வடமேல் மாகாண முஸ்லிம் கிராமங்களில் பள்ளிகள் , கடைகள் , வீடுகள் மீது தாக்குதல்

ஆயிரக்கணக்கானோர் வயல்வெளிகளில் தஞ்சம்

0 870

 

வடமேல் மாகா­ணத்­திற்­குட்­பட்ட பல்­வேறு முஸ்லிம் கிரா­மங்­களில் நேற்று முன்­தினம் இரவும் நேற்று பகல் வேளை­யிலும் கட்­ட­விழ்க்­கப்­பட்ட வன்­மு­றைகள் கார­ண­மாக 10 இற்கும் மேற்­பட்ட பள்­ளி­வா­சல்கள் சேத­மாக்­கப்­பட்­டுள்­ள­துடன் பல வீடுகள், கடைகள் மற்றும் வாக­னங்­களும் தாக்கி சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன.

இதன் கார­ண­மாக அப் பகுதி வாழ் முஸ்­லிம்கள் பெரும் பதற்­ற­ம­டைந்­த­துடன் அச்சம் கார­ண­மாக தமது வீடு­களை விட்டும் வெளி­யேறி வயல் வெளி­களில் தஞ்­ச­ம­டைந்­தனர்.

வட மேல் மாகா­ணத்தில் குறிப்­பாக குரு­ணாகல் மாவட்டம், குளி­யா­பிட்டி மற்றும் நிக்­க­வ­ரட்டி பகு­தி­க­ளி­லுள்ள முஸ்லிம் கிரா­மங்­களை இலக்­கு­வைத்து திட்­ட­மிட்ட குழு­வொன்­றினால் தொடர் தாக்­கு­தல்கள் நடாத்­தப்­பட்­டன. இவ்­விரு பிர­தான நக­ரங்­க­ளையும் மையப்­ப­டுத்­திய சுமார் 30 முஸ்லிம் கிரா­மங்கள் வரை நேற்று இரவு 7 மணி­யுடன் நிறை­வ­டைந்த 48 மணி நேரத்தில் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யுள்­ளன.

கினி­யம, அனுக்­கன, கொட்­டம்­பிட்­டிய ஹெட்­டி­பொல, பூவெல்ல, தோரா­கொட்­டுவ உள்­ளிட்ட கிரா­மங்­க­ளி­லேயே அதி­க­ளவு சேதங்கள் பதி­வா­கி­யுள்­ளன.
5 ஜும்ஆ பள்­ளி­வா­சல்கள் உட்­பட 9 பள்­ளி­வா­சல்கள், முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான வர்த்­தக நிலை­யங்கள், வீடுகள் மற்றும் வாக­னங்கள் இதன்­போது சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன.

இந் நிலையில் இந்த வன்­முறைச் சூழல் குரு­நாகல் மாவட்­டத்தின் ஏனைய பகு­தி­க­ளுக்கும் பரவும் அள­வுக்கு தீவி­ர­ம­டைந்­த­மையால் அதனைக் கட்­டுப்­ப­டுத்த நேற்று மாலை 4.00 மணி முதல் உடன் அமு­லுக்கு வரும் வகையில் முழு வட மேல் மாகா­ணத்­துக்கும் மறு அறி­வித்தல் வரை பொலிஸ் ஊர­டங்குச் சட்டம் பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

ஊர­டங்கின் போது வன்­மு­றைகள் இடம்­பெ­று­வதை தடுக்க பிர­தே­சத்தின் பொலி­சா­ருக்கு மேல­தி­க­மாக இரா­ணு­வத்­தி­னரும் கடற்­ப­டை­யி­னரும் பாது­காப்பு பணி­க­ளுக்கு அழைக்­கப்­பட்­டுள்­ளனர்.

நேற்று முன் தினம் குளி­யா­பிட்­டிய பொலிஸ் பிரிவில் ஹெட்­டி­பொல வீதியில் நான்கு முஸ்லிம் கடைகள் மீது திட்­ட­மிட்ட கும்பல் ஒன்று நடாத்­திய தாக்­கு­தல்­க­ளுடன் குளி­யா­பிட்­டிய பகு­தியில் முஸ்­லிம்கள் மீதான தாக்­கு­தல்கள் ஆரம்­ப­மா­கி­யி­ருந்­தன. குறித்த தாக்­குதல் தொடர்பில் சந்­தே­கத்தில் நால்வர் கைது செய்­யப்­பட்டு பொலிஸ் பிணையில் விடு­விக்­கப்­பட்ட நிலையில், நேற்று முன் தினமும் நேற்றும் குளி­யா­பிட்­டிய, பிங்­கி­ரிய, தும்­ம­ல­சூ­ரிய மற்றும் ஹெட்­டி­பொல ஆகிய பொலிஸ் பிரி­வு­களில் பிற்­பகல் 2.00 மணி­யாகும் போது பொலிஸ் ஊர­டங்கு பிறப்­பிக்­கப்­பட்­டது.

