பும் தவ­று­மாகக் கூற இடப்­பாடும் உண்டு.

ஒரு­வ­னுக்குத் தெரி­யாத மொழியில் அவனை விசா­ரிக்­கவும் முடி­யாது. அவ­னுக்குத் தெரி­யாத மொழியில் அவ­னது வாக்கு மூலத்தைப் பதிவு செய்­யவும் முடி­யாது. அவ­னுக்குத் தெரி­யாத மொழியில் தீர்ப்பு வழங்­கவும் முடி­யாது. குறைந்த பட்சம் அசல் மொழி பெயர்ப்பு இருக்க வேண்டும். ஏனெனில் மொழி­யா­திக்­கமும் மனித உரிமை மீற­லாகும்.

சுருங்கக் கூறின் காணி உறு­திப்­பத்­திரம், பிறப்பு இறப்பு, திரு­மண அத்­தாட்­சிப்­பத்­தி­ரங்கள், கொடுக்கல் வாங்கல் அட­மானப் பத்­தி­ரங்கள், வாட­கை­க­ளுக்­கான உறு­திப்­பத்­தி­ரங்கள் யாவும் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் புரிந்த மொழி­யி­லேயே அமைந்­தி­ருக்க வேண்டும். இந்­நி­லையில் சிங்­கள மக்­க­ளுக்கு மட்­டுமே உரிய சிங்­கள மொழி­யி­லேயே தமிழைத் தாய்­மொ­ழி­யாகக் கொண்ட முஸ்­லிம்­களும் செயற்­பட வேணடும் என வற்­பு­றுத்­தப்­ப­டு­வ­தற்குக் கார­ணங்கள் என்ன?

· சிங்­கள மக்கள் மொழி அடிப்­ப­டை­யி­லுள்ள சமூகம் என்­பதால் அந்த மொழியில் அனைத்தும் நிகழ்­வ­தையே வற்­பு­றுத்­து­கி­றார்கள்.

· சிங்­கள மக்கள் நாக­ரிக முன்­னேற்­றத்­துக்­காக ஆங்­கில மொழி மீது அலாதி மோகம் கொள்­வ­தோடு கடல் கடந்து தொழில் தேட ஜப்பான், கொரியா முத­லிய நாடு­களின் மொழி­க­ளையும் விருப்­புடன் கற்­கி­றார்கள். தேசிய மொழி­யாக தமிழ் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டி­ருப்­பதால் பரீட்சைப் பெறு­பேற்­றுக்­கா­கவே தமிழ் கற்­கி­றார்கள்.

1956ஆம் ஆண்டு சிங்­களம் மட்டும் அரச கரும மொழி­யாக ஆக்­கப்­பட்ட போது தமிழ் மக்கள் தமி­ழையும் சம அரச கரும மொழி­யாகக் கோரி­ய­போது முஸ்­லிம்கள் அதை ஆத­ரித்­தி­ருக்க வேண்டும். அல்­லது சிங்­க­ளத்தைத் தாய் மொழி­யாக ஏற்­றுக்­கொண்­டி­ருக்க வேண்டும். அப்­படிச் செய்­தி­ருந்தால் இப்­போது சிங்­கள கதீப்­மாரும் சிங்­க­ளத்தைத் தாய்­மொ­ழி­யாகக் கொண்ட முஸ்­லிம்­களும் இருப்­பார்கள். இஸ்லாம் மொழியை அடிப்­ப­டை­யாகக் கொண்­ட­தல்ல. மதத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்­டோரே முஸ்­லிம்­க­ளாவர். எனினும் சிங்­க­ள­வரும் தமி­ழர்­களும் மொழியை அடிப்­ப­டை­க­ளாகக் கொண்­ட­வர்கள். எனினும் சிங்­க­ள­வ­ரதும் தமி­ழ­ரதும் மத கலா­சா­ரங்கள் முஸ்­லிம்­க­ளுக்கு மாறு­பட்­ட­வை­யாகும்.

