32 பேரை பிணையில் விடுவித்ததற்கு யார் பெறுப்பு?

பாராளுமன்றத்தில் முஜிபுர் ரஹ்மான் கேள்வி

0 643

அண்­மையில் குரு­நாகல், கம்­பஹா மாவட்­டங்­களில் இன­வா­தி­களால் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராகப் பாரிய அழிவு நாச­காரம் விளை­விக்­கப்­பட்­டுள்­ளது. இதில் பெரும்­பா­லானோர் ஈடு­பட்­டுள்ள போதிலும் மிகவும் சொற்­ப­தொ­கை­யி­னரே கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். அதுவும் அவ­ச­ர­காலச் சட்டம் அமுலில் இருந்த போதிலும் மினு­வாங்­கொ­டையில் கைதான 32 பேரை பிணையில் விடு­வித்­து­முள்­ளனர். இதற்குப் பொறுப்­புக்­கூற வேண்­டி­யது யார்? இந்­நி­லையில் அரசின் சட்டம், ஒழுங்கு குறித்து சந்­தே­கமே எழுந்­துள்­ளது என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் கூறினார்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை பாரா­ளு­மன்றக் கூட்­டத்­தொ­டரில் உரை­யாற்­றும்­போதே முஜிபுர் ரஹ்மான் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். அதன் போது அவர் மேலும் கூறி­ய­தா­வது,

ஏப்ரல் 21 தாக்­கு­தலில் 250 க்கும் மேற்­பட்ட கிறிஸ்­தவ மக்கள் பலி­யா­னார்கள். 500 க்கும் மேற்­பட்டோர் சிறு, பெருங்­கா­யங்­க­ளுக்­குள்­ளா­கி­னார்கள். இதனை நாம் வன்­மை­யாகக் கண்­டிக்­கிறோம். அது விட­ய­மாக அரசும் பாது­காப்புத் தரப்­பு­களும் நட­வ­டிக்­கை­களில் இறங்­கி­யுள்­ளன. இச் செயலில் ஈடு­பட்டோர், உடந்­தை­யானோர், ஆத­ர­வாக இருந்தோர் என்று பலர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இது நடந்து மூன்று வாரங்­களின் பின்னர் நாடு சுமுக நிலைக்குத் திரும்­பி­யுள்­ளது. அரச, தனியார் நிறு­வ­னங்­களின் பணிகள் வழ­மைக்குத் திரும்­பி­யுள்­ளன. இந்த வகையில் திருப்­திப்­ப­டலாம்.

நாட்­டி­லி­ருந்து பயங்­க­ர­வாதம் முற்­றாகத் துடைத்­தெ­றி­யப்­பட வேண்டும். இது விட­யத்தில் அரசு கூடிய கவனம் செலுத்­த­வேண்டும். ஏனெனில் 30 வருட யுத்­தத்தில் நாம் நன்கு அனு­ப­வங்­களைப் பெற்­றுள்ளோம். அதனால் அத்­த­கை­ய­தொரு சூழ்­நிலை மீண்டும் உரு­வாக யாரும் விரும்­ப­மாட்­டார்கள். ஆனால் சுமார் 9 வரு­டங்கள் அமை­தி­யாக இருந்த நாட்டில் மீண்டும் பயங்­க­ர­வாதம் தலை­காட்­டி­யுள்­ளது. இத­னையும் கண்­டிப்­பாக ஒழித்­துக்­கட்ட வேண்டும் என்­பதில் மாற்­றுக்­க­ருத்து கிடை­யாது.

இப்­ப­யங்­க­ர­வா­தத்தைக் காரணம் காட்டி இதன் போர்­வையில் குழு­வொன்று நாட்டில் இன வன்­செ­யல்­க­ளுக்கு தூப­மிட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றது.
ஏப்ரல் 21 தற்­கொலைத் தாக்­குதல் இடம்­பெற்று மூன்று வாரங்­களின் பின்னர் குரு­நாகல் மாவட்­டத்தில் சில பகு­தி­க­ளிலும் கம்­பஹா மாவட்­டத்தில் மினு­வாங்­கொடைப் பிர­தே­சத்­திலும் மிகவும் திட்­ட­மிட்ட அடிப்­ப­டை­யி­லேயே மிகப் பிர­மாண்­ட­மான தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. முஸ்­லிம்கள் பாரிய அழிவு நாசங்­களைச் சந்­தித்­துள்­ளனர்.

