கருப்பு அத்தியாயத்தின் மற்றுமொரு பக்கம்

0 862

ஹெட்­டி­பொ­ல­வி­லி­ருந்து
எம்.எப்.எம்.பஸீர்

ஏப்ரல் 21 இலங்கைத் தேசத்தின் வர­லாற்றில் கறுப்பு அத்­தி­யாயம் ஒன்றைத் தொடக்­கி­வைத்­து­விட்டுச் சென்­று­விட்­டது. முஸ்லிம் பெயர் தாங்­கிய ஒரு தீவி­ர­வாதக் கும்பல் தொடங்கி வைத்த அந்த நாச­காரச் செயல், இன்று பிற இன தீவி­ர­வாதக் குழுக்­க­ளாலும் பின்­தொ­ட­ரப்­ப­டு­கி­றது. அதற்கு முஸ்லிம் மக்கள் பலிக்­க­டா­வாக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.நீர்­கொ­ழும்பு தேவா­லய தாக்­கு­த­லினால் ஆத்­தி­ர­ம­டைந்த ஒரு குழு­வினர் கடந்த மே 5 ஆம் திகதி பெரி­ய­முல்­லையில் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான தாக்­கு­தல்­களை மேற்­கொண்­டி­ருந்­தனர். அவை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்டு, நாட்டின் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த நிலையில், கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை சிலாபம் நகரில் பேஸ் புக் பதி­வொன்றை அடிப்­ப­டை­யாகக் கொண்டு முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக கட்­ட­விழ்க்­கப்­பட்ட வன்­மு­றைகள் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய தினங்­களில் குரு­நாகல் மாவட்­டத்தின் பல பகு­தி­க­ளுக்கும் கம்­பஹா மாவட்­டத்தின் மினு­வாங்­கொடை நக­ருக்கும் பர­வின. இதன் கார­ண­மாக இது­வரை முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான சுமார் 500 க்கும் மேற்­பட்ட சொத்­துக்கள் சேத­மாக்­கப்­பட்­டுள்­ள­துடன் ஒரு உயி­ரி­ழப்பும் பதி­வா­கி­யுள்­ளது.

இப் பின்­ன­ணியில் தாக்­கு­தல்­களில் பாதிக்­கப்­பட்ட கிரா­மங்­க­ளுக்கு ‘விடி­வெள்ளி ‘ தனது பய­ணத்தை ஆரம்­பித்­தது. அவற்றில் நேற்­றைய தினம் நாம் விஜயம் செய்த ஹெட்­டி­பொல, கொட்­டம்­ப­பிட்­டிய மற்றும் அனுக்கன கிராம மக்­களின் அனு­ப­வங்­களை இங்கு தரு­கிறோம். ஏனைய பிர­தேச மக்­களின் குரல்­களை தொடர்ச்­சி­யாக விடி­வெள்­ளியில்
எதிர்­பா­ருங்கள்.

வர்த்­தகர் எம்.ரி.எம்.சப்வான்,
கரந்­தி­பொல

இந்த வன்­மு­றை­களால் அதிகம் பாதிக்­கப்­பட்ட குளி­யா­பிட்­டிய, கரந்­தி­பொ­லவில் வசிக்கும் வர்த்­தகர் எம்.ரி.எம்.சப்வான் தனது அனு­ப­வத்தை இவ்­வாறு பகிர்ந்து கொண்டார். ”நாம் குடும்­ப­மாக வாரி­ய­பொ­ல­வுக்குச் சென்­று­விட்டு இங்கு வந்து நோன்பு துறப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்து கொண்­டி­ருந்தோம். அப்­போது பிர­தே­சத்தின் நிலை­மைகள் சரி­யில்லை என எமது அய­ல­வர்கள் கூறி­னார்கள். வீதி­யோ­ர­மா­க­வுள்ள சில கடைகள் மீது கல்­வீச்சுத் தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளதால் எமது வாக­னத்தை வீட்­டி­லி­ருந்து அப்­பு­றப்­ப­டுத்­து­மாறு அவர்கள் கேட்டுக் கொண்­டார்கள்.

