பயங்கரவாதிகளை காப்பாற்ற முடியாது

ஐ.எஸ். இல் பயிற்சியெடுத்தோர் மீது பாய்ச்ச நாட்டில் சட்டம் போதாது என்கிறார் பிரதமர்

0 780

பிர­பா­க­ர­னுக்கு பின்னர் கே.பியை கொண்­டு­வந்து சலு­கைகள் கொடுத்­தது போன்று எம்மால் பயங்­க­ர­வா­தி­களை காப்­பாற்ற முடி­யாது. சிரியா சென்று ஐ.எஸ். அமைப்பில் ஆயுதப் பயிற்­சி­யெ­டுத்த பின்னர் இலங்­கையில் நீண்ட கால­மாக வசிக்கும் நபர்கள் குறித்து தக­வல்கள் இருந்தும் இலங்­கையில் சட்­ட­திட்­டங்­களை மீறாத வகையில் அவர்­களை கைது­செய்ய முடி­யாது. அவ்­வாறு கைது­செய்யும் சட்டம் எமது நாட்டில் இல்லை. இந்த சட்­டத்தில் அவ்­வா­றான எந்த சலு­கை­களும் இல்லை. இதற்கு மேலும் பல சட்­டங்­களை உள்­வாங்­கிக்­கொள்ள முடியும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை பிர­த­ம­ரி­டத்­தி­லான கேள்வி நேரத்தின் போது மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யாக, புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்டம் குறித்தும், கடந்த 2014 ஆம் ஆண்டு தொடக்கம் ஐ. எஸ். செயற்­பா­டுகள் நாட்­டுக்குள் இருந்தும் ஏன் அப்­போது இந்த சட்டம் குறித்து அர­சாங்கம் பேச­வில்லை? இப்­போது ஏன் உட­ன­டி­யாக இந்த சட்­டத்தில் அக்­கறை செலுத்தி வரு­கின்­றீர்கள் என்ற கேள்­வி­களை எழுப்­பிய வேளையில் அதற்குப் பதில் தெரி­விக்­கையில் பிர­தமர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்.

யாழ்ப்­பாணம் மேய­ராக கட­மை­யாற்­றிய அல்­பிரட் துரை­யப்பா 1975 ஜூலை மாதம் கொல்­லப்­படும் வரையில், அதன் பின்னர் பயங்­க­ர­வாதம் ஒன்று உரு­வாக்­கப்­பட்ட காலத்தில் அதனை கட்­டுப்­ப­டுத்தும் சட்­ட­திட்­டங்கள் எமது நாட்டில் இருக்­க­வில்லை. குற்­ற­வியல் சட்­டத்தின் முறை­மைகள் மட்­டுமே நடை­மு­றையில் இருந்­தன. அதற்­க­மை­யவே 1979 ஆம் ஆண்டு பயங்­க­ர­வாத தடைச் சட்டம் உரு­வாக்­கப்­பட்­டது. இதுவே பயங்­க­ர­வாதம் தவ­றா­னது  என்­றதை வெளிப்­ப­டுத்தும் சட்­ட­மாக அமைந்­தது. ஆனால் இது இலங்­கையின் எல்­லைக்குள் மட்­டுமே கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டது. இந்த நிலைமை இங்­கி­லாந்தில் இருந்­தது, பின்னர் அவர்கள் பல­மான சட்­டங்­களை உரு­வாக்­கினர். சர்­வ­தேச பயங்­க­ர­வாதம் உரு­வாக்­கப்­பட்ட பின்னர் பல நாடுகள் பயங்­க­ர­வாத சட்­டத்தை சர்­வ­தேச எல்­லை­வரை நீடித்­துக்­கொண்­டன. இன்று கெரில்லா யுத்­த­மொன்று  இல்லை, அதையும் தாண்டி பயங்­க­ர­வாதம் விரி­வ­டைந்­துள்­ளது. ஆகவே அவை அனைத்­திற்கும் முகங்­கொ­டுக்கும் வகையில் எமது சட்­டத்தை விரி­வு­ப­டுத்த  வேண்டும். சர்­வ­தேச பயங்­க­ர­வாத அச்­சு­றுத்­தலை நாம் கருத்­திற்­கொண்டு செயற்­பட வேண்டும். இந்த முயற்­சி­களை நாம் கடந்த காலத்­திலும் முன்­னெ­டுத்­துள்ளோம். பல சந்­தர்ப்­பங்­களில் இந்த பாரா­ளு­மன்­றத்தில் பல­ருடன் பேசி­யுள்ளோம். சில சந்­தர்ப்­பங்­களில் இவற்றை முன்­னெ­டுக்க முடி­யாத அர­சியல் சூழல் நில­வி­யது.