அதனால் தான் தமி­ழரின் இன ரீதி­யி­லான தனித்­துவ அடை­யா­ளங்­களைப் பேரி­ன­வா­திகள் ஒடுக்­கு­வ­துபோல் முஸ்­லிம்­களின் மத ரீதி­யி­னால தனித்­துவ அடை­யா­ளங்­க­ளையும் ஒடுக்க நினைக்­கி­றார்கள். அதற்கு நல்ல வச­தி­யாக பாஸ்கு ஞாயிறு தினத்தில் ஒரு முஸ்லிம் தீவி­ர­வாதக் குழு கிறிஸ்­தவ ஆல­யங்­க­ளையும் உல்­லாச உண­வ­கங்­க­ளையும் தாக்­கி­யமை அமைந்­து­விட்­டது.
2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை (5 ஆண்டு வரை) இலங்கை முஸ்­லிம்கள் பேரி­ன­வா­தி­களின் கொடூர தாக்­கு­தல்­க­ளுக்கு உட்­பட்­டி­ருந்­தார்கள். 2018 ஆம் ஆண்டு ஆட்­சி­மாற்றம் ஏற்­பட்டு அவை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரப்­பட்ட நிலையில் முஸ்லிம் தீவி­ர­வா­திகள் கிறிஸ்­தவ ஆல­யங்­க­ளிலும் உல்­லாச ஹோட்­டல்­க­ளிலும் அழிவை ஏற்­ப­டுத்­தி­ய­தா­னது பேரி­ன­வாத சக்­திகள் மீண்டும் தாம் இடை நிறுத்­தி­யி­ருந்த முஸ்லிம் விரோத பேர­ழி­வு­களைத் தொடர களம் அமைத்துக் கொடுத்­தி­ருக்­கி­றது. அந்த அழி­வு­களால் ஏற்­பட்ட அச்ச உணர்­வா­லேயே அமைச்சர் ஹலீம் மார்க்க விட­யத்­திலும் பாரிய விட்­டுக்­கொ­டுப்பைச் செய்ய நினைக்­கிறார். சந்­தர்ப்ப சூழ­லுக்­கேற்ப இத்­த­கைய விட்­டுக்­கொ­டுப்பு மதி­யூ­க­மா­னது என்­ற­போதும் தற்­கா­லிக நிவா­ரணம் பெறும் இந்­நோக்கம் மார்க்­கத்­தையே முதன்­மை­யாகக் கொண்ட முஸ்­லிம்­க­ளுக்கு எதிர்­கா­லத்தில் பாரிய பின்­ன­டை­வையே ஏற்­ப­டுத்­தி­விடும்.

உதா­ர­ண­மாக 1948 ஆம் ஆண்டு ஆங்­கி­லேய ஆட்­சி­யாளர் முஸ்­லிம்­களின் அடிப்­படை உரி­மை­க­ளுக்கும் காப்­பீ­டாக 29 ஆம் ஷரத்தை வழங்­கி­யி­ருந்­தார்கள். 1972 ஆம் ஆண்டு குடி­ய­ரசு யாப்பில் அது இயற்­றப்­ப­டா­ததால் அடிப்­படை உரி­மைகள் யாவும் சலு­கை­க­ளா­கின. அதா­வது பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யாலும் சிறு­பான்­மை­களின் எந்த உரி­மை­யையும் பறிக்க முடி­யாது என்­பதே காப்­பீ­டாகும். 29 ஆம் ஷரத்து நீக்­கப்­பட்ட பின் அடிப்­படை உரிமை இல்லை. சலுகை மட்­டுமே என்­றா­கி­யது. அதா­வது பெரும்­பான்மைச் சமூகம் விரும்­பினால் விரும்­பிய அளவு சிறு­பான்­மை­க­ளுக்குக் கிடைக்கும் என்­றா­கி­யது.

