வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு அவசரகால சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை

அரசாங்கம் திட்டவட்டமாக அறிவிப்பு

0 655

வன்­மு­றை­களில் ஈடு­படும் நபர்­க­ளுக்கு எதி­ராக சிவில் மற்றும் அர­சியல் சட்­டத்தின் கீழும், அவ­ச­ர­கால சட்­டத்தின் கீழும் கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பொலி­ஸா­ருக்கு பணிப்­புரை விடுத்­துள்­ள­தாக அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது. இது தொடர்­பாக அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்­தினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள ஊடக அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,  இம்­மாதம் 12 மற்றும் 13 ஆகிய தினங்­களில் இடம்­பெற்ற வன்­முறை சம்­ப­வங்கள் பொலிஸார் மற்றும் முப்­ப­டை­யி­னரால் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரப்­பட்­டுள்­ள­தோடு, வன்­மு­றை­க­ளுடன் தொடர்­பு­டைய குழு கைது செய்­யப்­பட்டு நீதி­மன்­றத்தின் உத்­த­ர­வுக்­க­மைய சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தாக பிர­தமர் அலு­வ­லகம் தெரி­வித்­துள்­ளது.

கடந்த 13 ஆம் திகதி குரு­நாகல் மாவட்­டத்தில் குரு­நாகல் , வாரி­ய­பொல, குளி­யா­பிட்­டிய மற்றும் நிக­வ­ரெட்­டிய ஆகிய பிர­தே­சங்­க­ளிலும், புத்­தளம் மாவட்­டத்தில் சிலா­பத்­திலும், கம்­பஹா மாவட்­டத்தில் மினு­வாங்­கொடை ஆகிய பிர­தே­சங்­களில் இவ்­வாறு வன்­முறைச் சம்­ப­வங்கள் பதி­வா­கி­யி­ருந்­தன. இந்த விடயம் தொடர்­பாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் அமைச்­ச­ர­வைக்­கு­மி­டையில் விசேட கலந்­து­ரை­யா­ட­லொன்று சம்­பவ தினத்­தன்று இரவு இடம்­பெற்­றது. இந்தக் கலந்­து­ரை­யா­டலின் பின்னர் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்­தி­ன­டிப்­ப­டையில் குறித்த பிர­தே­சங்­களில் ஊட­ரங்குச் சட்டம் பிறப்­பிக்­கு­மாறு பொலி­ஸா­ருக்கு பிர­தமர் பணிப்­புரை விடுத்தார்.

மினு­வங்­கொடை பிர­தே­சத்தில் ஏற்­பட்ட வன்­முறை சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­டைய 14 சந்­தே­க­ந­பர்கள் அடை­யாளம் காணப்­பட்டு அவர்­களில் 9 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்கள் மினு­வாங்­கொடை நீதிவான் நீதி­மன்­றத்தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டதன் பின்னர் எதிர்­வரும் 29 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். ஏனைய 5 பேரும் நேற்று முன்­தினம் (14) கைது செய்­யப்­பட்­டுள்­ள­தோடு, அவர்­களும் நீதி­மன்­றத்தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர்.

வடமேல் மாகா­ணத்தில் இடம்­பெற்ற வன்­மு­றை­க­ளுடன் தொடர்­பு­டைய 60 இற்கும் மேற்­பட்ட சந்­தே­க­ந­பர்கள் நேற்று முன்­தினம் 14 ஆம் திகதி மாலை 4 மணி­ய­ளவில் கைது செய்­யப்­பட்­டனர். இவர்­களில் 9 பேர் ஹெட்­டி­பொல நீதிவான் நீதி­மன்­றத்தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டதன் பின்னர் இம்­மாதம் 27 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

கைது செய்­யப்­பட்­டுள்ள சந்­தே­க­ந­பர்­க­ளுக்கு எதி­ராக சிவில், அர­சியல் உரி­மைகள் தொடர்­பாக சர்­வ­தேச சம­வாய திட்­டத்தின் கீழ் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கு­மாறு பிர­த­மரால் பொலி­ஸா­ருக்கு பணிப்­புரை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­தோடு இது தொடர்பில் மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு பதில் பொலிஸ் அதி­கா­ரிகள் இருவர் தலை­மையில் இரு குழுக்­களை நிய­மித்து கொழும்பு மற்றும் ஏனைய பிர­தே­சங்­களில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

நிலைமையை பார்வையிடுவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சம்பவ இடத்திற்கு நேரடியாக விஜயம் செய்ததன் பின்னர் அங்கு முன்னெடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவையுடனும் கலந்துரையாடியுள்ளார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.