நிலைமை மோச­ம­டைந்­ததை அடுத்து பின்னர் நிக்­க­வ­ரட்டி பொலிஸ் வல­யத்தில் பதி­வான சம்­ப­வங்­களை மையப்­ப­டுத்தி கொபேய்­கனே மற்றும் ரஸ்­னா­யக்­க­புர பகு­தி­க­ளுக்கும் பொலிஸ் ஊர­டங்கு பிறப்­பிக்­கப்­பட்­டது. எனினும் அவற்­றையும் மீறி வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­ப­டலாம் எனும் அச்சம் மற்றும் சில உளவுத் தக­வல்­களை மையப்­ப­டுத்தி பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்­ர­ம­ரத்­னவின் உத்­த­ர­வுக்கு அமைய முழு வட மேல் மாகா­ணத்­துக்கும் பொலிஸ் ஊர­டங்கு பிறப்­பிக்­கப்­பட்­டது.

நேற்று முன் தினம் குளி­யா­பிட்­டிய பொலிஸ் வல­யத்­துக்­குட்­பட்ட, பிங்­கி­ரிய, தும்­ம­ல­சூ­ரிய மற்றும் குளி­யா­பிட்­டி­யவில் பொலிஸ் ஊர­டங்கு அமுலில் இருந்த போது, பிங்­கி­ரிய பொலிஸ் பிரிவில் பாரிய வன்­மு­றைகள் பதி­வா­கி­யுள்­ளன.

கினி­ய­மவில் தாக்­குதல்:

பிங்­கி­ரிய தொகுதி, பிங்­கி­ரிய பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட கினி­யம பகு­தியில் நேற்று முன்­தினம் இரவு இன­வா­தி­க­ளினால் மூன்று பள்­ளி­வா­சல்கள் தாக்கி பலத்த சேதங்­க­ளுக்­குள்­ளாக்­கப்­பட்­டுள்­ளன. பள்­ளி­வா­சல்­களின் கண்­ணா­டிகள் உடைத்து நொறுக்­கப்­பட்­டுள்­ள­துடன், மின்­வி­சி­றி­களும் தள­பா­டங்­களும் சேதங்­க­ளுக்­குள்­ளாக்­கப்­பட்­டுள்­ளன.

நேற்று முன்­தினம் ஊர­டங்குச் சட்டம் அமு­லி­லி­ருந்த வேளை­யிலே பள்­ளி­வா­சல்கள் தாக்­கு­தல்­க­ளுக்­குள்­ளாக்­கப்­பட்­ட­தாக சம்­ப­வத்தை நேரில் கண்ட கினி­யம கிரா­மத்து மக்கள் ‘விடி­வெள்ளி’யிடம் தெரி­வித்­தனர்.

கினி­யம குளத்­தி­லி­ருந்து துப்­பாக்கி ரவைகள் கண்­டெ­டுக்­கப்­பட்­ட­தாக பிர­சாரம் செய்தே இந்தத் தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இக் கிரா­மத்தில் 8 மோட்டார் சைக்­கிள்­களும் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. அப்ரார் தக்­கியா பள்­ளி­வா­ச­லுக்குள் நுழைந்த இன­வா­திகள் அங்கு சிறுநீர் கழித்து பள்ளி வாசலை அசுத்­தப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்கள். இப்­பள்­ளி­வாசல் பலத்த சேதங்­க­ளுக்­குள்­ளாக்­கப்­பட்­டுள்­ளன. பள்­ளி­வாசல் உடை­மை­களும் உடைத்து நொறுக்­கப்­பட்­டுள்­ளன.

கினி­யம ஆயிஷா தக்­கியா பள்­ளி­வா­ச­லுக்குள் நுழைந்த காடை­யர்கள் அங்­கி­ருந்த குர்ஆன் பிர­தி­களைத் தீயிட்டு எரி­யூட்­டி­யுள்­ளார்கள். நூற்­றுக்­க­ணக்­கானோர் இந்தத் தாக்­குதல் சம்­ப­வத்தில் பங்­கு­கொண்­ட­தா­கவும் அதி­க­மானோர் வெளிப் பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வர்கள் எனவும் கினி­யம மக்கள் தெரி­விக்­கின்­றனர்.

