நீர்கொழும்பு முதல் ஹெட்டிபொல வரை ருத்ரதாண்டவம்!

0 832

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று நடத்­தப்­பட்ட தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களின் அதிர்ச்­சி­யி­லி­ருந்தும் வேத­னை­க­ளி­லி­ருந்தும் மக்கள் மீள்­வ­தற்கு இன­வா­திகள் இட­ம­ளிக்­க­வில்லை. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றை­களை கட்­ட­விழ்த்து விடு­வ­தற்கு தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் அவர்­க­ளுக்கு கார­ணமாய் அமைந்­து­விட்­டன. மீண்டும் நாட்டில் வன்­மு­றைகள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அரங்­கேற்­றப்­பட்­டு­விட்­டன.
இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதக் குழு­வொன்­றினால் மேற்­கொள்­ளப்­பட்ட இஸ்லாம் அனு­ம­திக்­காத தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றைகள் வெடிக்­கலாம் என எதிர்­பார்க்­கப்­பட்­டது. என்­றாலும் பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்­டகை அவர்­களின் வழி­காட்­டல்­களும் வேண்­டு­கோள்­களும் கிறிஸ்­தவ மக்­களை சாந்­தப்­ப­டுத்­தி­யது. அமை­தியை உரு­வாக்­கி­யது. மக்­களை அவர் பொறுமை கொள்ளச் செய்தார்.

நாட்டின் ஸ்திரத்­தன்­மையை நிலை குலையச் செய்­வ­தற்கு சில இன­வாத குழுக்­களும் அர­சி­ய­லுடன் பின்­ன­ணியில் இருந்­த­வர்­களும் சந்­தர்ப்பம் ஒன்­றினை எதிர்­பார்த்துக் காத்­தி­ருந்த சந்­தர்ப்­பத்­திலே உயிர்த்த ஞாயிறு சம்­பவம் யாரும் எதிர்­பா­ராத நிலையில் அரங்­கேற்­றப்­பட்­டது. இச்­சம்­பவம் நாட்டில் ஒரு மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி தங்கள் இலக்­கினை அடைந்து கொள்­வ­தற்கு எதிர்­பார்த்­தி­ருந்த இன­வா­தி­க­ளுக்கு வாய்ப்­பாக அமைந்­து­விட்­டது.

சில தினங்­க­ளாக நீர்­கொ­ழும்பு, சிலாபம், குரு­நாகல் மாவட்டம் மற்றும் மினு­வாங்­கொடை பகு­தி­களில் மேற்­கொள்­ளப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­க­ளினால் நூற்­றுக்­க­ணக்­கான வர்த்­தக நிலைங்கள், வீடுகள் மற்றும் வாக­னங்கள் என்­பன சேதங்­க­ளுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. 27 பள்­ளி­வா­சல்கள் தாக்கி நொறுக்­கப்­பட்­டுள்­ளன. பள்­ளி­வா­சல்­களின் உட­மைகள், புனித குர்ஆன் பிர­திகள் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டுள்­ளன.

நான்கு பிள்­ளை­களின் தந்­தை­யொ­ரு­வரை காடை­யர்கள் வாளினால் வெட்டிக் கொலை செய்­தி­ருக்­கி­றார்கள். இதே வாளி­னையே பாது­காப்பு படை­யினர் முஸ்­லிம்­களின் வீடு­க­ளி­லி­ருந்து சோதனை நட­வ­டிக்­கைகள் என்ற பெயரில் கைப்­பற்றி வரு­வ­துடன் வாள் உரி­மை­யா­ளர்­களை சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­து­முள்­ளனர்.

