தீவிரவாதத்துக்கு தீவிரவாதம் தீர்வாகாது

0 743

இலங்கை முஸ்­லிம்கள் மிக மோச­மா­ன­தொரு கால­கட்­டத்தைச் சந்­தித்­துள்­ளனர். மரத்தால் விழுந்­த­வனை மாடேறி மிதித்­த­தற்­கொப்ப, ஏப்ரல் 21 தாக்­கு­தல்­க­ளாலும் அதன் பின்­ன­ரான நிகழ்­வு­க­ளாலும் மன­மு­டைந்து நொந்­து­போ­யி­ருந்த முஸ்­லிம்­களை இவ்­வாரம் இடம்­பெற்ற பெரு­மெ­டுப்­பி­லான வன்­மு­றைகள் மென்­மேலும் மன அழுத்­தத்தில் தள்­ளி­யுள்­ளன.

முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக நீர்­கொ­ழும்பு, சிலாபம், குரு­நாகல் மாவட்டம் மற்றும் மினு­வாங்­கொடை ஆகிய பகு­தி­களில் கட்­ட­விழ்க்­கப்­பட்ட வன்­மு­றை­களில் ஓர் உயிர் பலி­கொள்­ளப்­பட்­டுள்­ள­துடன் 500 க்கும் மேற்­பட்ட வீடுகள், கடைகள், வாக­னங்கள் தாக்­கப்­பட்டும் தீ வைக்­கப்­பட்டும் அழிக்­கப்­பட்­டுள்­ளன.

இப் பின்­ன­ணி­யில்தான் இலங்கை அர­சாங்­கத்­தி­டமும் பாது­காப்புத் தரப்­பி­டமும் இன­வாத ஊட­கங்­க­ளி­டமும் சில கேள்­வி­களை நாம் முன்­வைக்க வேண்­டி­யுள்­ளது.

ஏப்ரல் 21 இல் தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களை நடாத்தி 250 க்கும் அதி­க­மான உயிர்­களைப் பலி­யெ­டுத்த ஐ.எஸ். அமைப்பின் உறுப்­பி­னர்கள் தீவி­ர­வா­திகள், பயங்­க­ர­வா­திகள் என்­பதில் எந்­த­வித சந்­தே­க­மு­மில்லை.

இலங்கை முஸ்லிம் சமூகம் ஒட்­டு­மொத்­த­மா­கவே இவர்­க­ளுக்கும் இஸ்­லாத்­துக்கும் எந்­த­வித சம்­பந்­த­மு­மில்லை என்றும் இவர்கள் தீவி­ர­வா­தி­கள்தான், பயங்­க­ர­வா­தி­கள்தான் என்­பதை திரும்பத் திரும்ப உறுதி செய்­து­விட்­டனர். மாத்­தி­ர­மன்றி உயி­ருடன் எஞ்­சி­யி­ருந்த தீவி­ர­வா­தி­க­ளையும் படை­யி­ன­ருக்கு காட்டிக் கொடுத்து அவர்கள் தப்­பிக்க முடி­யாத நிலையில் குண்­டு­களை வெடிக்க வைத்து தம்­மைத்­தாமே மாய்த்துக் கொள்ளச் செய்­ததும் முஸ்­லிம்­கள்தான் என்­பதை நினை­வூட்ட விரும்­பு­கிறோம். தீவி­ர­வாத நப­ரான கண­வனால் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த தமது மகளைக் கூட பொலி­சாரை வர­வ­ழைத்து ஒப்­ப­டைத்­தது முஸ்லிம் பெற்­றோர்தான் என்­ப­தையும் இங்கு சுட்­டிக்­காட்ட விரும்­பு­கிறோம்.

ஆனால் குண்டுத் தாக்­கு­தல்­களின் பின்­ன­ரான நாட்­களில் படை­யினர் முஸ்­லிம்­களின் வீடு­களை மாத்­திரம் இலக்கு வைத்து நாட­ளா­விய ரீதியில் முன்­னெ­டுத்த தேடுதல் நட­வ­டிக்­கை­களின் போது கைப்­பற்­றப்­பட்ட கத்­தி­க­ளையும் மிகச் சில வாள்­க­ளையும் திரும்பத் திரும்ப ஊட­கங்­களில் பூதா­க­ரப்­ப­டுத்திக் காட்­டி­யதன் மூலம் பெரும்­பான்மை இன மக்கள் மத்­தியில் ‘எல்லா முஸ்­லிம்­களும் தீவி­ர­வா­தி­கள்தான்’ எனும் விஷக் கருத்து திணிக்­கப்­பட்­டமை துர­திஷ்­ட­வ­ச­மா­ன­தாகும்.