இதனால் எனது மக­னையும் ஏற்­றிக்­கொண்டு வாக­னத்தை நண்பர் ஒரு­வரின் வீட்டில் நிறுத்­தி­விட்டு வீட்டை நோக்கி வந்­த­போது சுமார் 150 பேர் அடங்­கிய குண்­டர்கள் எமது வீட்டைத் தாக்கிக் கொண்­டி­ருப்­பதைக் கண்டோம்” என்றார்.
”அவர்­களில் சிலர் வாள்­களை வைத்­தி­ருந்­தார்கள். மேலும் சில­ரது கைகளில் பார­மான உப­க­ர­ணங்கள் இருந்­தன” என வீட்டின் இரண்­டா­வது மாடி­யி­லி­ருந்­த­வாறே சம்­ப­வத்தைப் பார்த்துக் கொண்­டி­ருந்த அவ­ரது மற்­றொரு மகன் கூறினார்.

”குண்­டர்கள் எமது களஞ்­சி­ய­சா­லை­யி­லி­ருந்து மட்­பாண்­டங்­களை உடைத்துத் தள்­ளி­னார்கள். வீட்­டி­லி­ருந்த எனது மகன் என்னை தொலை­பே­சியில் அழைத்து நிலைமை பயங்­க­ர­மா­க­வுள்­ள­தாக அச்­சத்­துடன் கூறினார்.

னக்கும் என்­னுடன் இருந்த மற்ற மக­னுக்கும் வேறு தெரிவு இருக்­க­வில்லை. நாம் எமது வீட்­டுக்கு முன்­னா­லுள்ள காணியில் மறைந்து கொண்டு, வீட்­டி­லுள்­ளோரைக் காப்­பாற்­று­வ­தற்­கான சந்­தர்ப்பம் கிடைக்கும் வரை காத்­தி­ருந்தோம்.

இந்த சந்­தர்ப்­பத்தில் நாம் பொலி­சாரை அழைத்தோம். எமக்குத் தெரிந்­த­வர்­க­ளை­யெல்லாம் உத­விக்கு வரு­மாறு அழைத்தோம். சற்று நேரத்தில் குண்­டர்கள் குழு­வினர் அங்­கி­ருந்து கலைந்து செல்லத் தொடங்­கி­னார்கள். அவர்­களில் ஒருவர் இங்கு அடித்­தது போதும் என்றார். ஆனால் இன்­னொ­ருவர் வீதியின் மறு­பக்­கத்­திற்கு ஓடி வந்து நெருப்புப் பெட்­டியைத் தரு­மாறு சில­ரிடம் கேட்டார். பின்னர் பெற்றோல் கல­னுடன் சிலர் வந்­தார்கள். அவர்­களின் இன்­னொ­ருவர் இந்த இடத்­துக்கு போது­மான சேதத்தை ஏற்­ப­டுத்­தி­விட்டோம் என்றார். ஆனால் அத­னுடன் உடன்­ப­டாத ஒருவர் சப்­வானின் வீட்­டுக்கு தீ வைக்க வேண்டும் என்றார்.