நூற்­றுக்­க­ணக்­கான முஸ்லிம் குடும்­பங்­களின் ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்ட நிலையில் வாழ்­வா­தா­ரங்­களை இழந்து இருள் சூழ்ந்த எதிர்­கா­லத்தை முன்­னோக்­கி­யி­ருக்­கி­றார்கள். அடிப்­ப­டை­வா­தத்­துடன் எந்­த­வித தொடர்பும் அற்ற அப்­பாவி மக்கள் இவர்கள். பொது­ப­ல­சே­னாவின் வார்த்­தை­களில் கூறு­வ­தென்றால் இவர்கள் சம்­பி­ர­தாய முஸ்­லிம்கள்.
நாங்கள் இலங்­கை­யி­லுள்ள சம்­பி­ர­தாய முஸ்­லிம்­களை எதிர்க்­க­வில்லை. அடிப்­ப­டை­வாத வஹா­பிச முஸ்­லிம்­க­ளையே எதிர்க்­கிறோம். சம்­பி­ர­தாய முஸ்­லிம்கள் எங்­க­ளது சகோ­த­ரர்கள் என்று கூறி வந்த அவர்கள் இன்று சம்­பி­ர­தாய முஸ்­லிம்­களை அடித்து விரட்­டு­வ­தற்கு முயற்­சிக்­கி­றார்கள்.

நீர்­கொ­ழும்பு வன்­மு­றைகள்

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் நீர்­கொ­ழும்பு பகு­தி­யிலே ஆரம்­ப­மா­னது. கடந்த 5 ஆம் திகதி போரு­தொட்ட பல­கத்­துறை பிர­தே­சத்தில் முச்­சக்­கர வண்டி சங்­கங்­களைச் சேர்ந்த இரு குழுக்­க­ளுக்கு இடையே உரு­வான முறுகல் நிலையே நீர்­கொ­ழும்பு வன்­செ­யல்­க­ளுக்குக் கார­ண­மாகும்.

பல­கத்­து­றையில் உல்­லாச பய­ணிகள் வருகை தரும் பகு­தியில் உள்ள முச்­சக்­கர வண்டி தரிப்­பி­டத்தை முஸ்லிம் முச்­சக்­கர வண்டி சங்­கமே சட்ட ரீதி­யாகப் பதிவு செய்­தி­ருந்­தது. இந்த முச்­சக்­கர வண்டி தரிப்­பி­டத்தை பெரும்­பான்­மை­யி­னத்தைச் சேர்ந்­த­வர்கள் பதிவு செய்­வ­தற்குச் சென்­ற­போது அத்­த­ரிப்­பிடம் ஏற்­க­னவே பதிவு செய்­யப்­பட்டு விட்­ட­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர். இத­னை­ய­டுத்தே இரு தரப்­பி­ன­ருக்கும் முறுகல் நிலை உரு­வாகி அது வன்­மு­றை­யாக மாறி­யுள்­ளது.

பல­கத்­து­றையில் முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான 7 கடைகள் சேத­மாக்­கப்­பட்டு கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளன. இக்­க­டைகள் உல்­லாசப் பிர­யா­ணி­க­ளுக்கு மாணிக்கக் கல், நகைகள் மற்றும் பொருட்கள் விற்­பனை செய்யும் கடை­க­ளாகும். இங்கு ஆரம்­ப­மான வன்­மு­றைகள் உட­ன­டி­யாக முஸ்­லிம்கள் செறிந்து வாழும் பகு­தி­க­ளுக்கும் பர­வின. பெரி­ய­முல்­லையில் லாசரஸ் வீதி, செல்­ல­கந்த வீதி, கல்­கட்­டுவ வீதி, சமகி மாவத்தை, தளு­பத்த ஆகிய பகு­தி­களில் முஸ்லிம் வீடுகள் தாக்­கப்­பட்டு சேதப்­ப­டுத்­தப்­பட்­டன. வீடு­க­ளி­லி­ருந்து பணம், நகைகள் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளன.

பெரி­ய­முல்லை ஜும்ஆ பள்­ளி­வா­சலும் தாக்­கப்­பட்டு கண்­ணா­டிகள் உடைத்து நொறுக்­கப்­பட்­டன. தெனி­யா­வத்த அசனார் தக்­கியா பள்­ளி­வா­சலை உடைத்து உள் நுழைந்த காடை­யர்கள் அங்கு குர்ஆன் பிர­தி­க­ளையும் தீயிட்டுக் கொளுத்­தி­யுள்­ளார்கள். நீர்­கொ­ழும்பு பகு­தியில் 58 வீடு­களும் 10 முச்­சக்­கர வண்­டி­களும் 6 மோட்டார் சைக்­கிள்­களும் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன.

