சமூக வலைத்­த­ளங்களை நிதானமாக பயன்படுத்துவோம்

0 709

சமூக வலைத்­த­ளங்கள் சமூ­கத்தின் நல­னுக்கும், சமூக மேம்­பாட்­டுக்­குமே பயன்­ப­டுத்­தப்­பட வேண்டும். ஆனால், எமது நாட்டில் சமூக வலைத்­த­ளங்கள் இன­வாதக் கருத்­துக்­க­ளையும், உணர்ச்­சி­யூட்டும் இன­வாத புகைப்­ப­டங்­க­ளையும் பதி­வேற்றி வரு­கின்­றமை மிகவும் ஆபத்­தா­ன­தாகும். அண்­மைக்­கா­ல­மாக நாட்டில் இன­வாத வன்­மு­றைகள் பர­வு­வ­தற்கு சமூக வலைத்­த­ளங்­களே கார­ணமாய் அமைந்­துள்­ளன.

நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை மதியம் சிலா­பத்தில் ஒரு பதற்­ற­நிலை உரு­வா­கு­வ­தற்கு முஸ்லிம் வர்த்­தகர் ஒரு­வரின் முகநூல் பதி­வொன்றே கார­ணமாய் அமைந்­துள்­ளது. முகநூல் பதி­வி­னை­ய­டுத்து சிலா­பத்தில் வன்முறைகள் பதிவாகின. முக­நூலில் பதி­வேற்­றிய முஸ்லிம் வர்த்­தகர் தாக்­கப்­பட்டார். சிலா­பத்­தி­லுள்ள அனைத்து வர்த்­தக நிலை­யங்­களும் உட­ன­டி­யாக மூடப்­பட்­டன.

சிலாபம் – மைக்­குளம் ஜும்ஆ பள்­ளி­வாசல் மற்றும் வட்­டக்­கலி தௌஹீத் பள்­ளி­வா­சல் என்பன தாக்­கு­தல்­க­ளுக்­குள்­ளா­கின. இரா­ணு­வத்­தி­னரும், பொலி­ஸாரும் நிலை­மையை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்­தனர். ஞாயிறு மதியம் முதல் திங்கள் அதி­காலை 4 மணி வரை பொலிஸ் ஊர­டங்கு சட்டம் பிறப்­பிக்­கப்­பட்­டது.

சமூகம் பீதி­யிலும், அச்­சத்­திலும் உறைந்து போயுள்ள நிலையில் முகநூல் பதி­வுகள் ஏனைய இன மக்­களை உணர்ச்­சி­யூட்டும் வகையில் அமை­யக்­கூ­டாது. முஸ்லிம் சமூகம் இது விட­யத்தில் மிகவும் பொறுப்­புடன் செயற்­ப­ட­வேண்டும்.
அர­சாங்கம் நிலை­மையைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு சமூக வலைத்­த­ளங்­க­ளுக்கு தற்­கா­லிக தடை விதித்­துள்­ளது. சமூக வலைத்­த­ளங்­களே இன்று இன­வா­தத்­துக்கும், வன்­மு­றை­க­ளுக்கும் தூப­மி­டு­ப­வை­க­ளாக மாறி­யுள்­ளன.
சிலாபம், வர்த்­தகர் தனது முகநூல் பக்­கத்தில் ‘Don’t laugh more 1 day u will cry’ என்றே பதி­வேற்றம் செய்­தி­ருந்தார். ஆங்­கி­லத்­தி­லான இந்தப் பதிவை தவ­றாக விளங்கிக் கொண்ட குழு­வொன்றே குழப்பம் விளைத்­துள்­ளது.

‘அள­வுக்­க­தி­க­மாக சிரித்தால் ஒருநாள் அழ வேண்டும்’ என்ற முகநூல் பதி­வினை மொழி­பெ­யர்த்த சிங்­கள இளை­ஞர்கள் ‘இன்று மட்­டும்தான் நீங்கள் சிரிப்­பீர்கள். நீங்கள் அழ இன்னும் ஒருநாள் இருக்­கி­றது’ என பதி­விட்­டுள்­ள­தாக எண்ணி அதன் உண்மைத் தன்­மையை கேட்டு வர்த்­த­கரின் கடைக்கும், பொலி­ஸுக்கும் சென்று வாதிட்­ட­த­னை­ய­டுத்தே பிரச்­சினை உரு­வா­கி­யி­ருக்­கி­றது.

சமூக வலைத்­த­ளங்­களை பலர் தவ­றாகப் பயன்­ப­டுத்­து­வதே நாட்டில் இன, மத ரீதி­யி­லான முறுகல் நிலைக்குக் கார­ண­மாகும். பாது­காப்புச் செய­லாளர் சாந்த கோட்­டே­கொட சமூக வலைத்­த­ளங்கள் நாட்டின் பாது­காப்­புக்கு பெரும் சவா­லாக அமைந்­துள்­ள­தாக கருத்து தெரி­வித்­துள்ளார்.

நாட்­டி­லுள்ள சிங்­கள, பௌத்த மக்­களை வெட்டிக் குத்தி கொலை செய்­வ­தற்குத் திட்­டங்கள் இருப்­ப­தாக பௌத்த குருமார் சிலர் பிர­சாரம் செய்­வ­தாக சில சமூக வலைத்­த­ளங்கள் போலி­யான தக­வல்­களை வெளி­யிட்­டுள்­ளன. இத்­த­க­வல்கள் சமூக நட­வ­டிக்­கை­க­ளுக்குப் பெரும் பாதிப்­பையே ஏற்­ப­டுத்தும் என்­பதை மக்கள் உணர வேண்டும் எனவும் பாது­காப்புச் செய­லாளர் வேண்­டுகோள் விடுத்­துள்ளர்.

தேசிய பாது­காப்­புக்கு குந்­தகம் ஏற்­ப­டுத்தும் ஏதேனும் தகவல் ஒன்று கிடைக்­கு­மாயின் அதனை சமூக வலைத்­த­ளங்­களில் உலா­வ­வி­டு­வ­தற்கு முன்பு பாது­காப்பு தரப்­பி­ன­ருக்குத் தெரி­யப்­ப­டுத்த வேண்டும். அல்­லா­த­பட்­சத்தில் அது பொது மக்கள் மத்­தியில் பெரும் பீதியை ஏற்­ப­டுத்தும் எனவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

முஸ்­லிம்கள் சந்­தேக கண் கொண்டு நோக்­கப்­பட்­டு­வரும் இன்­றைய சூழலில் முஸ்­லிம்­களின் முகநூல் பதி­வேற்­றங்களை இடும்போது ஒரு முறைக்கு பல தட­வைகள் வாசித்து சிந்­தித்தே இட ­வேண்டும். சிலா­பத்தில் இடம்­பெற்­றுள்ள சம்­ப­வங்கள் இதற்கு சிறந்த உதா­ர­ண­மாகும்.

இனவாத நோக்கற்ற சிலாபம் வர்த்தகரின் முகநூல் பதிவு திரிபுபடுத்தப்பட்டு நோக்கப்பட்டுள்ளமையை நாம் பாடமாகக் கொள்ள வேண்டும்.
நாட்டில் வன்முறைகளும், இனவாதமும் தோற்றம் பெறும்போது மாத்திரம் சமூக வலைத்தளங்களை தற்காலிமாக தடை செய்வதால் நிரந்­தர தீர்வு கிடைக்­­கப்­­ போ­வ­தில்லை. இதற்­கொரு நிரந்தர தீர்வினை அரசாங்கம் இனங்கண்டு செயற்படுத்த வேண்டும்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.