முடிவில் 1954 ஆம் ஆண்டு கிடைத்த முஸ்லிம் தனியார் சட்­டமும் 1978 ஆம் ஆண்டு கிடைத்த முஸ்லிம் விவ­கார அமைச்­சுமே எஞ்­சின. தற்­போது முஸ்லிம் விவாக விவா­க­ரத்து வகுப்பு வாரி­சு­ரிமை அடங்கி முஸ்லிம் தனியார் சட்டம் தீர்­வின்றி கிடப்­பி­லேயே இருக்­கின்­றது. முஸ்லிம் விவ­கார அமைச்சும் கூட முஸ்­லிம்­களின் செயற்­பா­டு­க­ளுக்கு வாய்ப்­பாக்கக் கிடைத்தும் இருக்கும் வச­தி­க­ளையும் இழக்­கப்­பார்க்­கி­றது.

குத்­பாக்­களின் போது ஏனைய மதங்­களின் குரு­மார்­க­ளையும் அங்கு அழை­யுங்கள் எனக் கூறப்­ப­டு­கி­றது. சிங்­கள மொழியில் குத்பா ஓது­வ­தா­யினும் கூட ஏனைய மதங்­களின் குரு­மார்­களும் அங்கு அமர்ந்­தி­ருக்க வேண்­டுமாம். இந்த வலி­யு­றுத்­தல்கள் முஸ்­லிம்கள் தீவி­ர­வா­தி­களோ பயங்­க­ர­வா­தி­களோ அல்லர் என்­பதை நிரூ­பிக்­க­வே­யாகும். இதே நிலைப்­பாட்டை அரபு மத்­ர­ஸாக்கள் விட­யத்­திலும் கையாள அமைச்சர் ஹலீம் விழை­கிறார்.

· 317 அரபு மத்­ர­ஸாக்­க­ளையும் முறை­யாக நிர்­வ­கிக்கப் புதிய சட்ட திருத்­தத்­தையும் அறி­மு­கப்­ப­டுத்­தப்­போ­கி­றாராம்.

· கடந்த காலத்தில் மத்­ர­ஸாக்­களின் பாடத்­திட்­டங்­களில் ஒரு குறிப்­பிட்ட வரை­முறை இருக்­க­வில்­லையாம்.

· இத்­த­கைய பிரச்­சினை ஏற்­படும் என அமைச்சர் ஹலீம் முன்பே தீர்­மா­னத்­துக்கு வந்­தி­ருந்­தாராம்.

· புதி­தாக மத்­ர­ஸாக்கள் அமைக்­கப்­ப­டு­வதை இவர் தடுக்­கப்­போ­கி­றாராம்.

· தற்­போது இயங்­கிக்­கொண்­டி­ருக்கும் அரபு மத்­ர­ஸாக்­க­ளையும் கூட சரி­யான வரை­மு­றைக்குள் இவர் கொண்டு வரு­வாராம்.

· அவற்றில் கற்­பிக்­கப்­ப­டு­வது பற்றி விசேட ஒரு­மு­கப்­பட்ட பாடத்­திட்டம் அவ­சி­யமாம்.

· மத்­ர­ஸாக்கள் சோதிக்­கப்­பட வேண்­டுமாம்.

· மார்க்கக் கல்­வி­யோடு நாட்டின் அடிப்­படைக் கொள்­கை­யையும் கூட போதிக்­கப்­பட வேண்­டுமாம்.

· இவை­யா­வு­முள்ள பாடத்­திட்­டத்­தையே எதிர்­கா­லத்தில் மத்­ர­ஸாக்­களில் அமு­லாக்­கப்­ப­டுமாம்.

இவையும் கூட இலங்கை முஸ்­லிம்கள் தீவி­ர­வா­தி­களோ பயங்­க­ர­வா­தி­களோ அல்லர் என்­பதை நிரூ­பிக்­க­வே­யாகும் என நினைக்­கிறேன். இதனால் புதிய ஒத்தொ­ரு­மித்த பாடத்­திட்­டத்தை 317 அரபு மத்­ர­ஸாக்­க­ளுக்கும் வகுக்­க­வேண்­டி­யி­ருக்­கி­றது. இதன் அடிப்­படை தடை செய்­யப்­பட்ட அமைப்­புக்­களின் கருத்­துக்­களை அகற்­று­வ­தே­யாகும் என நினைக்­கிறேன்.