வன்­முறை சம்­ப­வங்கள் தொடர்பில் 41 முறைப்­பா­டுகள் நீர்­கொ­ழும்பு பொலிஸ் நிலை­யத்­திலும் 20 முறைப்­பா­டுகள் கட்­டான பொலிஸ் நிலை­யத்­திலும் 12 முறைப்­பா­டுகள் கொச்­சிக்­கடை பொலிஸ் நிலை­யத்­தி­லு­மென 73 முறைப்­பா­டுகள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன.

நீர்­கொ­ழும்பு பிர­தே­சத்­துக்கு அன்­றைய தினம் இரவு 7 மணி முதல் மறுநாள் 6 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை காலை 7.00 மணி­வரை ஊர­டங்குச் சட்டம் அமுல் நடத்­தப்­பட்­டது என்­றாலும் இப்­ப­கு­தியில் வன்­முறைச் சம்­ப­வங்கள் இரவு 8.00 மணி முதல் நள்­ளி­ரவு 12.00 மணி­வரை இடம்­பெற்­ற­தாக அப்­ப­குதி மக்கள் தெரி­விக்­கின்­றனர். ஊர­டங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் பாது­காப்பு படை­யினர் கட­மையில் இருந்­த­போதே வன்­மு­றை­யா­ளர்கள் எவ்­வித தடை­க­ளு­மின்றி தங்­க­ளது இலக்­கினை நிறை­வேற்றிக் கொண்­டுள்­ளார்கள்.

இந்த வன்­மு­றை­க­ளுக்குக் காரணம் மது­போ­தையே என பொலிஸ் விசா­ர­ணை­களின் பின்பு தெரி­விக்­கப்­பட்­டது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பொலி­ஸாரின் தீர்­மா­னத்தைச் சுட்­டிக்­காட்டி வன்­மு­றை­க­ளுக்குக் காரணம் மது­போ­தையே எனத் தெரி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. நீர்­கொ­ழும்பு வன்­மு­றை­களை மதுவின் பக்கம் தள்­ளி­விட்டு பொலி­ஸாரும், ஜனா­தி­ப­தியும் தங்­க­ளது பொறுப்­புக்­க­ளி­லி­ருந்தும் தவிர்ந்து கொண்­டி­ருந்த சந்­தர்ப்­பத்­திலே சிலா­பத்தில் வன்­மு­றைகள் ஆரம்­ப­மா­கின.

சிலாபம் வன்­மு­றைகள்

சிலா­பத்தில் முஸ்லிம் வர்த்­தகர் ஒருவர் தனது முகப்­புத்­த­கத்தில் பதி­வேற்­றிய பதி­வொன்றே அப்­ப­கு­தியில் வன்­மு­றை­க­ளுக்கு வித்­திட்­டுள்­ளது. இன­வாத நோக்­கற்ற முகநூல் பதிவு பெரும்­பான்மை இளை­ஞர்­களால் திரி­பு­ப­டுத்­தப்­பட்டு முஸ்­லிம்கள் அங்கு பழி­வாங்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். குறிப்­பிட்ட வர்த்­தகர் தாக்­கப்­பட்­டுள்ளார். மூன்று பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டுள்­ளன.

கடந்த 12 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை காலை இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. இத­னை­ய­டுத்து சிலாபம் பொலிஸ் பிரிவில் அன்­றைய தினம் மதியம் முதல் மறுநாள் திங்­கட்­கி­ழமை காலை 4 மணி வரை பொலிஸ் ஊர­டங்­குச்­சட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட்­டது. இங்கும் ஊர­டங்குச் சட்டம் அமுலில் இருந்த போதும் வன்­செ­யல்கள் தொடர்ந்­த­தாக அப்­ப­குதி மக்கள் முறை­யிட்­டுள்­ளார்கள். சிலா­பத்தில் மஸ்­ஜிதுன் நூர், நூர் வீதி ஜும்ஆ பள்­ளி­வாசல், மலே பள்­ளி­வாசல் என்­பன தாக்­கப்­பட்­டுள்­ளன.

