முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான தாக்­குதல் திட்­ட­மிட்­ட­தொன்று

பின்­ன­ணி­யி­லிருப்­ப­வர்கள் கண்­ட­றி­யப்­ப­ட­வேண்டும் என்­கிறார் நளின்

0 878

குரு­நாகல் பிர­தே­சத்தில் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்­ட­தொன்­றாகும். இதன் பின்­ன­ணியில் இருப்­ப­வர்கள் தொடர்பில் கண்­ட­றி­ய­வேண்டும் என பிரதி அமைச்சர் நளின் பண்­டார தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று இடம்­பெற்ற செயல் நுணுக்க அபி­வி­ருத்தி கருத்­திட்­டங்கள் சட்­டத்தின் கட்­டளை மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே   இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

நாட்டில் இடம்­பெற்ற பயங்­க­ர­வாத தாக்­குதல் கார­ண­மாக சுற்­று­லாத்­துறை பாதிக்­கப்­பட்­டுள்­ளது. என்­றாலும் எமது முத­லீ­டுகள் தடைப்­ப­டாமல் எமது வேலைத்­திட்­டங்­களை தொடர்ந்து கொண்­டு­செல்ல முடி­யு­மா­கி­யுள்­ளது. அம்­பாந்­தோட்­டையில் நாங்கள் ஆரம்­பித்த அபி­வி­ருத்தி வேலைத்­திட்டம் மற்றும் திரு­கோ­ண­ம­லையில் ஆரம்­பித்­தி­ருக்கும் அபி­வி­ருத்தி வேலைத்­திட்டம் என்­ப­வற்றில் எந்த தடையும் இல்­லாமல் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

அத்­துடன் முத­லீட்­டா­ளர்கள் பின்­வாங்கி செல்­லா­த­வ­கையில் அவர்­களை நாங்கள் பாது­காத்­தி­ருக்­கின்றோம். இது நாங்கள் அடைந்­து­கொண்ட வெற்­றி­யாகும்.  சுற்­றுலாத்துறையை அபி­வி­ருத்தி செய்­வ­தாக இருந்தால் சுற்­றுலா பய­ணி­களின் வருகை உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். அதற்­கான நம்­பிக்­கையை நாங்கள் ஏற்­ப­டுத்தி வரு­கின்றோம்.

மேலும் பயங்­க­ர­வாத தாக்­குதல் இடம்­பெற்று சில வாரங்­களின் பின்னர் எனது குரு­நாகல்  மாவட்­டத்தின் கினி­யம தொகு­தியில் குண்­டர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குலை வன்­மை­யாக கண்­டிக்­கின்றேன். அந்த பிர­தே­சத்தில் இவ்­வா­றான அசம்­பா­விதம் இடம்­பெ­று­வ­தற்கு கார­ண­மாக இருந்­தது, அந்த பகு­தியில் இருக்கும் குளத்தில் ஆயு­தங்கள் இருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்ட செய்­தி­யாகும்.

குறித்த குளத்தில் அவ்­வாறு ஆயு­தங்கள் இருப்­பதா என கடற்­ப­டை­யினர் தேடுதல் நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டனர். என்­றாலும் அங்கு எந்­த­வொரு ஆயு­தமும் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை. என்­றாலும் அன்­றைய தினம் பிற்­பகல் வேளையில் குளத்தின் வெளிப்­பி­ர­தே­சத்தில் துப்­பாக்கி ரவைகள் கண்­டு­பி­டிக்­கப்­ப­டு­கின்­றன. கடற்­ப­டை­யி­ன­ருக்கு கிடைக்­காத துப்­பாக்கி ரவைகள் பிர­சித்­த­மான இட­மொன்றில் கண்­டு­பி­டிக்­கப்­ப­டு­வ­தென்றால் அதில் ஏதோ மர்மம் இருக்­க­வேண்டும்.

அத்­துடன் இந்த துப்­பாக்கி ரவைகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டதை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டே அந்த பிர­தே­சத்தில் 4 பள்­ளி­வா­சல்கள் மீது தாக்­குதல் இடம்­பெற்­றுள்­ளது. அதனால் அந்த கும்­பல்­களின் பின்­ன­ணியில் அர­சியல் நட­வ­டிக்­கைகள் இருக்­க­வேண்டும். மிகவும் திட்­ட­மிட்டே குரு­நாகல் மாவட்­டத்தின் முஸ்லிம் மக்கள் வாழும் ஏனைய பிர­தே­சங்­க­ளிலும் தாக்­குதல் நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. பயங்­க­ர­வாத தாக்­கு­த­லுடன் இனப்­பி­ரச்­சினை ஏற்­ப­டக்­கூ­டாது என்று கர்­தினால் மல்கம் ரஞ்ஜித் மேற்­கொண்ட வழி­காட்டல், எமது பிர­தே­சத்தில் வைராக்­கியம் தலை­தூக்­கு­வதை தடுக்க முடி­யாமல் போன­தை­யிட்டு கவ­லை­ய­டை­கின்றேன்.

அத்­துடன் எமது மாவட்டத்தில் சிங்கள முஸ்லிம் சகோதரத்துவம் ஆரம்பகாலம் முதல் பேணப்பட்டு வருகின்றது. இந்த நல்லிணக்கத்தை குழப்புவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். அதனால் இந்த வன்முறையாளர்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகளில் அரசியல் செய்வதை விடுத்து நாடுதொடர்பில் மாத்திரம் சிந்தித்து செயற்படவேண்டும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.