வரு­டாந்தம் ரமழான் மாதம் பிறை பார்க்கும் விட­யத்­தி­லேயே அடி­பி­டி­பட்ட சமு­தா­யத்தை, அடுத்­த­டுத்த நாட்­களில் தலை நோன்பு நோற்ற சமு­தா­யத்தை, இரு பெரு­நாட்கள் கொண்­டா­டிய சமு­தா­யத்தை, முஸ்லிம் தனியார் சட்­டத்தில் ஏக முடி­வுக்கு வர 10 ஆண்­டுகள் கழிந்தும் கூட முடி­யாத சமு­தா­யத்­தையே அமைச்சர் ஹஸீம் ஒரே பாடத்­திட்­டத்­துக்கு கொண்­டு­வர விழை­கிறார்.

அதா­வது, 317 அரபு மத்­ர­ஸாக்­க­ளிலும் ஒரே வகை­யான பாடத்­திட்டம் அமைய வேண்டும். ஒரே வகை­யான விளக்­கமே இருக்க வேண்டும். சிங்­கள மொழி கட்­டா­ய­மாக்­கப்­பட வேண்டும். நாட்டைப் பற்­றிய பொது அறிவும் இருக்க வேண்டும் என்­பதே இதற்­கான அர்த்­த­மாகும். குத்­பாவின் போது ஏனைய மதங்­களின் குருமார் ஆஜ­ராக வேண்டும் என்­பதன் அர்த்தம் என்ன? ஓதப்­படும் குத்­பாக்­களில் தீவி­ர­வா­தமோ பயங்­க­ர­வா­தமோ இல்லை என்­பதை உறுதி செய்து கொள்­வ­தற்­கா­கவா?

இது­கால வரை முழு நாட்­டுக்கும் பொதுச் சட்டம் கொண்டு வரு­மாறு பலரும் வலி­யு­றுத்தி வந்­தனர். புதி­தாக நாட்டின் தலைமை பிக்­குவும் கூட அதை வலி­யு­றுத்­தி­யி­ருக்­கிறார். ஜனா­தி­ப­திக்கும் கடி­தமும் எழு­தி­யி­ருக்­கிறார். (ரெச 14.05.2019) இதன்­மூலம் யாழ்ப்­பா­ணத்­துக்கு ஒல்­லாந்தர் வழங்கி தற்­போதும் நடை­மு­றையில் இருக்கும் தேச வழமைச் சட்­டமும் ஆங்­கி­லேயர் வழங்­கிய கண்­டியர் சட்­டமும் முஸ்லிம் தனியார் சட்­டமும் நீக்­கப்­பட்டு விட வேண்டும் என்றே ஆகி­றது. யாழ­ரசும் கண்­டி­ய­ரசும் முஸ்­லிம்­களும் அக்­கா­லத்தில் தனித்­தனி கலா­சார அடை­யா­ளங்­களைக் கொண்­டி­ருந்­த­தா­லேயே அவ்­வாறு வழங்­கப்­பட்­டி­ருந்­தன.