சிலா­பத்தைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்­தகர் ஒருவர் தனது முகநூல் பக்­கத்தில் ‘Don’t laugh more 1 day u will cry’ என்று பதி­வேற்றம் செய்­தி­ருந்தார். ஆங்­கி­லத்­தி­லான முகநூல் பதி­வேற்­றத்­தினை தவ­றாக விளங்­கிக்­கொண்ட குழு­வொன்றே குழப்பம் விளை­வித்து வன்­மு­றை­களில் இறங்­கி­யுள்­ளது.

‘அள­வுக்­க­தி­க­மாக சிரித்தால் ஒரு நாள் அழ வேண்டும்’ என்ற முகநூல் பதி­வினை மொழி­பெ­யர்த்த சிங்­கள இளை­ஞர்கள் ‘இன்று மட்டும் தான் நீங்கள் சிரிப்­பீர்கள். நீங்கள் அழ இன்னும் ஒரு நாள் இருக்­கி­றது’ என பதி­வி­டப்­பட்­டுள்­ள­தாக எண்ணி அதன் உண்மைத் தன்­மையை கேட்டு சம்­பந்­தப்­பட்ட வர்த்­த­கரின் கடைக்கும், பொலி­ஸுக்கும் சென்று வாதிட்­ட­தி­னை­ய­டுத்தே பிரச்­சினை உரு­வா­கி­யி­ருக்­கி­றது. வர்த்­தகர் பெரும்­பான்மை இளை­ஞர்­களால் தாக்­கப்­பட்­டுள்ளார்.

நீர்­கொ­ழும்பில் ஆரம்­ப­மான முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வன்­மு­றைகள் நீர்­கொ­ழும்­புடன் அமை­தி­ய­டை­ய­வில்லை. அவை சிலா­பத்தை நோக்கி வந்து அங்கும் அமை­தி­ய­டை­ய­வில்லை. மறு­தினம் 13 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை வடமேல் மாகா­ண­மெங்கும் பர­வி­யது. வடமேல் மாகா­ணத்தில் நக­ரங்­களில் மாத்­தி­ர­மல்ல கிரா­மங்கள் தோறும் வியா­பித்­தது.

முகநூல் பக்­கத்தில் கருத்து பதி­வேற்றம் செய்த வர்த்­தகர் ஏ.எச்.மொஹமட் ஹஸ்வர் (35) சிலாபம் பொலி­ஸா­ரினால் கைது­செய்­யப்­பட்டு சிலாபம் நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டார். 12 ஆம் திகதி அவர் கைது செய்­யப்­பட்டு அன்­றைய தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை என்­பதால் மறு­தினம் திங்­கட்­கி­ழமை ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட அவர் எதிர்­வரும் 24 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

வடமேல் மாகாண வன்­மு­றைகள்

சிலா­பத்தில் கடந்த 12 ஆம் திகதி முகநூல் பதி­வொன்­றினைக் கார­ண­மாகக் கொண்டு அரங்­கேற்­றப்­பட்ட வன்­மு­றைகள் அன்­றைய தினமே குரு­நாகல் மாவட்டம் குளி­யா­பிட்­டி­யவை நோக்கி நகர்ந்து 13 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை வடமேல் மாகா­ணத்தின் பல முஸ்லிம் கிரா­மங்­க­ளுக்கும், நக­ரங்­க­ளுக்கும் பர­வின.

குறிப்­பாக குரு­நாகல் மாவட்டம் குளி­யாப்­பிட்டி, நிக்­க­வ­ரட்­டிய, ஹெட்­டி­பொல, வீர­பொக்­குன, ஹொரம்­பாவ, பண்­டா­ர­கொஸ்­வத்த, சுனந்­த­புர, நாகொல்­லா­கொட, தோர­கொட்­டுவ பகு­தி­களில் பள்­ளி­வா­சல்­களும், வீடு­களும் தாக்­கப்­பட்­டன. தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டன. கினி­யம, அனுக்­கன, கொட்­டம்­பபிட்­டிய, பூவெல்ல, ஹெட்­டி­பொல, தோரா­கொட்­டுவ உள்­ளிட்ட கிரா­மங்­க­ளிலே அதி­க­ளவு சேதங்கள் பதி­வா­கி­யுள்­ளன.