நாம் அச்­சப்­பட்­டது போலவே எமது களஞ்­சி­ய­சா­லைக்கு தீ வைத்­தார்கள். அங்­கி­ருந்த பிளாஸ்டிக் பொருட்கள் உடன் தீப்­பற்றிக் கொள்­ளவே கீழ் தளம் எங்கும் தீ பர­வி­யது. எனது மனைவி, மகன், மகள் மற்றும் பேரப்­பிள்­ளைகள் மேல் மாடியில் சிக்கிக் கொண்­டார்கள். எனினும் எமது அய­ல­வர்கள் அங்கு வந்து குண்­டர்­களைக் கலைத்­து­விட்டு, வீட்­டுக்குள் சென்று மனைவி பிள்­ளை­களைக் காப்­பாற்ற உத­வி­னார்கள். எமது களஞ்­சி­ய­சா­லையில் நோன்புப் பெரு­நா­ளைக்கு விற்­பனை செய்­வ­தற்­கான பொருட்கள் நிரம்­பி­யி­ருந்­தன. அவை தீயில் கருகிச் சாம்­ப­ரா­கி­விட்­டன. வீட்டின் மேல் தளத்­தி­லி­ருந்­த­வர்­களால் இந்த தீயின் வெப்­பத்தை தாங்க முடி­யா­தி­ருந்­த­தாக மகன் சொன்னார். பின்னர் அய­ல­வர்கள் மற்றும் இரா­ணு­வத்­தி­னரின் உத­வி­யுடன் குடும்­பத்­தி­னரை பாது­காப்­பாக மீட்டோம்.

குண்­டர்கள் தாக்க ஆரம்­பித்­த­வு­ட­னேயே நாம் பொலி­சாரை வரு­மாறு அழைத்தோம். ஆனால் அவர்கள் தாம­த­மா­கியே இங்கு வந்­தார்கள். எமது வீட்­டையும் கடை­யையும் தாக்க ஆரம்­பித்து முடிக்கும் வரை நாம் எமது கண்­களால் பார்த்துக் கொண்­டி­ருந்தோம்.

இந்த வன்­மு­றை­களால் பிர­தே­சத்­தி­லுள்ள சிங்­கள மக்­களும் அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ள­தாக சப்வான் கூறு­கிறார். பிர­தேச சபையின் பவு­ச­ரினால் வழங்­கப்­பட்ட நீரைக் கொண்டு அய­ல­வர்­களின் உத­வி­யுடன் தீயை அணைத்தோம். சிங்­கள சகோ­தர சகோ­த­ரிகள் எமக்கு இந்த தரு­ணத்தில் உத­வி­யாக இருந்­தார்கள். இந்த நாச­கார செயலில் குளி­யா­பிட்­டி­ய­வி­லுள்ள எமது அய­ல­வர்கள் சம்­பந்­தப்­பட்­டி­ருப்­பார்கள் என நான் நம்­ப­வில்லை என்றார் சப்வான். அவ­ரது குடும்பம் தற்­போது அரு­கி­லுள்ள சிங்­கள குடும்பம் ஒன்றின் வீட்­டி­லேயே தஞ்­ச­ம­டைந்­துள்­ளது.

பிர­தே­சத்தில் தற்­போது அமைதி திரும்­பி­யுள்­ள­தாக கூறு­கிறார் குளி­யா­பிட்­டிய மேயர் லக்ஷ்மன் அதி­காரி. ”குளி­யா­பிட்­டி­யவில் 12 வீத­மா­னோரே முஸ்­லிம்கள். அவர்கள் பல வரு­டங்­க­ளாக சமா­தா­னத்­து­டனும் நல்­லு­ற­வுடன் வாழ்­கின்ற மக்கள்” என அவர் குறிப்­பி­டு­கிறார். பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்குத் தேவை­யான நிவா­ரண உத­வி­களைப் பெற்றுக் கொடுக்க தான் நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தா­கவும் அவர் குறிப்­பி­டு­கிறார்.

ஹெட்­டி­பொல, பண்­டு­வஸ்­நு­வ­ரவில் முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான சுமார் 80 கடை­களும் வீடு­களும் தாக்கி சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன.

குளி­யா­பிட்­டிய- ஹெட்­டி­பொல பிர­தான வீதியில் திங்கட் கிழமை பகல் 1.30 மணி­ய­ளவில் வீதி­யோ­ர­மா­க­வி­ருக்கும் மரக் கறிக் கடைகள் மற்றும் சிற்­றுண்டிக் கடைகள் தாக்­கி­ய­ழிக்­கப்­பட்­டன.