சர்­வ­தேச பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்கு எம்மால் நட­வ­டிக்கை எடுக்க முடியும், அதனை புரிந்­து­கொண்டு  இதனை ஆத­ரிக்க வேண்டும். மாறாக பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு சலுகை கொடுக்க நாம் சட்­டத்தை உரு­வாக்­க­வில்லை. இலங்­கை­யிலோ அல்­லது இலங்­கைக்கு வெளி­யிலோ இலங்கை அர­சாங்­கத்­திற்கு உரித்­தான  எந்த சந்­தர்ப்­பத்­திலும் பயங்­க­ர­வாத தாக்­குதல் இடம்­பெற்றால் அதற்­கான சட்ட நட­வ­டிக்கை எடுக்க  முடியும். மேலும் பல ஆரோக்­கி­ய­மான விட­யங்கள் உள்­ளன. பிர­பா­க­ர­னுக்கு பின்னர் கே.பியை கொண்­டு­வந்து சலு­கைகள் கொடுத்­தது போன்று எம்மால் பயங்­க­ர­வா­தி­க­களை காப்­பாற்ற முடி­யாது. இந்த சட்­டத்தில் அவ்­வா­றான எந்த சலு­கை­களும் இல்லை. இதற்கு மேலும் பல சட்­டங்­களை உள்­வாங்­கிக்­கொள்ள முடியும். பயங்­க­ர­வாதம், அடிப்­ப­டை­வாதம் போன்­ற­வற்றை நிரா­க­ரிக்கும் வேலைத்­திட்­டத்­திற்கு  அனை­வரும் இணக்கம் தெரி­விக்க வேண்டும்.

அதேபோல் 2014 ஆம் ஆண்டு தொடக்கம் பயங்­க­ர­வாத செயற்­பா­டுகள் இருந்­தன என்­பது அனை­வ­ருக்கும் தெரியும். இது குறித்து பாரா­ளு­மன்­றத்தில் பலர் பேசி­யுள்­ளனர். வெளி­யிலும் பலர் கூறி­யுள்­ளனர். ஆனால் சட்­டத்தை மீறாத வகையில் அவர்­க­ளுக்கு எதி­ராக செயற்­பட முடி­ய­வில்லை. சிரியா சென்ற  பலர் இப்­போது கைது­செய்­யப்­பட்­டனர். ஆனால் இவர்­க­ளுக்கும் அப்பால் பலர் இந்த தாக்­கு­த­லுடன் தொடர்­பா­ன­வர்கள் உள்­ளனர். இவர்­களை கைது­செய்ய வேண்டும் என்றால் அவ­ச­ர­கால சட்டம் வேண்டும். ஆகவே தான் சாதா­ரண சட்­டத்தை இப்­போது நிறை­வேற்றி பின்னர் ஆழ­மாக இந்த விட­யத்தில் கைவைக்­கலாம் என்­பதே எமது கோரிக்கை. சாட்­சிகள் உள்­ளன. அவற்­றுக்­கேற்ப நட­வ­டிக்கை எடுக்க சட்டம் வேண்டும். மேலும்   சட்டம் குறித்து பல தட­வைகள் சபையில் கேட்­டுக்­கொண்­டுள்ளேன். பாரா­ளு­மன்ற குழுக்­களில் பல தட­வைகள் பேசி­யுள்ளோம். இன்று கேள்வி எழுப்பும் அனை­வரும் அந்தக் குழுக்­களில் இருந்­துள்­ளீர்கள். அப்­போது எவரும் கேள்வி எழுப்­ப­வில்லை. சிரியா சென்று வந்­த­வர்கள் குறித்து இதற்கு முன்­னரும் கூறப்­பட்­டுள்­ளது. அப்போதெல்லாம் எதிர்க்கட்சியினர் எவரும் கேள்வி எழுப்பவில்லை. கேள்வி எழுப்பியிருந்தால் நாம் பதில் தெரிவித்திருப்போம். எமது சட்டத்தில் குறைபாடுகள் உள்ளன என்பதை நான் ஆரம்பத்திலிருந்தே கூறியுள்ளேன். இந்த பயங்கரவாத நகர்வுகளில் எந்த இரகசியமும் இல்லை. ஆனால் இந்த சூழ்ச்சி இந்த ஆண்டில் தான் திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து முதலில் எமது தரப்பில்தான் சந்தேகக் கேள்விகள் எழுப்பினர் என்றார்.
-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.