சுமார் 30க்கும் மேற்­பட்ட முஸ்லிம் கிரா­மங்கள் தாக்­கப்­பட்­டுள்­ளன. அனுக்­கன கிரா­மத்தைத் தாக்­க­வந்த காடை­யர்­க­ளி­ட­மி­ருந்து தங்கள் உயிர்­களைக் காப்­பாற்றிக் கொள்­வ­தற்­காக மக்கள் வயல்­வெ­ளி­க­ளிலும், காடு­க­ளிலும் தஞ்­ச­ம­டைந்­தனர்.

கடந்த 13 ஆம் திகதி முதல் நேற்று வியாக்கிழமை வடமேல் மாகா­ணத்தில் ஊர­டங்குச் சட்டம் அமுல் நடத்­தப்­பட்டது.

கினி­யம பகு­தியில் மூன்று பள்­ளி­வா­சல்கள் தாக்கிச் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. கினி­யம ஆயிஷா பள்­ளி­வாசல் வாசலை உடைத்து உட்­பு­குந்த காடை­யர்கள் குர்ஆன் பிர­தி­களைத் தீயிட்டுக் கொளுத்­தி­யுள்­ள­துடன் பள்­ளி­வா­சலை சிறுநீர் கழித்து அசுத்­தப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்கள். இச்­சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என சந்­தே­கத்தின் பேரில் அறுவர் கைது செய்­யப்­பட்­டாலும் அவர்கள் பின்பு பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளனர்.

ஊர­டங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளை­யி­லேயே தாக்­கு­தல்கள் இடம்­பெற்­ற­தா­கவும், பாது­காப்புப் பிரி­வினர் எவ்­வித நட­வ­டிக்­கையும் மேற்­கொள்­ள­வில்லை எனவும் பிர­தேச மக்­களும் பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­தி­னரும் தெரி­வித்­துள்­ளனர்.

கினி­யம குளத்­தி­லி­ருந்து துப்­பாக்கி ரவைகள் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இவற்­றுக்கும் முஸ்லிம் தீவி­ர­வா­தத்­துக்கும் தொடர்­பி­ருக்­கி­றது எனத் தெரி­வித்தே வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டன.

கினி­யம குளம், சம்­பவம் நடை­பெ­று­வ­தற்கு இரு தினங்­க­ளுக்கு முன்பு பாது­காப்பு படை­யி­னரால் சோத­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்டு அங்கு எது­வித பொருட்­களும் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை என பாது­காப்பு பிரிவு தெரி­வித்­தி­ருந்த நிலை­யிலே இந்த வன்­மு­றைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

சிலாபம், கொஸ்­வத்த பொலிஸ் பிரிவைச் சேர்ந்த கொட்­டா­ர­முல்­லையில் இடம்­பெற்ற வன்­செ­யல்­களின் போது 4 பிள்­ளை­களின் தந்­தை­யொ­ருவர் வாளால் வெட்­டப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டுள்ளார். கொட்­டா­ர­முல்­லையைச் சேர்ந்த பௌஸுல் அமீர் (45) என்­ப­வரே குரூ­ர­மாக கொலை செய்­யப்­பட்­டவர். இவர் தச்சு வேலைத்­தளம் ஒன்றின் சொந்­தக்­காரர். இவ­ரிடம் பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த ஐவர் தொழில் செய்து வரு­கி­றார்கள். அவர் அப்­ப­கு­தியில் தச்சு வேலையில் பிர­பல்யம் பெற்­றி­ருந்­ததால் அப்­ப­கு­தி­யி­லுள்ள ஏனைய தச்சுத் தொழில் செய்­ப­வர்கள் திட்­ட­மிட்டு கொலை செய்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

தனது மனைவி, பிள்­ளைகள் முன்­னி­லை­யிலே இவர் தாக்­கப்­பட்­டுள்ளார். பிள்­ளைகள் தனது தந்­தையை அடிக்க வேண்டாம், தாக்க வேண்டாம் எனக் கத­றி­ய­ழுத நிலை­யிலே அவர் கடு­மை­யாகத் தாக்­கப்­பட்­டுள்ளார். இவர் அப்­ப­குதி பெரும்­பான்மை இனத்­த­வ­ருடன் நெருக்­க­மான உற­வினைக் கொண்­டி­ருந்­தவர் என அப்­ப­குதி மக்கள் தெரி­விக்­கின்­றனர்.