கொட்­டம்­­பிட்­டி­யவில் வசிக்கும் நெளபரும் பாதிக்­கப்­பட்­ட­வர்­களுள் ஒருவர். ” வன்­முறைக் கும்பல் தாக்­கு­தல்­களை ஆரம்­பித்த உட­னேயே பொலிசார் ஊர­டங்குச் சட்­டத்தைப் பிறப்­பித்­தார்கள். அது குண்­டர்­க­ளுக்கு வாய்ப்­பாக அமைந்­தது” என்றார்.

சுமார் ஆயிரம் குண்­டர்கள் வந்­த­தா­கவும் அவர்­களைத் தொடர்ந்து பொலிஸ் வாக­னங்கள் வந்­த­தா­கவும் நௌபரின் மனைவி கூறு­கிறார். ”அவர்கள் பொலி­சா­ருக்கு கட்­டுப்­ப­ட­வில்லை. நாம் உயிர் தப்­பு­வ­தற்­காக எமது வீடு­க­ளையும் உடை­மை­க­ளையும் விட்­டு­விட்டு அய­ல­வர்­க­ளு­டனும் பிள்­ளை­க­ளு­டனும் பின் வழி­யாக இருந்த வயல் வெளி­களை நோக்கி ஓடினோம்” என்றும் அவர் குறிப்­பி­டு­கிறார்.

இந்தத் தாக்­கு­தல்­களில் ஈடு­பட்ட பெருந் தொகை­யானோர் வெளிப்­பி­ர­தே­சத்தைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருப்­பினும் உள்­ளூர்­வா­சி­களின் ஒத்­து­ழைப்­பின்றி இதனைச் செய்­தி­ருக்க முடி­யாது. இல்­லா­து­விடின் அவர்­களால் எப்­படி முஸ்லிம் வீடு­களை இனங்­கண்டு தாக்க முடியும் என நௌபர் கேள்வி எழுப்­பு­கிறார்.

எம்.சி.அப்துல் பாரி,
ஹெட்­டி­பொல, கொட்­டம்­ப­பிட்­டிய

ஹெட்­டி­பொல, கொட்­டம்­ப­பிட்­டி­ய­வி­லுள்ள பண்­டு­வஸ்­நு­வர மோட்டர்ஸ் மற்றும் ஒயில் மார்ட் வர்த்­தக நிறு­வ­னத்தின் உரி­மை­யா­ளர்தான் எம்.சி.அப்துல் பாரி. அவர் தமது சொத்­து­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட சேதங்கள் பற்றி எம்­முடன் பகிர்ந்து கொண்டார்.

” எமது கடை­களும் வீடும் தாக்கி எரிக்­கப்­பட்­டன. பொலிசார் எம்மை விரட்­டி­விட்டு வன்­முறைக் கும்பல் தாக்­குதல் நடத்த வழி­யேற்­ப­டுத்திக் கொடுத்­தார்கள். ஊர­டங்குச் சட்டம் எங்­க­ளுக்­குத்தான் போடப்­பட்­டது. அவர்­க­ளுக்­கல்ல. சுமார் 1000 பேர­ளவில் வந்து தாக்­கி­னார்கள். எமது சொத்­துக்கள் தீப்­பற்றி எரிந்த போது அதனை பொலிசார் அணைக்­க­வு­மில்லை. எம்மை அணைக்க விட­வு­மில்லை. இன்று நாம் நடுத் தெருவில் நிற்­கிறோம். எனது வர்த்­தக நிலை­யத்தில் இருந்த 50 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான பொருட்கள் முற்­றாக எரிந்­து­விட்­டன. வீடும் சேத­ம­டைந்­துள்­ளது” என்றார்.

