வன்முறையாளர்களை உடன் கைதுசெய்யவும்

உலமா சபை தலைவர்

0 620

இஸ்­லாத்தின் பெயரில் நாட்டில் தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்­களை நடத்தி அழி­வு­களைச் செய்த நாச­கார சக்­தி­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் மற்றும் ஆத­ர­வா­ளர்­களை பாது­காப்பு பிரி­வினர் குறு­கிய காலத்தில் கைது செய்­தது போன்று முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றை­களை அரங்­கேற்­றி­ய­வர்கள் எவ்­வித பாகு­பா­டு­மின்றி உடன் கைது செய்­யப்­பட்டு சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட வேண்டும் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை பாது­காப்பு பிரி­வி­னரைக் கோரி­யுள்­ள­தாக அதன் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி தெரி­வித்தார்.

கடந்த சில தினங்­க­ளாக நாட்டின் பல பகு­தி­களில் இடம்­பெற்­று­வரும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் ‘விடி­வெள்ளி’ க்குத் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், ‘ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்­பெற்ற இஸ்லாம் அனு­ம­திக்­காத நாச­கார செயல்­க­ளை­ய­டுத்து அதற்கு ஆத­ர­வ­ளித்­த­வர்கள், தொடர்­பு­பட்­ட­வர்கள், உதவி வழங்­கி­ய­வர்கள் அனை­வ­ரையும் குறு­கிய காலத்தில் கைது செய்து விட்­ட­தாக பொலிஸ் மா அதிபர் உட்­பட உயர் மட்ட பாது­காப்பு பிரி­வினர் தெரி­வித்­துள்­ளார்கள்.

கடந்த சில தினங்­க­ளாக இடம்­பெற்­றுள்ள முஸ்­லிம்­களின் வீடுகள், பள்­ளி­வா­சல்கள், வர்த்­தக நிலை­யங்கள் மற்றும் வாக­னங்கள் மீதான தாக்­குதல் சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் உடன் கைது செய்­யப்­பட வேண்டும்.

சந்­தே­கத்தின் பேரில் பாது­காப்பு படை­யி­னரால் முஸ்­லிம்­களின் வீடு­களும் பள்­ளி­வா­சல்­களும் சோத­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டது போன்று வன்­மு­றை­யா­ளர்­களின் வீடு­களும் சோத­னைக்­குட்­ப­டுத்­தப்­பட வேண்டும். இஸ்­லாத்தில் அனு­ம­திக்­கப்­ப­டாத நாச­கார செயல்கள் அரங்­கேற்­றப்­பட்­டதன் பின்பு உலமா சபை பாது­காப்பு பிரி­வி­ன­ருக்கு அனைத்து ஒத்­து­ழைப்­பு­க­ளையும் வழங்­கி­யது.

முஸ்­லிம்­களின் சக வாழ்வு பாதிக்­கப்­பட்­டுள்ள துயரம் மிக்க இந்தச் சூழலில் நாம் தைரி­ய­மாக இருக்க வேண்டும். அல்லாஹ் எப்­போதும் எங்­க­ளுடன் இருக்­கிறான் என்று நம்­பிக்கை கொள்ள வேண்டும். முஸ்­லிம்கள் தீவி­ர­வா­தத்­துக்கு ஆத­ர­வா­ன­வர்­க­ளல்ல. இஸ்­லாத்தின் பெயரால் ஒரு சில சக்­தி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட நாச­கார செய­லுக்கு முழு முஸ்லிம் சமூ­கமும் பொறுப்­பா­ன­தல்ல.

இன­வா­திகள் வெறி­யோடு வந்து தாக்­கு­தல்­களை நடாத்­தி­யுள்­ளார்கள். இச்­சந்­தர்ப்­பத்தில் நாங்கள் துஆக்­களில் ஈடு­பட வேண்டும். அத்­தோடு வன்­மு­றை­களால் பாதிக்­கப்­பட்­டோரின் பிர­தே­சங்­களில் அருகில் வாழும் பாதிக்­கப்­ப­டாத மக்கள் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு தங்களால் ஆன பொருளாதார மற்றும் உடல் ரீதியிலான உதவிகளை வழங்கலாம். ஆலோசனைகளையும் வழங்கலாம்.

முஸ்லிம்களையும் பள்ளிவாசல்களையும் பாதுகாக்கும்படி உலமா சபை நாட்டின் ஆட்சியாளர்களையும், பாதுகாப்பு பிரிவினரையும் வேண்டியிருக்கிறது’ என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.