முஸ்லிம்களுக்கு சொந்தமான 4 கடைகள் தீயில் சாம்பலாகின

பாணந்துறையில் நேற்று முன்தினம் இரவு சம்பவம்

0 976
  • ஏ.ஆர்.ஏ. பரீல்

பாணந்­துறை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட பாணந்­துறை தொட்­ட­வத்த பிர­தான வீதியில் அமைந்­துள்ள முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான நான்கு கடைகள்  தீயினால் எரிந்து முழு­மை­யாக  சேதங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளன.

நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு 8.25 மணி­ய­ளவில் இவ்­வ­னர்த்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. சென்ட்ரல் ஹார்ட்­வெயார் எனும் இரும்புக் கடை­யொன்று, பிளாஸ்ரிக் அலு­மி­னியம் கடை­யொன்று, புடவைக் கடை­யொன்று மற்றும் இரும்புப் பொருட்­க­ளுடன் தொடர்­பு­பட்ட கடை­யொன்று என நான்கு கடைகள் தீயினால் முற்­றாக எரி­யுண்­டுள்­ளன.

“எங்­க­ளது ஹார்ட்­வெயார் கடைக்கு ஒரு கோடி ரூபா­வுக்கும் அதி­க­மாக நஷ்­ட­மேற்­பட்­டுள்­ளது. நாம் அதி­க­மான பொருட்­களைக் களஞ்­சி­யப்­ப­டுத்தி வைத்­தி­ருந்தோம். ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு 8.00 மணிக்கு கடையை மூடி­விட்டு நான் வீட்­டுக்குச் சென்றேன். சென்று சிறிது நேரத்தில் ஒரு வெடிப்புச் சத்­தத்­துடன் கடைக்­குள்­ளி­ருந்து தீ பர­வி­யுள்­ளது. கடைக்கு முன்னால் தங்­கி­யி­ருந்­த­வர்கள் எனக்கு தொலை­பேசி மூலம் 08.25 மணிக்கு அறி­வித்­தார்கள். நான் உட­ன­டி­யாக திரும்பி வந்தேன். எனது கடையும் ஏனைய கடை­களும் எரிந்து கொண்­டி­ருந்­தன.

மின் ஒழுக்கு ஏற்­ப­டு­வ­தற்கு வாய்ப்பே இல்லை. நான் எல்லா சுவிட்­சு­க­ளையும் பார்­வை­யிட்டு ஓப் பண்­ணி­யி­ருந்தேன். இந்­நி­லையில் கடைக்குள் எப்­படி நெருப்பு வந்­தது என்­பது புதி­ராக இருந்­தது. பொலிஸார் விசா­ர­ணை­களை நடத்தி இதற்­கான கார­ணத்தைக் கண்­ட­றிய வேண்டும்.

தீய­ணைப்புப் படை­யினர் ஒரு மணித்­தி­யா­லத்தின் பின்பே வந்­தனர். ஐந்து தீய­ணைப்பு வாக­னங்கள் நெருப்­பினை அணைக்கும் கட­மை­களில் ஈடு­பட்­டன. என்­றாலும் தீயினை முழு­மை­யான அணைக்க முடி­யா­மற்­போ­னது. இத­னாலே கடைகள் முழு­மை­யாக சேதங்­க­ளுக்­குள்­ளா­கின.

மாகாண சபைகள், உள்­ளூ­ராட்சி மற்றும் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் முஸ்­தபா நேர­டி­யாக வந்து நிலை­மை­யினைப் பார்­வை­யிட்டு ஆறுதல் கூறினார். இப்­ப­கு­தியில் இன முரண்­பா­டுகள் ஏற்­ப­டா­வண்ணம் பாது­காக்­கு­மாறும் வேண்டிக் கொண்டார் என்றார்.

தீயினை அணைப்­ப­தற்­காக களுத்­துறை, ஹொரணை மற்றும் மொரட்­டுவை பகு­தி­க­ளி­லி­ருந்து தீய­ணைப்புப் படை­யினர் வர­வ­ழைக்­கப்­பட்­டனர். தொடர்ந்தும் சம்­பவம் நடை­பெற்ற பகு­திக்கு பொலிஸ் பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. பாணந்­துறை தெற்கு பொலிஸார் புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அமைச்சர் பைசர் முஸ்தபா பிரதேசத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும், தீ பரவலுக்கான காரணத்தை அறிந்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் பொலிஸாரை வேண்டியுள்ளார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.