ஹெட்­டி­பொ­லவில் உள்ள மஸ்­ஜிதுல் ஹுதா பள்­ளி­வா­சலும் இதே கும்­பலால் திங்கட் கிழமை மாலை தாக்­கப்­பட்­டுள்­ளது. ” சிலா­பத்தில் பேஸ்புக் பதி­வொன்­றினால் தொடங்­கிய பிரச்­சினை இன்று எமது பகு­திக்கு வந்­தி­ருக்­கி­றது. கடந்த 12 மணித்­தி­யா­லங்­களில் இந்தப் பகு­தியில் பாரிய அழி­வுகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன” என பள்­ளி­வா­சலின் நிர்­வா­கி­களில் ஒரு­வான மொஹமட் சலீம் தெரி­வித்தார்.

முஹமட் ஜெளபர், கொட்­டம்­ப­பிட்­டிய

இப் பகு­தியில் பாதிக்­கப்­பட்ட மேலும் சில­ரு­டனும் நாம் பேசினோம். கொட்­டம்­ப­பிட்­டி­யவில் வசிக்கும் முஹமட் ஜெளபர் இரு கண்­க­ளி­னதும் பார்­வையை இழந்­தவர். கோழி­களை மொத்­த­மாக வாங்கி வந்து விற்­பனை செய்­கின்ற வியா­பா­ரி­யான இவ­ரது வீடும் வாக­னங்­களும் தாக்கி சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன.
” நாம் இப்­படி ஒரு தாக்­கு­தலை கன­விலும் நினைக்­க­வில்லை. வன்­மு­றை­யா­ளர்கள் வீட்டின் உள்ளே வர­வில்லை. என்னை வெளியில் வரு­மாறு அழைத்­தார்கள். நான் போக­வில்லை. வந்­தி­ருந்தால் என்­னையும் தாக்­கி­யி­ருப்­பார்கள். கடந்த 20 வரு­டங்­க­ளான நான் இந்தத் தொழில் செய்து அல்­ஹம்­து­லில்லாஹ் என்று குடும்­பத்தை நடத்தி வரு­கிறேன். எனக்கு 5 பிள்­ளைகள். பார்வை இல்லை என்­ப­தற்­காக யாரி­டமும் எதிர்­பார்க்­காது சுய­மாக உழைத்து வரு­கிறேன். எல்லாம் அல்­லாஹ்வின் ஏற்­பாடு. மீண்டும் அல்லாஹ் எனக்கு பொரு­ளா­தார வளத்தை இதை விட இரட்­டிப்­பாக தருவான் என்ற நம்­பிக்கை உண்டு.
எனது வேன் மற்றும் லொறி என்­பன எரிக்­கப்­பட்­டுள்­ளன. வீடும் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளது. இந்தத் தாக்­கு­தலில் எனக்கு அறி­மு­க­மா­ன­வர்­களும் சம்­பந்­தப்­பட்­டி­ருக்­கி­றார்கள் என நினைக்­கிறேன். ஏனெனில் ”ஜெளபர் வெளியே வா…” என்று பெயர் சொல்­லித்தான் அழைத்­தார்கள் ” என கவலை நிரம்பக் கூறி முடித்தார்.

ஏ.எல்.எம். நளீம், கொட்­டம் ப­பிட்­டிய

இதே இடத்தில் வசிப்­ப­வர்தான் அப்ஸான் கேட்­டரிங் சேர்விஸ் உரி­மை­யாளர் ஏ.எல்.எம். நளீம்.

