உலகம் ஐ.எஸ். அமைப்பை தோற்கடித்துள்ளது. ஆனால் அந்தத் தீவிரவாதக் குழுவை முழுமையாக அழிக்கவில்லை என ஜோர்தான் வெளிநாட்டமைச்சர் ஜமன் சபாதி கடந்த சனிக்கிழமையன்று தெரிவித்தார்.
சிரியாவில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டியது மிக முக்கியமானது, இல்லாவிட்டால் ஐ.எஸ். இனை விட மோசமான பிரச்சினைகளை எதிர்காலத்தில் முகம் கொடுக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜோர்தான் வெளிநாட்டமைச்சர் தந்திரோபாயக் கல்விக்கான 14 சர்வதேச நிறுவக மனாமா கலந்துரையாடலின் நான்காவது அமர்வில் ஜப்பானிய வெளிநாட்டமைச்சர் தாரோ கோனோ, ஐ.எஸ் அமைப்பை தோற்கடிப்பதற்கான உலகளாவிய கூட்டமைப்பின் அமெரிக்காவின் விசேட ஜனாதிபதியின் தூதுவர் பிரீட் மேக்குர்க் ஆகியோருடன் பங்குபற்றி உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார்.
சமாதானத்தை அடைவதற்கான ஒரே வழி ஜெனீவா சமாதானப் பேச்சுக்களாகும் எனவும் சபாதி தெரிவித்ததோடு அச்சுறுத்தலுக்கான உண்மையான காரணத்தை கண்டறிவது மிக முக்கியமானதாகும் எனவும் தெரிவித்தார்.
மீள்கட்டுமானம் மற்றும் ஸ்திரமற்றதன்மை ஆகிய இரண்டுக்கும் இடையேயான வேறுபாடுகளை புரிந்துகொள்ளவேண்டியது அவசியமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜோர்தானைப் பொறுத்தவரை மிக முக்கிய பிரச்சினையாக பலஸ்தீன – -இஸ்ரேல் பிரச்சினையினைப் பார்ப்பதோடு தொடர்ச்சியாக எவ்வாறு உதவுவதற்கும் அகதிகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் முயன்று வருகின்றது எனவும் சபாதி தெரிவித்தார்.