ஊர­டங்குச் சட்டம் அமு­லி­லி­ருந்த போதே இந்த அனர்த்­தங்கள் நடந்­தே­றி­யுள்­ளன. இப்­ப­கு­தியில் 25 வீடுகள் தாக்­கப்­பட்­டுள்­ளன. 40 க்கும் மேற்­பட்ட கும்­ப­லொன்றே பௌஸுல் அமீரைத் தாக்­கி­யுள்­ளது.

குரு­நாகல் மாவட்­டத்தில் வன்­மு­றை­களை நடாத்­தி­ய­வர்கள் கற்கள், பொல்­லுகள், இரும்­புக்­கம்­பிகள், பெற்றோல் கலன்கள், பெற்றோல் குண்­டுகள் மற்றும் வாள்­களைக் கொண்டு வந்தே தாக்­குதல் நடாத்­தி­ய­தாக பிர­தேச மக்கள் தெரி­விக்­கின்­றனர்.

ஹெட்­டி­பொல, கொட்­டம்­பிட்­டியில் ஜமா­லியா அர­புக்­கல்­லூ­ரியும் இன­வா­தி­களால் தாக்­கப்­பட்­டுள்­ளன.

கடந்த 14 ஆம் திகதி குளி­யாப்­பிட்­டியில் இயங்கி வந்த காதி­நீ­தி­மன்றக் கட்­டடம் தாக்கி சேத­மாக்­கப்­பட்­டுள்­ளது. ஹொரம்­பாவ நக­ரத்தில் அமைந்­துள்ள காதி­நீ­தி­மன்றக் கட்­டடமே தாக்­கப்­பட்டு ஜன்­னல்கள் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளது.
குரு­நாகல் மாவட்­டத்தில் 23 பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டுள்­ளன. இப்­பள்­ளி­வா­சல்­க­ளுக்­கான சேதங்கள் தலா ஒரு லட்­சத்து 20 ஆயிரம் முதல் 13 இலட்­சத்­துக்கு உட்­பட்­டவை எனவும் தக்­கி­யாக்­களின் சேதங்கள் தலா 5 ஆயிரம் ரூபா முதல் 30 ஆயிரம் ரூபா வரை என மதிப்­பீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

மினு­வாங்­கொடை வன்­மு­றைகள்

கம்­பஹா மாவட்­டத்தைச் சேர்ந்த மினு­வாங்­கொடை நகரில் முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்­களை இலக்கு வைத்து பாரிய தாக்­குல்கள் நடத்­தப்­பட்­டுள்­ளன. கடந்த 13 ஆம் திகதி இரவு இத்­தாக்­குதல் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. தாக்­கு­தல்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்ள 41 கடை­களில் 12 கடைகள் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டுள்­ளன. மினு­வாங்­கொடை வல்­ல­பா­னயில் முஸ்லிம் ஒரு­வ­ருக்குச் சொந்­த­மான பஸ்டா (Pasta) தொழிற்­சாலை தீயி­டப்­பட்டு அழிக்­கப்­பட்­டுள்­ளது.

டயமன்ட் என்ற பெய­ரி­லான இந்தத் தொழிற்­சா­லைக்கு 700 பில்­லியன் சேத­மேற்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. காடை­யர்கள் தொழிற்­சா­லைக்குத் தீயிட்­ட­போது அங்கு கட­மை­யி­லி­ருந்த 7 ஊழி­யர்கள் தங்கள் உயிரைக் காப்­பாற்றிக் கொள்ள ஓடி­யி­ருக்­கி­றார்கள். இந்தத் தொழிற்­சா­லையில் பணி­யாற்­று­ப­வர்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்­த­வர்­க­ளாவர்.