” திங்கள் பகல் 2.30 மணி­யி­ருக்கும். நூற்றுக் கணக்­கான குண்­டர்கள் பஸ்­களில் வந்­தி­றங்­கி­னார்கள். நான் வீட்­டி­லி­ருந்து காரை வெளியில் கொண்டு போக முயன்றேன். காரைக் கொண்டு செல்ல வேண்டாம் என்­றார்கள். நான் காரை நிறுத்­தி­விட்டு வீட்­டுக்குள் சென்று விட்டேன். பின்னர் வீட்டின் முன்­புறம் வந்து வாக­னத்தை உடைத்­தார்கள். எமது வீட்டில் 6 முதல் 7 வாக­னங்கள் நிறுத்­தப்­பட்­டி­ருந்­தன. அவற்றில் 3 வாக­னங்­க­ளுக்கு தீ வைத்­தார்கள். மகனின் மோட்டார் சைக்­கிளும் தீக்­கி­ரை­யா­கி­விட்­டது. இதனால் ஒன்­றரைக் கோடி ரூபா இழப்பு ஏற்­பட்­டுள்­ளது. சுமார் 1 மணித்­தி­யாலம் இப் பகு­தியில் நின்று தாக்­கி­னார்கள். அவர்கள் சென்­ற­வுடன் வெளியே வந்து நீரைப் பாய்ச்சி தீயை அணைத்தோம். இல்­லா­விட்டால் எல்லா வாக­னங்­களும் எரிந்து நாச­மா­கி­யி­ருக்கும்.

எனது சமையல் நிலை­யத்தில் நூற்றுக் கணக்­கான சிங்­க­ள­வர்கள் வேலை செய்­கி­றார்கள். அவர்­களில் சிலரும் சேர்ந்து வந்­துதான் எமது இடத்தை தாக்­கி­யுள்­ளார்கள். என்னை வெளியில் வரு­மாறு அழைத்­தார்கள். நான் வந்­தி­ருந்தால் கொன்­றி­ருப்­பார்கள்.

எமது வீட்டின் முன்­பாக ஒரு மீன் தொட்டி உள்­ளது. அதனை ஒருவன் உடைக்க முயன்­ற­போது இன்­னொ­ருவன் ” மீன் தொட்­டியை உடைக்க வேண்டாம்… மீன்கள் பாவம்” என்று சொன்னான். அதனால் மீன் தொட்டி தப்­பி­விட்­டது”என்றார்.

சம்­ப­வத்­தின்­போது வீட்­டினுள் பிள்­ளை­க­ளுடன் ஒளிந்­தி­ருந்த நளீமின் மனை­வி­யான ஆசி­ரியை பாத்­திமா பர்வீன் தனது அனு­ப­வத்தை இப்­படிக் கூறு­கிறார். ”எமது வீட்டைத் தாக்கும் சத்தம் கேட்­டதும் நாம் உயிரைக் காப்­பாற்றிக் கொள்ள ஒரு மூலையில் இருந்து எல்­லோரும் அழுதோம். பிள்­ளைகள் மிகவும் பயந்து போயுள்­ளார்கள். இச் சம்­ப­வத்தின் பிறகு சாப்­பி­டு­கி­றார்கள் இல்லை. எமது தூக்கம் தொலைந்­து­விட்­டது. பிள்­ளைகள் தூக்­கத்தில் வீறிட்டு அழு­கி­றார்கள். உம்மா இது மையத்து வீடா என்று எனது மகள் கேட்­கிறார். ஏப்ரல் 21 குண்டுத் தாக்­கு­தலை அறிந்து நாங்­களும் கவ­லைப்­பட்டோம். கண்ணீர் வடித்தோம். நாமும் அந்த தீவி­ர­வாத கூட்­டத்­திற்கு எதி­ரா­ன­வர்­கள்தான். அப்­பாவி மக்­க­ளான எங்­களை இவர்கள் ஏன் தாக்­கு­கி­றார்கள்? எனக் கேட்­கிறார்.

அஷ்ஷெய்க் நி ஃமதுல்லாஹ் (நூரி)
அதிபர், ஜமா­லியா அரபுக் கல்­லூரி, கொட்­டம்­ப­பி­டிய

