நீர்கொழும்பு பகுதியில் பள்ளிகளுக்கு பாதுகாப்பு

0 580

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நீர்­கொ­ழும்பு பல­கத்­துறை, பெரி­ய­முல்ல பகு­தி­களில் இடம்­பெற்ற வன்­முறைச் சம்­ப­வங்­க­ளை­ய­டுத்து 16 பள்­ளி­வா­சல்­க­ளுக்கு பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.  ஒரு பள்­ளி­வா­ச­லுக்கு தலா இருவர் வீதம் 16 பள்­ளி­வாசல் களிலும் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.

நீர்­கொ­ழும்பு, கொச்­சிக்­கடை, கட்­டான ஆகிய பொலிஸ் பிரி­வு­க­ளுக்­குட்­பட்ட 16 பள்­ளி­வா­சல்­க­ளுக்கே பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ள­தாக பெரி­ய­முல்ல ஜும்ஆ பள்­ளி­வா­சலின் செய­லாளர் இஸ்­மதுல் ரஹ்மான் தெரி­வித்தார்.

பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள் கொழும்பு வடக்கு பிரதி பொலிஸ் மா அதிபர் தேச­பந்து தென்­னக்­கோ­னிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்தப் பாதுகாப்பு வழங்கப் பட்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.