நோன்பு துறப்­ப­தற்கு சில நிமி­டங்­க­ளுக்கு முன்பு பிற்­பகல் 6.15 மணி­ய­ள­விலே மினு­வாங்­கொ­டையில் முதல் தாக்­குதல் ஆரம்­ப­மா­னது. முதலில் பவுஸ் ஹோட்­டலே தாக்­கப்­பட்­டுள்­ளது. அதன் பிறகே வன்­மு­றைகள் நக­ரெங்கும் பர­வி­யுள்­ளன. அநே­க­மானோர் ஹெல்மட் அணிந்து கொண்டு வந்து தாக்­கு­தலை மேற்­கொண்­டுள்ளனர். ஊர­டங்குச் சட்டம் அமு­லுக்கு வந்த பின்பும் தாக்­கு­தல்கள் தொடர்ந்­த­தாக பிர­தேச மக்கள் தெரி­விக்­கின்­றனர். நூற்­றுக்­க­ணக்­கான மோட்டார் சைக்­கிள்­க­ளிலும் 5 பஸ்­க­ளிலும் காடை­யர்கள் மினு­வாங்­கொடை நக­ருக்கு வருகை தந்­துள்­ளனர்.

அநேகர் வெளி­யி­லி­ருந்து வந்­த­வர்கள் என பாதிக்­கப்­பட்ட மக்­களும் வர்த்­த­கர்­களும் தெரி­விக்­கி­றார்கள்.

மினு­வாங்­கொடை ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுக்கும் பலத்த சேதம் ஏற்­பட்­டுள்­ளது. பள்­ளி­வா­சலின் கண்­ணா­டிகள் உடைக்­கப்­பட்­டுள்­ளன. உடை­மை­க­ளுக்கு சேதம் விளை­விக்­கப்­பட்­டுள்­ளன. மினு­வாங்­கொடை நகர் மற்றும் அயல் பகு­தி­களில் பொலி­ஸாரும் இரா­ணு­வத்­தி­னரும் பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரும் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.

கைதுகள்

78 பேர் கைது­வ­டமேல் மாகா­ணத்தின் குரு­ணாகல் மாவட்டம், குளி­யாப்­பிட்டி மற்றும் நிக்­க­வெ­ரட்­டிய பகு­தி­களில் முஸ்லிம் கிரா­மங்­களை இலக்கு வைத்து நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்கள் தொடர்­பான விசா­ர­ணை­க­ளை­ய­டுத்து 78 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். குரு­ணாகல், நிக்­க­வெ­ரட்­டிய, சிலாபம், புத்­தளம் மற்றும் குளி­யாப்­பிட்டி பொலிஸ் வல­யங்­களில் இடம்­பெற்ற வன்­செ­யல்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் அவர்கள் அனை­வரும் அந்­தந்த பகுதி நீதி­மன்­றங்­களில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

மஹசொன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்கவும் விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வடமேல் மாகாணம் மினுவாங்கொடை மற்றும் சில பகுதிகளில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் ஒரு சில அமைப்புகள் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. இச் சம்பவங்களின் பின்னணியில் அரசியல்வாதிகளின் தொடர்பு இருந்துள்ளதா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கடும் நடவடிக்கை

வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சிவில் மற்றும் அரசியல் சட்டத்தின் கீழும் அவசர கால சட்டத்தின் கீழும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இம்மாதம் 12 ஆம் 13 ஆம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் பொலிஸார் மற்றும் முப்படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதோடு வன்முறைகளுடன் தொடர்புடைய குழு கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவுக்கமைய சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வன்முறையாளர்களை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தும்படியும் முஸ்லிம்களுக்கும் பள்ளிவாசல்களுக்கும் பாதுகாப்பு வழங்கும்படியும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அரசாங்கத்தையும் பாதுகாப்புப் பிரிவினரையும் கோரியுள்ளது.

நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும்

வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்கள் அரபுக் கல்லூரி, வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வீடுகள் என்பனவற்றுக்கு உரிய நஷ்டஈடுகளை அரசு வழங்க வேண்டும். கொலை செய்யப்பட்ட சகோதரர் பௌஸுல் அமீரின் குடும்பத்துக்கு தாமதமில்லாமல் இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்.

முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் தொடராமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.