ஏப்ரல் 21 தாக்­கு­த­லுக்குப் பிறகு 23 ஆம் திகதி நாம் மத்­ர­ஸா­வுக்கு விடு­முறை கொடுத்து மாண­வர்­களை வீடு­க­ளுக்கு அனுப்­பி­விட்டோம். இதன் பின்னர் எமது கல்­லூ­ரியை 4 தட­வைகள் பொலி­சாரும் இரா­ணு­வத்­தி­னரும் வந்து சோத­னை­யிட்­டார்கள். இறு­தி­யாக 5ஆவது தடவை நூற்றுக் கணக்­கானோர் வந்து எமது கல்­லூ­ரியை சோத­னை­யிட்­டார்கள். இதன் பின்­னர்தான் வந்து எமது கல்­லூ­ரியைத் தாக்­கி­னார்கள். எமது கட்­டிடம் உடைந்­தது பற்றிக் கவ­லை­யில்லை. ஆனால் குர்­ஆன்­க­ளையும் கிதா­பு­க­ளையும் எரித்­து­விட்­டார்கள். இந்த மத்­ரஸா கடந்த 20 வரு­டங்­க­ளாக இப் பகு­தியில் இயங்கி வரு­கி­றது. இதற்கு உதவி செய்­து­வரும் இக் கிராம மக்கள் கூட இன்று இத் தாக்­கு­தலால் கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்­டு­விட்­டார்கள். எங்கள் எல்­லோ­ருக்­கா­கவும் துஆ செய்­யுங்கள்.

மெளலவி சப்வான்,
மஸ்­ஜிதுல் அப்ரார், மடிகே அனுக்­கன

13 ஆம் திகதி பகல் ஹெட்­டி­பொ­லவில் தாக்­குதல் நடப்­ப­தாக எமக்கு தகவல் கிடைத்­தது. எனினும் நக­ரி­லி­ருந்து 4 கிலோ மீற்றர் உட்­பு­ற­மா­க­வுள்ள எமது கிரா­மத்­துக்கு தாக்க வர­மாட்­டார்கள் என்ற நம்­பிக்­கையில் இருந்தோம். ஆனால் எமது எதிர்பார்ப்புகள் தவிடுபொடியாகின. 3.45 மணியளவில் அதிக சத்தத்துடன் 300 பேர் கொண்ட பெருங் கூட்டத்தினர் லொறிகள் வேன்கள் மோட்டார் சைக்கிள்களில் எமது பள்ளியை நோக்கி வந்தார்கள். பள்ளியைத் தாக்க வந்தவர்கள் எம்மையும் வாளால் வெட்டத் துரத்தினார்கள். நாங்கள் பின்வழியால் ஓடி உயிர் தப்பினோம். காட்டுக்குள் அரை மணி நேரம் ஒளிந்திருந்தோம். பெண்களுடனும் குழந்தைகளுடனும் காடுகளுக்குள் ஒளிந்திருந்தோம். அங்கிருந்து எம்மைக் காப்பாற்றுமாறு பொலிசாருக்கும் சி.ஐ.டி.யினருக்கும் தொலைபேசியில் அழைப்பெடுத்தும் அவர்கள் பதிலளிக்கவில்லை.

பின்னர் தாக்குதல்தாரிகள் அங்கிருந்து விலகிச் செல்கின்ற அதே நேரத்தில்தான் பொலிசாரும் வந்து சேர்ந்தார்கள். பொலிஸ் பாதுகாப்புடனும் துணையுடனும்தான் இவர்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் என்றே நாம் சந்தேகிக்கிறோம்.

நாம் தீயில் எரிந்து கொண்டிருந்த பள்ளிவாசலை அணைக்க முற்பட்டபோது அதற்கு பொலிசார் எச்சரிக்கைவிடுத்தார்கள். எம்முடன் கடுமையாக நடந்து கொண்டார்கள்.

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் எமது பள்ளிவாசலில் கூட அதனைக் கண்டிக்கும் நிகழ்வையும் இரங்கல் கூட்டத்தையும் நடத்தினோம். நாம் அந்த தீவிரவாத செயலை என்றும் கண்டிக்கிறோம். அதனுடன் எந்தவகையிலும் சம்பந்தப்படாத எம்மை இப்படித் தாக்கிவிட்டார்கள் என்பதை நினைக்கையில் வேதனையாகவுள்ளது.

படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்.

Leave A Reply

Your email address will not be published.