முஸ்­லிம்­களின் கலா­சா­ரத்தை ஒழிக்க சிலர் முயல்­கின்­றனர்

பயங்­க­ர­வா­தத்தின் பின்­னா­லுள்ள சர்­வ­தேச சக்­தியை இனங்­காண வேண்டும் என்­கிறார் அமைச்சர் ஹக்கீம்

0 595

நாட்டின் சுபீட்­சத்தை விரும்­பாத வெளிச்­சக்­தி­யொன்று இருக்­கின்­றது. இந்த சிறு கும்­ப­லுக்கு பின்­ன­ணியில் இருக்கும் அந்த சர்­வ­தேச சக்­தியை அடை­யாளம் காண­வேண்டும். அத்­துடன் இந்த சம்­ப­வத்தை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு முஸ்லிம் மக்­களின் கலா­சா­ரத்தை ஒழிக்க சிலர் முயற்­சிக்­கின்­றார்­களா என்ற சந்­தேகம் முஸ்லிம் சமூ­கத்தில் இருந்து வரு­கின்­றது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை, கடந்த 21ஆம் திகதி பயங்­க­ர­வாத தாக்­கு­த­லை­ய­டுத்து சுற்­று­லாத்­து­றைக்கு ஏற்­பட்­டுள்ள பாதிப்­புகள் குறித்த சபை ஒத்­தி­வைப்பு வேளை விவா­தத்தில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கும்­போதே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

மதத்தின் பெயரால் மேற்­கொண்ட இந்த தாக்­கு­தலை சிறி­ய­தொரு கும்­பலே மேற்­கொண்­டி­ருக்­கின்­றது. இந்த சிறிய கும்­பலை பர­வ­வி­டாமல் தடுப்­பதை தவிர வேறு வழி எமக்­கில்லை. இவர்­களின் நோக்கம் என்ன? மார்க்­கத்தில் இல்­லாத விட­யத்தை முன்­னி­லைப்­ப­டுத்­திக்­கொண்டு இவர்கள் மேற்­கொண்ட இந்த செயலால் அவர்­களின் உட­லைக்­கூட மார்க்­கத்தின் அடிப்­ப­டையில் நல்­ல­டக்கம் செய்ய முடி­யாத நிலைக்கு சென்­றி­ருக்­கின்­றது. விடு­த­லைப்­பு­லிகள் தனி­நாட்டுக் கோரிக்­கை­யுடன் போரிட்­டனர். அவர்­களின் இயக்­கத்தை அழித்­த­துடன் விடு­த­லைப்­பு­லி­களின் போராட்டம் முடி­வுக்கு வந்­தது. என்­றாலும் தற்­போது குண்­டுத்­தாக்­கு­தலை மேற்­கொண்ட சிறிய கும்­ப­லுக்கு பின்னால் வெளிச்­சக்தி இருப்­பதை காண்­கின்றோம். என்­றாலும் முஸ்லிம் சமூ­கத்தில் இவர்­க­ளுக்கு ஆத­ர­வாக பேசக்­கூ­டி­ய­வர்கள் எவரும் இல்லை. இஸ்­லா­மிய உல­கத்தை உரு­வாக்­கு­வ­தாக தெரி­வித்து உள்­நாட்டில் தனது குடும்­பத்தை மாய்த்­துக்­கொண்­டி­ருப்­பது எவ்­வ­ளவு மட­மைத்­தனம் என்­பதை காணலாம். இந்த கும்­பலை யாரோ பயன்­ப­டுத்தி இருக்­கின்­றார்கள். அதனை கண்­டு­பி­டிக்­க­வேண்டும். மாறாக நாட்­டுக்குள் மாத்­திரம் சோத­னை­களை மேற்­கொண்டு ஒரு­சி­லரை கைது­செய்து அவர்­களை புன­ருத்­தா­ப­னத்­துக்கு அனுப்­பு­வதன் மூலம் இதனை கட்­டுப்­ப­டுத்த முடி­யாது. மேலும் நாட்டின் சுபீட்­சத்தை வெளிச்­சக்தி விரும்­ப­வில்லை. அந்த சக்­தியே இந்த சிறிய கும்­பலை பயன்­ப­டுத்­தி­யுள்­ளது. அந்த சக்­தியை அடை­யாளம் காண­வேண்டும். அதற்­காக முஸ்லிம் சமூகம் உச்­ச­கட்ட பொறு­மை­யுடன் பாது­காப்பு பிரி­வுக்கு ஆத­ர­வ­ளித்து வரு­கின்­றது. இந்த சம்­ப­வத்தை பயன்­ப­டுத்­திக்­கொண்டு முஸ்லிம் சமூ­கத்தை நெருக்­க­டிக்கு ஆளாக்­கும்­வ­கையில் நடத்த முற்­ப­டக்­கூ­டாது. அவ்­வா­றான நிலையில் அவர்­களும் விரும்­பியோ இல்­லையோ வேறு திசைக்குத் தள்­ளப்­ப­டு­வார்கள்.

அத்­துடன் இந்த சம்­ப­வத்தை பயன்­ப­டுத்­திக்­கொண்டு முஸ்லிம் சமூ­கத்தின் கலா­சா­ரத்தை ஒழிக்க சிலர் முற்­பட்டு வரு­கின்­றார்­களா என்ற சந்­தேகம் முஸ்லிம் மக்கள் மத்­தியில் இருந்து வரு­கின்­றது. முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து ஆடை அணி­வதை நிறுத்­தி­யுள்ள நிலையில் அவர்கள் தலையை மறைத்து ஏனைய அவர்­களின் ஆடை­களை அணிந்து செல்­லும்­போது அதற்கு பல இடை­யூ­றுகள் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இவை நிறுத்­தப்­ப­ட­வேண்டும்.

எனவே, நாட்டின் சுபீட்சத்தை விரும்பாத சர்வதேச வெளிச்சக்தியை அடையாளம் காணவேண்டும். அதற்காக நாங்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் விரல் நீட்டிக்கொள்ளாமல் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.