தேச வழ­மைச்­சட்­டமும் கண்­டியர் சட்­டமும் குறிப்­பிட்ட இரு பிர­தே­சங்­களை மட்­டுமே குறிப்­பிடும் சட்­டங்­க­ளாகும். முஸ்லிம் தனியார் சட்டம் அவ்­வா­றா­ன­தல்ல. முழு இலங்கை முஸ்­லிம்­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தாகும். எனவே முஸ்லிம் தனித்­துவ தனியார் சட்­டத்தை முஸ்­லிம்கள் இழந்­து­வி­டு­வார்­க­ளாயின் தேசத்தின் தனிப்­பி­ரி­வினர் என்னும் அடை­யா­ளத்­தையே பறி­கொ­டுத்து விடு­வார்கள். முஸ்­லிம்­களின் இத்­த­கைய தேசிய அடை­யா­ளத்தைக் காட்­டவே ஆங்­கி­லேயர் முஸ்லிம் தனியார் சட்­டத்தை வழங்­கி­யி­ருந்­தார்கள். இது முழு­மை­யான ஷரீஆ அல்ல முஸ்லிம் சமூ­கத்தை தனி­யாக அடை­யா­ளப்­ப­டுத்தும் ஏற்­பா­டாகும். பொதுச்­சட்­டத்தின் பெயரால் இது எடு­பட்­டுப்­போ­கு­மாயின் முஸ்­லிம்­களின் தனித்­துவம் அழிந்து காலப்­போக்கில் பேரின தேசி­யத்தால் கரைந்­து­போ­வார்கள். சிலர் மட்டும் ஒரு விட­யத்தில் ஈடு­பட்­ட­தற்­காக அந்த சமூ­கமே பொறுப்பு எனக் கூற­லாமா? சில தமிழர் ஆயுதம் தூக்கிப் போரா­டி­னார்­களே தவிர எல்லா தமி­ழர்­களும் அல்­லவே. அதுபோல் மக்கள் விடு­தலை முன்­னணி ஆயுதப் போராட்டம் நிகழ்த்­தி­யதே தவிர எல்லா சிங்­க­ள­வர்­களும் அல்லர். இத்­த­கைய அறிவு பூர்வ அணு­கு­மு­றைக்கு மாறாக உணர்ச்­சி­பூர்வ அணு­கு­முறை உரு­வா­னதே பாரிய அழி­வு­க­ளுக்கு வித்­திட்­டி­ருந்­தது.
தீவி­ர­வாதம் சிங்­கள, தமிழ், முஸ்லிம் ஆகிய மூன்று சமூ­கத்­தினர் மத்­தி­யிலும் உரு­வா­கி­யி­ருக்­கி­றது. இவற்­றுக்­கான கார­ணங்­களைக் கண்­ட­றிந்து தீர்வு காணு­வதே பரி­கா­ர­மாகும். முத­லா­ளித்­து­வத்­துக்கு எதி­ரா­கவே சிங்­கள தீவி­ர­வாதம் போரா­டி­யது. சம அந்­தஸ்தைக் கோரியே தமிழ்த் தீவி­ர­வாதம் போரா­டி­யது. மொழி வேறு­பா­டு­களே இவ்­வி­ரண்­டி­னதும் எதி­ரெதிர் நிலைப்­பா­டு­க­ளாக இருக்­கின்ற போதும் தமி­ழரின் கட­வுள்­களை சிங்­க­ளவர் சிலரும் பூஜிக்­கி­றார்கள். புத்­தரை வழி­பட்ட தமிழர் சிலரும் அக்­கா­லத்தில் வாழ்ந்­தி­ருக்­கி­றார்கள்.

