பயங்கரவாதிகளையும் வெடி பொருட்களையும் கண்டுபிடிக்க அதிகம் உதவியவர்கள் முஸ்லிம்களே

வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி

0 872

பொது மக்­களின் ஒத்­து­ழைப்பால் தான் நாட்­டிற்­கெ­தி­ரான சதி­களை முறி­ய­டிக்க முடியும். அதனால் பொது மக்­களின் உதவி எங்­க­ளுக்கு கட்­டாயம் தேவை­யென வாழைச்­சேனை பொலிஸ் நிலை­யப்­பொ­றுப்­ப­தி­காரி தனஞ்­ஜய பெர­முன தெரி­வித்தார்.

வாழைச்­சேனை பொலிஸ் பிரி­வி­லுள்ள பிறைந்­து­ரைச்­சேனை பள்­ளி­வா­சல்களின் நிரு­வா­கிகள் மற்றும் சிவில் பாது­காப்பு உறுப்­பி­னர்­க­ளுக்­கான கூட்டம் பிறைந்­து­ரைச்­சேனை நூரியா பள்­ளி­வா­சலில் இடம்­பெற்­றது. அதில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கையில் அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில், நாட்டில் ஏற்­பட்ட குண்­டு­வெ­டிப்புச் சம்­ப­வங்­க­ளை­ய­டுத்து பயங்­க­ர­வா­தி­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளையும் ஆயு­தங்­க­ளையும் கண்­டு­பி­டிப்­ப­தற்கு பொலி­ஸா­ருக்கும் இரா­ணு­வத்­தி­ன­ருக்கும் உத­வி­ய­வர்­களில் அதி­க­மா­ன­வர்கள் முஸ்­லிம்கள் தான். இந்த குண்­டு­வெ­டிப்புச் செயலை முஸ்­லிம்கள் அங்­கீ­க­ரிக்­க­வில்லை.

முஸ்­லிம்­களில் சிறு குழு­வொன்று இவ்­வா­றான செயல்­களில் ஈடு­பட்­டாலும், முஸ்லிம் சமூ­கத்­தினர் அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வா­கத்தான் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

பொய்ப் பிர­சா­ரங்­க­ளுக்கு எவரும் ஏமாற்­ற­ம­டைய வேண்டாம். இணை­ய­த­ளங்­க­ளூ­டா­கவும் வாய்ப்­பேச்­சாலும் பொய்ப் பிர­சா­ரங்­களை மேற்­கொள்­வோ­ருக்­கெ­தி­ராக சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்­ள­வுள்ளோம். அவ்­வா­றா­ன­வர்கள் பற்­றிய தக­வல்கள் தெரிந்தால் பொலி­ஸா­ருக்கு தெரி­யப்­ப­டுத்­தவும்.

ஒவ்­வொ­ரு­வரும் விழிப்­பாக இருங்கள். நமது பிர­தே­சத்தில் சந்­தேக நபர்கள் எவரும் நட­மா­டி­னாலோ அல்­லது சந்­தே­கத்­திற்­கி­ட­மான வாக­னங்கள் மற்றும் பொதிகள் தென்­பட்­டாலோ கிராம சேவை உத்­தி­யோ­கத்­த­ருக்கோ அல்­லது பொலி­ஸா­ருக்கோ உடன் தெரி­யப்­ப­டுத்­துங்கள் என்றும் தெரி­வித்தார்.

இக்­கூட்­டத்தில் வாழைச்­சேனை பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட பொலிஸ் ஆலோ­சனை சபைத்­த­லைவர் போதகர் கே.சுனில், கிராம சேவை உத்­தி­யோ­கத்தர் எச்.எம்.அமானுல்லாஹ், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.எம்.நூர்தீன், நூரியா பள்ளிவாசல் தலைவர் எம்.பதுர்தீன், முஹைதீன் தைக்கா பள்ளிவாசல் நிருவாக சபை உறுப்பினர் ஏ.ஜே.எம்.முயிஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.