கடந்த சில காலங்­க­ளாக ஒரு சில குழுக்கள் சிங்­கள – முஸ்லிம் மோதல்­க­ளுக்கு தூப­மிட்டுக் கொண்டு வந்­ததை நாம் அறிவோம். சுமார் 4 ½ வரு­டங்­க­ளுக்கு முன்னர் அளுத்­கம – தர்ஹா நகரில் இன வன்­முறை கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டது. கடந்த வருடம் மார்ச் மாதம் கண்டி –திக­னயில் கோரத்­தாண்­ட­வ­மா­டி­யது. ஆனால் வன் செயலில் சம்­பந்­தப்­பட்ட குழுக்­களின் கைது விட­யத்தில் அரசு அச­மந்­த­மா­கவே நடந்­து­வந்­தது. கைது செய்­யப்­ப­டவோ, அக்­கு­ழுக்­களின் நட­வ­டிக்­கை­களைத் தடுக்­கவோ அரசு தவறி விட்­டது. இதன் விளை­வா­கவே நாச­காரக் குழுக்­களின் கை ஓங்­கியே வரு­கி­றது.

அதன் எதி­ரொ­லி­யா­கவே குரு­நாகல், நாத்­தாண்­டியா பகு­தி­களில் திட்­ட­மிட்ட நாச­காரம் விளை­விக்­கப்­பட்­டுள்­ளது.

இவற்­றுடன் தொடர்­புள்ள மாகாண, பிர­தேச சபை அர­சி­யல்­வா­திகள் இனம்­கா­ணப்­பட்­டுள்­ளனர். இவர்கள் குறித்து பொலி­ஸா­ருக்கும் முறைப்­பா­டுகள் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளன. ஆனால் இது­வரை இவர்கள் கைது செய்­யப்­ப­ட­வில்லை.

பல நூற்­றுக்­க­ணக்­கானோர் இவ் வன்­மு­றை­களில் ஈடு­பட்­ட­போ­திலும் கைதுகள் மிகவும் சொற்­ப­மா­கவே இடம்­பெற்­றுள்­ளன. பாது­காப்­புக்குப் பொறுப்­பா­க­வுள்ள ஜனா­தி­ப­தி­யிடம் இது விட­ய­மாக எனது அதி­ருப்­தியை முன்­வைக்­கிறேன். நடு­நி­லை­யாகச் செயற்­பட்டு தரா­தரம் பாராது நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்ள வேண்டும். இப்­ப­யங்­க­ர­வாதம் தொட­ராது முற்­றுப்­புள்ளி வைக்­க­வேண்டும். தவ­றினால் நாட்டின் முன்­னேற்­றமே தடைப்­பட்­டுப்­போகும்.
2015 ஆம் ஆண்­டி­லி­ருந்தே இன­வாதம் இல்­லா­ம­லாக்­கப்­படும் என்று பாரிய எதிர்­பார்ப்­பு­ட­னேயே நாம் இருந்து வந்தோம். இனக் குரோ­தத்­துக்­கெ­தி­ரான சட்ட மூலம் ஒன்று கொண்டு வரப்­படும் என்று எதிர்­பார்த்தோம். தேர்தல் மேடை­களில், குறிப்­பாக ஜனா­தி­பதி தேர்தல் பிர­சா­ரங்­க­ளின்­போது இனக்­கு­ரோ­தத்­திற்­கெ­தி­ரான சட்­ட­மூலம் கொண்டு வரப்­ப­டு­வது குறித்து நாம் மேடை­தோறும் முழங்­கினோம். ஆனால் 4 ½ வரு­டங்கள் கடந்த நிலை­யிலும் அது பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை.

அண்­மைய வன்­செ­ய­லா­ளர்கள் குறித்த ஏரா­ள­மான முறைப்­பா­டுகள் உள்­ளன. இதில் எதி­ர­ணியைச் சேர்ந்த பலர் உள்­ளனர். எதி­ரணி ஆத­ர­வா­ள­ரான பாடகர் மது­மா­தவ அர­விந்த வன்­செயல் நடக்கும் இடத்தில் நட­மா­டு­வது சீ.சீ.ரீ.வி. காணொ­லியில் நன்கு பதி­வா­கி­யுள்­ளது. சம்­பவம் நடந்து கொண்­டி­ருக்கும் குறித்த தினம் இரவு 7.25 மணிக்கு அவர் தோன்றும் காட்­சியைக் காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. ஆனால் இன்னும் அவர் கைது செய்­யப்­ப­ட­வில்லை. இதே போன்று குரு­நா­கலில் ஈடு­பட்ட அர­சி­யல்­வா­தி­களும் கைதா­க­வில்லை. இவர்கள் விட­யத்தில் அழுத்தம் கொடுப்போர் யார்?

