ஹஜ் ஏற்பாடுகளில் சிக்கலேதும் இல்லை

0 583

நாட்டில் அசா­தா­ரண நிலை­மை­யொன்று உரு­வா­கி­யுள்­ள­போதும் இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் ஏற்­பா­டு­களில் எந்தத் தாம­தமும் ஏற்­ப­டா­தெ­னவும், இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் கட­மைக்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் தங்­க­ளது பய­ணத்­திற்­கான ஏற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கு­மாறு அரச ஹஜ் குழு வேண்­டி­யுள்­ளது.

இதே­வேளை இவ்­வ­ருட ஹஜ் முக­வர்­க­ளுக்­கான அனு­ம­திப்­பத்­தி­ரங்கள் நாளை புதன்­கி­ழமை வழங்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி எம்.ரி.சியாத் கருத்து தெரி­விக்­கையில், இவ்­வ­ருடம் தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ள 92 ஹஜ் முக­வர்­களில் 50 ஹஜ் முகவர் நிலை­யங்­க­ளுக்கு நாளை அனு­ம­திப்­பத்­தி­ரங்கள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன. பல ஹஜ் முக­வர்கள் கூட்­டாகச் சேர்ந்து ஒரு ஹஜ் முகவர் நிலை­யத்தின் அனு­ம­திப்­பத்­தி­ரத்தின் கீழ் பய­ணிக்­க­வுள்­ள­மை­யி­னாலே அனு­ம­திப்­பத்­தி­ரங்­களின் எண்­ணிக்­கையில் குறைவு ஏற்­பட்­டுள்­ளது.
தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ள ஹஜ் விண்ணப்பதாரிகள் தாம் பயணிக்கவுள்ள ஹஜ் முகவர் நிலையங்களுக்கு தம்மால் இயலுமான தொகையை முற்பணமாகச் செலுத்துவதில் எந்தத் தடையுமில்லை என்றார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.