இலங்­கையில் முஸ்­லிம்கள் தமிழைத் தாய்­மொ­ழி­யாகக் கொண்­டி­ருந்த போதும் தமிழர் என அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. காரணம் முஸ்லிம் சமூகம் மதத்தைக் கொண்டு அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட சமூ­க­மாகும். 2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை காபிர், ஜிஹாத், ஷிர்க் என்னும் விட­யங்­களை உரிய முறையில் கூற வேண்­டுமே. அரபு மொழி­யையும் கூட சந்­தே­கத்­துடன் பார்க்­கி­றார்­களே. அப்­ப­டி­யானால் குத்­பாக்­களில் ஒரு அரபுச் சொல்­லையும் கூட கூற முடி­யாமற் போகுமே. அதன் அர்த்­தத்தை சிங்­க­ளத்தில் கூறி விளக்கி அனு­மதி பெற வேண்டும் எனவும் கூறப்­பட்டு விடுமே. அந்த சிர­மத்தைப் போக்க சிங்­கள மொழி­யி­லேயே அனைத்­தையும் ஓத வேண்டும் எனக் கூறப்­பட்டு விடாதா? பாளி மொழியை பெளத்­தரும் சமஸ்­கி­ரு­தத்தை ஹிந்­துக்­களும் லத்தீன் மொழியை கிறிஸ்­த­வரும் மதிப்­பது போலத்­தானே முஸ்­லிம்கள் அரபு மொழியை மதிக்­கி­றார்கள். அப்­ப­டி­யானால் அரபு மொழி­வி­ட­யத்தில் எதற்கு இத்­தனை கெடு­பிடி ஏன் குர்ஆன் ஹதீஸ் விட­யத்தில் இத்­தனை இழு­வ­ழுப்பு? முஸ்லிம் போத­கர்கள் சர்­வ­தே­சத்­தி­லி­ருந்து இலங்­கைக்கு வரு­வதைத் தடுக்க வேண்டும் என ஏன் வலி­யு­றுத்­து­கி­றார்கள்.

முஸ்­லிம்­களை முஸ்லிம் பயங்­க­ர­வா­தத்­தி­ட­மி­ருந்து காப்­பாற்­றவே என்­கி­றார்கள். அப்­பாவி தமி­ழர்­களை பயங்கரவாத புலிகளிடமிருந்து காப்பாற்றவே மனிதாபிமான நடவடிக்கை எடுத்ததுபோல் அப்பாவி முஸ்லிம்களையும் பயங்கரவாத முஸ்லிம்களிடமிருந்து காப்பாற்றவே இவ்வாறெல்லாம் செய்கிறோம் என்பார்களோ?

குறித்த விடயங்களை உபதேசிக்கவோ குத்பாக்களில் ஓதவோ கூடாது. குறித்த விடயங்களை மத்ரஸாக்களில் கற்பிக்கவோ கற்கவோ கூடாது. குறித்த விடயங்களை எழுதவோ பிரசுரிக்கவோ கூடாது. குறித்த விடயங்களை ஒலிபரப்பவோ ஒளிபரப்பவோ கூடாது எனக் கண்காணிப்பது சிரமம் அவற்றை விடவும் சிரமம் எல்லா விடயங்களிலும் தலையிட்டு சல்லடை போடுவதாகும். எனவே இவற்றை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிடமே விட்டுவிட வேண்டும். அதன் ஒருங்கிணைப்பு இனிமேலாவது ஏற்பட வேண்டும். இதில் அரசோ அரசியல்வாதிகளோ தலையிடக்கூடாது.

அரபு நாகரிகத்தைப் பேணி இலங்கையராய் வாழ விரும்பாதோர் இலங்கையிலிருந்தும் போய்விட வேண்டும் என விமல் வீரவன்ச விரட்டுகிறார். இவர் நீண்ட காற்சட்டையோடு கைச்சட்டையும் அணிந்திருக்கிறாரே இவை ஆங்கிலேயரின் ஆடைகள் அல்லவா? இடுப்பைச் சுற்றிய சீத்தைத் துணி எங்கே? ஓசரி எங்கே? உடலோடு ஒட்டிய ஆபாச ஆடைகளா இலங்கையருக்குரியன? இப்படியே போனால் அரபு மொழியில் பெயர்கள் வைக்கவே கூடாது என்பார்கள் போல் தெரிகிறது.

இஸ்லாம் சுன்னத் செய்வதை சுகாதாரத்துக்காக வலியுறுத்துகிறது. அது இலங்கையருக்கு உரியதல்ல. முஸ்லிம் நாட்டுக்குப் போய் விடுங்கள் எனக் கூறுவார்களா? இலங்கை ஒரு பல்லின நாடு என்பதை அறியாமல்தான் பேரினவாதிகள் பிதற்றுகிறார்கள்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.