இதனை­ய­டுத்து கினி­யம பகு­தியில் பள்­ளி­வா­சல்­க­ளுக்குப் பொலிஸ் பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. இச் சம்­பவம் தொடர்பில் சந்­தே­கத்­தின்­பேரில் 6 பேர் கைது­செய்­யப்­பட்டு பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளனர்.
இதே­வேளை ” கினி­ய­மவில் பதற்­ற­மான நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. முஸ்­லிம்கள் பீதியில் முடங்கிக் கிடக்­கி­றார்கள். ஊர­டங்குச் சட்டம் அமுலில் இருக்­கி­றது. திங்­கட்­கி­ழமை இரவு இன­வா­திகள் கினி­ய­மவில் மூன்று பள்­ளி­வா­சல்­களைத் தாக்கி சேதப்­ப­டுத்தி விட்­டார்கள். அப்ரார் பள்­ளி­வாசல் பலத்த சேதங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளது. அவர்கள் பள்­ளி­வா­ச­லினுள் சிறுநீர் கழித்து அசுத்­தப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்கள். ஆயிஷா தக்­கியா பள்­ளி­வா­சலின் குர்ஆன் பிர­திகள் தீயிட்டு எரிக்­கப்­பட்­டுள்­ளன” என பள்­ளி­வா­சல்­களின் தலைவர் மௌலவி எம்.ஐ.எம். சித்தீக் விடி­வெள்­ளி­யிடம் தெரி­வித்தார்.

கினி­ய­மவில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற வன்­செ­யல்கள் தொடர்பில் விளக்­க­ம­ளிக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். இந்த தாக்­கு­தல்கள் திட்­ட­மிட்டே மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. கினி­யம குளத்தில் ஆயு­தங்கள் இருப்­ப­தாகக் கூறி பாது­காப்புப் படை­யினர் இரண்டு நாட்­க­ளாக தேடுதல் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தனர். அதன் பின்பு குளத்­தி­லி­ருந்து எவ்­வித சந்­தே­கத்­திற்­கி­ட­மான பொருட்­களும் கிடைக்­க­வில்லை எனக்­கூறி திரும்பிச் சென்­றார்கள்.

இத­னை­ய­டுத்து சிலர் குளத்­தி­லி­ருந்து துப்­பாக்கி ரவைகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாகக் கூறியே இந்தத் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­டனர். 8 மோட்டார் சைக்­கிள்­களும் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. ஊர­டங்குச் சட்டம் அமுலில் இருந்த போதே இந்த வன்­மு­றைகள் நடந்­துள்­ளன. அமைச்சர் நளின் பண்­டார ஸ்தலத்­துக்கு வந்து நிலை­மையைப் பார்­வை­யிட்டார்.

கினி­யம பிர­தே­சத்தில் 550 முஸ்லிம் குடும்­பங்கள் வாழ்­கின்­றன. இது­வ­ரை­காலம் இப்­ப­கு­தியில் எவ்­வித பிரச்­சி­னையும் இடம்­பெ­ற­வில்லை. தாக்­கு­தல்­களை நடாத்­தி­ய­வர்­களில் வெளி­யாரும் சம்­பந்­தப்­பட்­டி­ருந்­தனர்.

தொடர்ந்தும் முஸ்­லிம்­க­ளா­கிய நாம் ஏனைய இனத்­த­வர்­க­ளுடன் சமா­தா­ன­மா­கவே வாழ விரும்­பு­கிறோம். இரு தரப்­பி­னரும் சமா­தா­ன­மாக பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணு­வது நல்­ல­தென நினைக்­கிறேன். அதற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொள்ளத் திட்ட மிட்­டுள்ளோம்” என்றார்.

கினி­யம கிரா­மத்தைச் சேர்ந்த ஏ.எஸ். ஜவுபர் சம்­ப­வத்தை விளக்­கு­கையில், தக்வா பள்­ளி­வா­ச­லுக்கு அருகில் இருக்கும் குளத்தில் துப்­பாக்கி ரவைகள் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர்கள் பள்­ளி­வா­ச­லுக்கு வரு­வார்கள் என்றும் தெரி­விக்­கப்­பட்­டது. நாம் 119 ஐ தொடர்பு கொண்டு முறைப்­பாடு செய்தோம். பொலிஸ் ஜீப்­பொன்று வந்­தது. இதனைத் தொடர்ந்து நூற்­றுக்­க­ணக்­கா­ன­வர்கள் பள்­ளி­வா­சலைத் தாக்­கு­வ­தற்கு வந்­தார்கள். அவர்­க­ளிடம் கற்கள் இருந்­தன. கூச்­ச­லிட்­டார்கள். பள்­ளி­வா­சலை கற்­களால் தாக்­கி­னார்கள். அதன் பின்பு இரா­ணுவம் வந்­தது. இரா­ணுவம் வந்த சந்­தர்ப்­பத்­திலே பள்­ளி­வா­சலை உடைத்து உள்ளே சென்­றார்கள்.