வாள்­களை வைத்­தி­ருந்தோர் அவற்­றுக்கு நியா­யங்கள் கூறி­னாலும் அதற்­கெ­தி­ராக உரிய சட்ட நட­வ­டிக்­கை­களை பொலிசார் எடுக்க முடியும். அதை யாரும் மறுக்­க­வில்லை. சாதா­ரண கத்­தி­க­ளையும் வாள்­க­ளையும் வீடு­களில் வைத்­தி­ருந்த முஸ்­லிம்­களை தீவி­ர­வா­திகள் என முத்­திரை குத்­திய ஊட­கங்­களும் படை­யி­னரும் கடந்த மே 5 ஆம் திகதி முதல் மே 13 ஆம் திகதி பல இடங்­க­ளிலும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெற்ற தாக்­கு­தல்­க­ளின்­போது எங்கே போயினர்?

இந்த தாக்­கு­தல்­களை முன்­னெ­டுத்த சக­லரும் தமது கைகளில் வாள்­களை வைத்­தி­ருந்­தனர். கொட்­டா­ர­முல்­லையில் நான்கு பிள்­ளை­களின் தந்­தை­யான பௌசுல் அமீர், வாளினால் வெட்­டப்­பட்டே படு­கொலை செய்­யப்­பட்டார். ஏனைய இடங்­க­ளிலும் வாள்கள், பொல்­லுகள், இரும்புக் கம்­பிகள், பெற்றோல் குண்­டுகள் மூலமே முஸ்­லிம்­களின் இடங்கள் தாக்­கப்­பட்­டுள்­ளன. இந்த ஆயு­தங்கள் எங்­கி­ருந்து வந்­தன? இவற்றை வைத்­தி­ருந்­தோரும் தாக்­குதல் நடத்­தி­யோரும் யார்? அவர்கள் தீவி­ர­வா­திகள் இல்­லையா? அன்று வாள்­க­ளையும் கத்­தி­க­ளையும் காட்டி முஸ்­லிம்­களை தீவி­ர­வா­தி­க­ளாக சித்­தி­ரித்த இன­வாத ஊட­கங்கள் இப்­போது எங்கு போய் ஒளிந்து கொண்­டன?

அவ­சர காலச் சட்­டமும் ஊர­டங்குச் சட்­டமும் அமுலில் இருந்த வேளையில், பொலி­சாரும் இரா­ணு­வத்­தி­னரும் பார்த்­தி­ருக்க பிறரின் வீடு­களில், கடை­களில், பள்­ளி­வா­சல்­களில் நுழைந்து அட்­டூ­ழியம் புரிந்­த­வர்­களை என்­ன­வென்று அழைப்­பது? இரண்­டா­யி­ரத்­துக்கும் அதி­க­மானோர் இத் தாக்­கு­தல்­களில் பங்­கேற்­றி­ருக்க வெறும் 80 பேர்தான் கைது செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்கள். இது எந்­த­வ­கையில் நியாயம்?

முஸ்லிம் சமூ­கத்­தினுள் தலை­யெ­டுத்த இந்த தீவி­ர­வாத சக்­தி­களை முளை­யி­லேயே கிள்­ளி­யெ­றிய முஸ்­லிம்­களே அர­சாங்­கத்­துக்கு கைகொ­டுத்­தி­ருக்­கையில் இவ்­வாறு குண்­டர்­களை ஏவி தாக்­குதல் நடத்­து­வ­தற்­கான தேவை ஏற்­பட்­டது ஏன்?

தீவி­ர­வா­தத்தை ஒரு­போதும் தீவி­ர­வா­தத்தால் அழிக்க முடி­யாது. மாறாக அது இன்­னு­மின்னும் தீவி­ர­வா­தி­களை உரு­வாக்­கவே வழியைத் திறந்து கொடுக்கும். அளுத்­க­ம­விலும் கிந்­தோட்டை மற்றும் அம்­பாறை, திக­ன­விலும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றை­களைக் காட்டிக் காட்­டியே தீவி­ர­வா­திகள் தமக்கு ஆட்­களைச் சேர்த்­தார்கள். இப்­போது ஹெட்­டி­பொல, மினு­வாங்­கொடை, கொட்­டா­ர­முல்­லையின் அழி­வு­களை அடிப்­ப­டை­யாக வைத்து இன்னும் தீவிரவாதிகள் உருவாக வேண்டும் என இந்த சக்திகள் ஆசைப்படுகின்றனவா?

எனவேதான் தயவு செய்து எல்லா சமூகங்களிலும் உள்ள தீவிரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வாருங்கள். முஸ்லிம் சமூகம் தனது சமூகத்தில் உள்ள தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டவும் இதன் பிறகு தீவிரவாதிகள் உருவாகாமல் தடுக்கவும் ஏலவே தன்னைத் தயார்படுத்திவிட்டது. இப்போதுள்ள கேள்வி பெரும்பான்மை சமூகம் எப்போது தனது சமூகத்திலுள்ள தீவிரவாதிகளை களையெடுக்கப் போகிறது என்பதுதான். இதற்கு விடை காணாதவரை இந்த அழிவுகள் சங்கிலித் தொடர்தான்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.