இரு தரப்பு சமாதான முயற்சியில் பெரியமுல்லை பள்ளி நிர்வாகம்

0 620

நீர்­கொ­ழும்பு, பெரி­ய­முல்லை, பல­கத்­துறை பகு­தி­களில் கடந்த 5 ஆம் திகதி இடம்­பெற்ற முஸ்­லிக்­க­ளுக்­கெ­தி­ரான வன்­மு­­றைச் சம்­ப­வங்­களையடுத்து பாதிக்­கப்­பட்ட வீடு­கள் மற்றும் வாக­னங்­க­­ளுக்கு உரிய நஷ்­ட­ஈட்டை வழங்கி இரு­ தரப்­பி­ன­ரையும் சமா­தா­னப்­ப­டுத்­தும் முயற்­சியில் நீர்­கொ­ழும்பு – பெரியமுல்லை ஜும்­ஆ பள்ளி­­வாசல் நிர்­வாகம் ஈடுபட்­டு­ள்­ளது.

பள்­ளி­வாசல் நிர்­வாகம் நீர்­கொ­ழும்பு வன்­­மு­றை­க­ளினால் ஏற்­பட்­டுள்ள நஷ்டம் 35 இலட்சம் ரூபா என­ ம­திப்­பிட்­டுள்­ள­து.­ 35 இலட்சம் ரூபா­வைத் திரட்டும் பணியில் பள்­ளி­வாசல் நிர்­வாகம் ஈடு­பட்­­டுள்ளது. கொச்­சிக்­கடை தேவாலய தற்­கொலைக் குண்டுத்தாக்­கு­தலில் 113 பேர் பலி­யா­கி­யுள்­ளனர். அப்­ப­குதி மக்கள் மன­நிலை பாதி­க்கப்­பட்­டுள்­ள­வர்­க­ளாக உள்­ளனர்.

வன்­மு­றை­க­ளினால் பாதி­க்­கப்­பட்ட 71 முஸ்­லிம்கள் பொலி­­ஸ் நிலை­யங்­களில் முறை­ப்பாடு செய்­துள்­ளனர். நீர்­கொ­ழும்பு பகு­தியில் நல்­லி­ணக்­கத்­தையும் சக வாழ்­வி­னையும் உறுதிசெய்யும் நோக்­குடன் பாதிக்­கப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்கு நஷ்­ட­ஈடு­களை வழங்கி அவர்கள் நீதி­மன்ற நட­வ­டிக்கைகளைத் தவிர்ப்­ப­தற்­கா­ன முயற்­­சி­களே மேற்­­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக பெரி­ய­முல்லை ஜும்ஆப் பள்­ளி­வாசல் செய­லாளர் இஸ்ஸதுல் ரஹ்­மான் தெரி­வித்தார்.

கடந்த சனிக்­கி­ழமை வன்­மு­றை­க­ளினால் பாதிக்­கப்­பட்ட வீடுகள் மற்றும் வாக­ன­ங்­களின் உரி­மை­யா­ளர்கள் பள்­ளி­வா­ச­லுக்கு அழைக்­க­ப்­­­பட்டு சத்­தியக் கட­தா­சி­கள் ­பெற்­றுக்­கொள்­ளப்­பட்­ட­ன. உரிய நஷ்­ட­ஈ­டுகளைப் பெற்றுக்கொண்டு மேல­திக சட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கோ நீதி­மன்ற நட­வ­டி­க்­கை­க­ளுக்கோ செல்­வ­தில்லை என சத்தியக் கட­தா­சிகள் பெற்றுக்கொள்­ளப்­பட்­டன. இதன்­மூலம் அப்­ப­கு­தியில் சக­வாழ்­­வையும் இன நல்­லு­ற­வி­னையும் உறு­திப்­ப­டுத்திக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரி­­வித்தார்.

வன்­முறைச் சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­புபட்­ட­வர்­கள் என 48 பேரை பொலிஸார் இனங்­கண்­டுள்­ளனர். இவர்­களில் 27 பேர் நீர்­கொ­ழும்பு பகுதியையும் 21 பேர் பல­கத்­து­றை­யையும் சேர்ந்­­த­வர்கள்.

கொழும்பு – வடக்கு பிரதி பொலி­ஸ்மா அதிபர் தேச­ப­ந்து தென்னகோன் கடந்த வெள்ளிக்­கி­ழமை ஜும்ஆ தொழு­கை­யி­னை­ய­டுத்து பெரி­ய­முல்­லை ஜும்ஆப் பள்­ளி­வா­­ச­லுக்கு விஜ­­யம் செய்து கலந்­து­­­ரை­யா­ட­லொன்­­றினை நடாத்­தினார். கலந்­து­ரை­யா­டலின் போதும் சம்­பந்­தப்­பட்ட இரு­த­ரப்­பி­னரும் சமா­தான உடன்­ப­டிக்­கைக்­கு வரு­வது வர­வேற்­கத்­த­க்­கது என்று கூறினார்.

சமா­தான ஏற்­பா­டு­களுக்­காக சத்­தியக்கட­தா­சிகள் மற்றும் ஆவ­ணங்கள் நீதி­மன்­­றுக்கு சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. பெரியமுல்லை ஜும்ஆப் பள்­ளி­வாசல் திரட்­டிய இறுதி அறிக்­கையின்படி வன்­மு­றை­க­ளினால் 67 வீடு­களும், 13 முச்­சக்­கர வண்­டி­களும், 12 மோட்டார் சைக்­கிள்­களும் சேதங்­க­ளுக்­குள்­ளாக்­கப்­பட்­டுள்­ளன.

சமா­தான உடன்­ப­டிக்கையின்படி இனங்­கா­ணப்­பட்­டுள்ள சந்தேக நபர்கள் நீதி­மன்­­றினால் எச்­ச­­ரிக்­கப்­ப­டு­வார்கள் என தெரி­வித்­தார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.