ரமழான் காலத்தில் பள்ளிகளில் ஒலிபெருக்கி பாவிப்பதில் கட்டுப்பாடுகள்

0 590

ரமழான் மாதத்தில் அதிக சத்­தத்­துடன் ஒலி­பெ­ருக்­கி­களைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இது தொடர்பில் அனைத்துப் பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் அறி­வு­றுத்­தி­யுள்­ள­தா­கவும் முஸ்லிம் சமய, பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக் தெரி­வித்தார்.

நாட்டில் முஸ்­லிம்கள் மீது சந்­தே­கங்கள் அதி­க­ரித்­தி­ருக்கும் நிலையில் பள்­ளி­வா­சல்­களில் ஒலி­பெ­ருக்­கி­களின் சத்­தத்தைக் குறைத்­துக்­கொள்­வது நன்மை பயக்கும். சமூ­கத்தின் பாது­காப்பு கருதி பள்­ளி­வாசல் இதனை கட்­டா­ய­மாகக் கடைப்­பி­டிக்­க­வேண்டும் எனவும் கூறினார். தொடர்ந்தும் அவர் “விடி­வெள்­ளி”க்கு கருத்து தெரி­விக்­கையில் ஒரு பிர­தே­சத்தில் பல பள்­ளி­வா­சல்கள் இருந்தால் ஒரு பள்­ளி­வா­சலில் மாத்­திரம் ஒலி­பெ­ருக்­கியில் அதான் சொல்­லப்­பட்டால் நல்­லது என நினைக்கிறேன். அப்பிரதேசங்களின் நிர்வாகங்கள் இது தொடர்பில் தீர்மானித்துக்கொள்ளலாம்.

Leave A Reply

Your email address will not be published.