மத்ரஸா, அரபுக்கல்லூரி சட்டமூலம்: அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை

0 704

அர­புக்­கல்­லூ­ரிகள் மற்றும் அரபு மத்­ர­ஸாக்­களை தனி­யான சபை­யொன்றின் நிர்­வாகம் மற்றும் கண்­கா­ணிப்பின் கீழ் கொண்­டு­வ­ரு­வ­தற்­கான சட்­ட­மூல வரைபு அமைச்­ச­ர­வைக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தாலும் நேற்று முன்­தினம் நடை­பெற்ற அமைச்­ச­ர­வையில் அது தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வில்லை.

இந்தச் சட்ட மூல வரைபு அவ­ச­ர­மாக தயார் செய்­யப்­பட்­டுள்­ளதால் இது தொடர்பில் முஸ்லிம் சிவில் சமூக அமைப்­பு­க­ளு­டனும் கலந்­து­ரை­யா­டி­யதன் பின்பு அடுத்த அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் சட்ட மூல வரைபு தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தாக அமைச்­ச­ர­வையில் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

இதன் அடிப்­ப­டையில் இன்று அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சில் அர­புக்­கல்­லூ­ரிகள் மற்றும் அரபு மத்­ர­ஸாக்­களை தனி­யான சபை­யொன்றின் நிர்­வா­கத்தின் கீழ் கொண்­டு­வ­ரு­வது பற்­றிய கலந்­து­ரை­யா­ட­லொன்று இடம்­பெ­ற­வுள்­ளது. இந்தக் கலந்­து­ரை­யா­டலில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­சபை, தேசிய சூரா சபை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் என்­ப­ன­வற்றின் பிர­தி­நி­திகள் கலந்து கொள்­ள­வுள்­ளனர்.

அர­புக்­கல்­லூ­ரிகள் மற்றும் அரபு மத்­ர­ஸாக்­களை தனி­யான சபை­யொன்றின் கீழ் கொண்டு வரு­வ­தற்­கான சட்ட மூல வரைபு கடந்த 6 ஆம் திகதி அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீ­மினால் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கைய­ளிக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

சட்­ட­மூல வரைபில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள உத்­தேச சபையில் 11 அங்­கத்­த­வர்கள் பதவி வகிக்க வேண்­டு­மென தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

11 பேரில் உல­மாக்கள், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்கள பணிப்பாளர், முஸ்லிம் சமய விவகார அமைச்சு, கல்வி அமைச்சு, திறன் அபிவிருத்தி அமைச்சு என்பனவற்றினைச் சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கும் வகையில் வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.