இன்று (திங்­கட்­கி­ழமை) அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் குரு­நாகல் மாவட்ட அமைப்­பா­ளரும், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான எம்.என்.நஸீர் வந்து பார்­வை­யிட்டார். ஊர­டங்குச் சட்டம் அமுலில் இருந்த போதே அவர்கள் பள்­ளி­வா­சல்­களைத் தாக்­கி­னார்கள் என்றார்.
இதே­வேளை, பள்­ளி­வா­சல்கள் மற்றும் வர்த்­தக நிலை­யங்கள் தாக்­கப்­பட்டு பதற்­ற­மான நிலைமை உரு­வா­கி­யுள்ள குளி­யாப்­பிட்டி, ஹெட்­டி­பொல, பிங்­கி­ரிய மற்றும் தும்­ம­ல­சூ­ரிய பொலிஸ் பிரி­வு­க­ளுக்கு பொலிஸ் பாது­காப்பு பிரி­வி­ன­ருக்கு மேல­தி­க­மாக இரா­ணு­வத்­தையும் கட­மையில் ஈடு­ப­டுத்­தும்­படி எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்­திடம் கோரி­யுள்­ள­தாக ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­முன முஸ்லிம் முன்­ன­ணியின் பொதுச் செய­லாளர் அப்துல் சத்தார் தெரி­வித்தார்.

குரு­நாகல் மாவட்­டத்தின் பல பகு­தி­களில் பள்­ளி­வா­சல்­களும், வர்த்­தக நிலை­யங்­களும் தாக்­கப்­பட்­டுள்ள நிலையில் முஸ்­லிம்­க­ளுக்கும், பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் உரிய பாது­காப்­பினை வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்­யு­மாறு வேண்­டுகோள் விடுத்­த­தை­ய­டுத்தே எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்தை தொடர்பு கொண்டு இக்­கோ­ரிக்­கையை விடுத்­துள்­ள­தா­கவும் அவர் கூறினார்.

குளி­யா­பிட்டி சம்­பவம்

குளி­யாப்­பிட்டி நகரில் ஆறு முஸ்லிம் கடைகள் தாக்­கு­தல்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளன. மேலும் ஒரு கடையும், வீடொன்றும் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டுள்­ளன. இச்­சம்­ப­வத்­தின்­போது ஒருவர் படு­கா­ய­ம­டைந்­துள்ளார். கரந்­திப்­பொ­லயில் தாக்­கியா ஒன்றும் தாக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை நேற்று பண்­டு­வஸ்­நு­வர, ஹெட்­டி­பொல நகர் பள்­ளி­வா­சலும், கொட்­டம்­பிட்­டிய பள்­ளி­வா­சல்­களும் தாக்­கப்­பட்­டுள்­ளன. யாய­வத்த கிரா­மத்தில் 5 வீடுகள் மற்றும் கடை­யொன்றும் தாக்குதல் களுக்குள்ளாகியுள்ளன.

சிலாபத்தின் அமைதி:

இதேவேளை நேற்று முன்தினம் முகநூலில் இடப்பட்ட பதிவு ஒன்றை மையப்படுத்தி சிலாபம் நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டன. இதன் காரணமாக அங்கு 5 பள்ளிவாசல்கள் தாக்குதலுக்கு இலக்காகின. இதில் ஒரு பள்ளிவாசல் முற்றாக சேதமடைந்துள்ளது. இதன்போது முகநூலில் பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை நேற்றைய தினம் சிலாபம் நகரில் அமைதிய நிலவியதாகவும் எனினும் மக்கள் அச்சத்துடனேயே இருப்பதாகவும் சிலாபம் பிரதி மேயர் சட்டத்தரணி சாதிகுல் அமீன் தெரிவித்தார்.

மினுவாங்கொடையிலும் தாக்குதல்:

இதற்கிடையில் நேற்று மாலை மினுவாங்கொடை பிரதேசத்திலும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனையடுத்து கம்பஹா மாவட்டத்தில் இன்று காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு:

இதேவேளை வன்முறைச் சம்பவங்கள் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு பரவுவதை தடுக்கும் வகையில் நேற்றிரவு 9 மணி முதல் இன்று அதிகாலை 4 மணி வரை ஏனைய பிரதேசங்களுக்கு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.