(குறுக்­கீடு – பிரதி பாது­காப்பு அமைச்சர்) சம்­பந்­தப்­பட்­டோரைக் கைது செய்து நட­வ­டிக்கை எடுக்­கும்­ப­டியே ஜனா­தி­ப­தியால் பணிப்­புரை விடுக்­கப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­பதி யாருக்கும் அழுத்தம் கொடுக்­க­வில்லை.

முஜிபுர் ரஹ்மான் தொடர்ந்து தெரி­விக்­கையில்,

வன்­மு­றையில் மினு­வாங்­கொடை வெகு­வாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. அங்கு நூற்­றுக்­க­ணக்­கானோர் அடா­வ­டித்­தனம் புரிந்தும் 32 பேரே கைது செய்­யப்­பட்­டனர். அவ­ச­ர­கால சட்­டத்­தின்கீழ் கைதுகள் இடம்­பெற்ற போதிலும் 32 பேரும் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். இதனால் இந்­நாட்டின் சட்டம் கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது. மக்கள் சட்டம், நீதித்­து­றை­மீது நம்­பிக்­கை­யி­ழந்­துள்­ளனர். இவர்­களை விடு­விக்க அழுத்தம் கொடுத்­தது யார்? இதற்கு யார் பொறுப்­புக்­கூ­று­வது? இன­வாத வன்­மு­றைகள் மேலும் வள­ரவே இந்­ந­ட­வ­டிக்­கைகள் வழி­வ­குத்து விடு­கின்­றன.

நாம் பல இன மோதல்­க­ளுக்கும் முகம் கொடுத்து அனு­பவம் பெற்­றுள்ளோம். அப்­பாவி மக்­களின் சொத்­துகள் அழிக்­கப்­ப­டு­வதும் சூறை­யா­டப்­ப­டு­வதும் தடுத்து நிறுத்­தப்­பட வேண்டும். இனி­யா­வது அரசு கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும். இவ்­வ­ரசும் இதனைச் செய்யத் தவ­றினால் இதற்கும் அதேக­திதான் ஏற்­படும்.

சட்டம் ஒரு தரப்­புக்குச் சாத­க­மா­கவும் மற்றத் தரப்­புக்கு இறுக்­க­மா­கவும் பிர­யோ­கிக்­கப்­படும் பார­பட்சம் மாற்­றி­ய­மைக்­கப்­பட வேண்டும். பார­பட்சம் காட்டி நாட்டை மனி­தா­பி­மா­ன­மற்ற காட்­டு­மி­ராண்டி யுகத்­துக்குத் தள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்­கிறேன்.

இந்த வன்­மு­றை­களின் போது 34 பள்­ளி­வா­சல்கள் உடைத்தும் எரித்தும் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. 180 வீடுகள் நாச­மாக்­கப்­பட்­டுள்­ளன. 140 க்கும் மேற்­பட்ட கடைகள், 45 வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. மிகவும் பாரிய இரு தொழிற்சாலைகள் முற்றாக நாசமாக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு தொழிற்சாலை 700 மில்லியன் ரூபா அளவில் நஷ்டமேற்பட்டுள்ளது. இத்தொழிற்சாலை உள்ள திவுலப்பிட்டியைச் சேர்ந்த சுமார் 90 வீதமான ஏழைத் தொழிலாளிகளே வேலை செய்து வந்துள்ளனர். இது நாட்டின் பொருளாதாரத்திற்கு விழுந்த பாரிய அடியாகும்.

இப்பாதிப்புக்குள்ளானோருக்கு வழங்கும் நஷ்டஈட்டுப் பணமும் மக்கள் பணம் என்பதை உணரவேண்டும். எனவே வன்முறையில் ஈடுபடுவோரை எத்தகைய தராதரமும் பாராது கைதுசெய்து விசாரணைக்குட்படுத்தி உரிய தண்டனைகளைப் பெற்றுக்கொடுப்பதில் அரசு பின்நிற்கக் கூடாது. தவறினால் அது நாட்டுக்குத்தான் பாதிப்பாக அமையும். நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாக அமையும்.

VIDIVELLI

Leave A Reply

Your email address will not be published.