என்னை பரிசோதிக்க வேண்டுமென எவரும் கோரிக்கை விடுக்கவில்லை

அபாயா அணிந்து வார வேண்டாம் என்றே ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினார்கள்

0 665

கடந்த 7 ஆம் திகதி நான் கட­மை­யாற்றும் அவி­சா­வளை புவக்­பிட்­டிய தமிழ் மகா வித்­தி­யா­ல­யத்­திற்கு கட­மைக்­காக சென்­ற­போது அங்கே பாட­சாலை மாண­வர்­களின் பெற்­றோரும், மற்றும் பலரும் பாட­சாலை நுழை­வா­யி­லுக்­க­ருகில் குழுமி நின்று ஆர்ப்­பாட்டம் செய்­து­கொண்­டி­ருந்­தார்கள்.

தமிழ் டீச்­சர்­களை பாட­சாலை நுழை­வா­யி­லுக்குள் விட்­டார்கள். முஸ்லிம் ஆசி­ரி­யை­களை உள்ளே விட­வில்லை. எம்மைப் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்த வேண்டும் என்று கேட்­க­வில்லை.

அபாயா அணிந்து வந்தால் உள்ளே அனுப்­ப­மு­டி­யாது. எங்கள் பிள்­ளை­க­ளுக்குப் பாது­காப்­பில்லை. குண்­டுகள் வெடித்து அனர்த்தம் ஏற்­ப­டு­வ­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது. போய் சாரி அணிந்­து­கொண்டு வாருங்கள் என்று ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் எம்­மிடம் தெரி­வித்­தார்கள் என அவி­சா­வளை, புவக்­பிட்­டிய தமிழ் மகா வித்­தி­யா­ல­யத்­துக்கு அபாயா அணிந்து கட­மைக்குச் சென்று பாட­சாலை வளா­கத்­துக்குள் அனு­ம­திக்­கப்­ப­டாது திருப்­பி­ய­னுப்­பப்­பட்ட 10 முஸ்லிம் ஆசி­ரி­யை­களில் ஒருவர் ‘விடி­வெள்ளி’ க்குத் தெரி­வித்தார். அந்த ஆசி­ரியை தனது பெயரை பகி­ரங்­கப்­ப­டுத்த விரும்­ப­வில்லை.

அவர் தொடர்ந்தும் சம்­பவம் பற்றி தெளி­வு­ப­டுத்­து­கையில்
‘அங்கு பெண் பொலிஸார் வந்­தார்­களா?’ என்று எனக்குத் தெரி­யாது. நான் காண­வில்லை. ஆனால் பெண் பொலிஸார் வருகை தந்­ததை சக ஆசி­ரி­யைகள் ஓரி­ருவர் கண்­ட­தாக என்­னிடம் தெரி­வித்­தார்கள்.

நாங்கள் 7 மணி­யி­லி­ருந்து 9.30 மணி வரை பாட­சாலை நுழை­வா­யி­லுக்கு வெளியில் காத்­தி­ருந்தோம். அங்கு வல­யக் கல்விப் பணிப்­பாளர் வருகை தந்தார். நாம் அவர்­க­ளிடம் நிலை­மையை விளக்­கினோம். கலர் அபா­யாவே அணிந்து வந்­தி­ருக்­கிறோம் என்றோம்.

அவர் ‘நீங்கள் சாரி அணிந்து வந்­தி­ருக்­க­லாமே-? அதிபர் கூறி­யதை நீங்கள் கேட்­டி­ருக்க வேண்டும். சாரி அணிந்து வந்­தி­ருக்க வேண்டும்’ என்றார்.
அப்­போது ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்கள் ‘இவர்­களைப் பேச விட்­டதே தப்பு. அடித்து விரட்ட வேண்டும்’ என்­றார்கள்.

நுழை­வா­யிலில் இருந்து பாது­காப்பு அதி­கா­ரியோ மற்றும் எவரோ எம்மை சோத­னை­யிட வேண்டும் என்று கோர­வில்லை. அபாயா வேண்டாம். சாரி அணிந்து வாருங்கள். எங்­க­ளுக்குப் பய­மாக இருக்­கி­றது என்றே கூறி­னார்கள் என்றார். எங்­களை அபா­யா­வுடன் உள்ளே விட்டால் பிள்­ளை­க­ளுக்குப் பாது­காப்பு இல்லை என்றும் கூறி­னார்கள்.

இதேவேளை அமைச்சர் மனோ கணேசன் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் தங்­க­ளது கைப்­பை­களைப் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­து­வ­தற்கு அனு­ம­திக்­க­வில்லை. அத­னாலே ஆசி­ரி­யைகள் திருப்­பி­ய­னுப்­பப்­பட்­டார்கள் என ஊட­கங்­க­ளுக்குத் தெரி­வித்­துள்ளார். இதனை குறிப்­பிட்ட பாதிக்­கப்­பட்ட ஆசி­ரியை முழு­மை­யாக மறுத்­துள்ளார். முழுப்பொய் எனவும் தெரி­வித்­துள்ளார். நல்­லி­ணக்­கத்­துக்கும், இன நல்­லு­ற­வுக்­கு­மான அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளமை கவலை தரு­கி­றது என்றும் கூறி­யுள்ளார்.

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியும் இவ்­வி­வ­காரம் தொடர்பில் கருத்து வெளி­யிட்­டுள்ளார்.

அபாயா அணிந்­து­கொண்டு பாட­சா­லை­க­ளுக்கு கட­மைக்­குச்­செல்ல முடி­யாது என கல்­வி­ய­மைச்சு சுற்­று­நி­ருபம் எதையும் வெளி­யிட்­டில்லை. புவக்­பிட்­டிய தமிழ் மகா வித்­தி­யா­லய ஆசி­ரி­யை­களை தீவி­ர­வா­தி­க­ளெனப் பேசி­யுள்­ளார்கள். அவர்­களின் கைப்­பையை சோத­னைக்கு உட்­ப­டுத்த வேண்­டு­மென எவரும் கோர­வில்லை. கைப்­பை­களை சோத­னைக்­குட்­ப­டுத்த கோரி­ய­போது ஆசி­ரி­யைகள் அதற்கு இட­ம­ளிக்­க­வில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்­தி­ருப்­பது தவ­றான கருத்­தாகும்.

ஊட­கங்­களும் தவ­றா­கவே செய்தி வெளி­யிட்­டன. புர்கா அணிந்து பாட­சா­லைக்கு சென்ற 10 முஸ்லிம் ஆசி­ரி­யைகள் திருப்­பி­ய­னுப்­பப்­பட்­ட­தா­கவே செய்திகள் வெளியாகின. செய்தியில் புர்கா மற்றும் நிக்காபின் படங்களே பிரசுரிக்கப் பட்டிருந்தன.

இது தொடர்பில் நான் ஊடகங்களுக்கு முறையிட்டேன். திருத்தப்பட்டு ஹிஜாப் அணிந்து சென்ற ஆசிரியைகள் என செய்தி வெளியிடப்பட்டாலும் புர்காவின் படமே பிரசுரிக்கப்பட்டது. ஹிஜாப் என்றால் என்னவென்றே மாற்று மொழி ஊடகங்களுக்குத் தெரியாது என்றார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.