ஸஹ்ரான் உயி­ரி­ழந்­தமை உறுதி

0 895

ஈஸ்டர் ஞாயிறு தினத்­தன்று ஷங்­ரிலா உல்­லாச விடு­தியில் இடம்­பெற்ற தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தலில் பயங்­க­ர­வாதி ஸஹ்ரான் ஹாஷிம் உயி­ரி­ழந்து விட்­டது உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தாக கோட்டை நீதவான் ரங்க திசா­நா­யக்­க­விடம் குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

இதே­வேளை மட்­டக்­க­ளப்பு சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள ஸஹ்­ரானின் சகோ­த­ரி­யு­டைய இரத்த மாதி­ரியைப் பெற்று ஸஹ்­ரானின் உடற் பாகங்கள் என கரு­தப்­படும் பாகங்­க­ளுடன் ஒப்­பிட்டு டி.என்.ஏ. பரி­சோ­தனை செய்­ய­வேண்டும் என கோட்டை நீத­வா­னிடம் புல­னாய்வு அதி­கா­ரிகள் அனு­மதி கேட்­டனர்.

இதற்­க­மைய  தேசிய தௌஹீத் ஜமா­அத்தின் தலைவர் எனக் கூறப்­படும் ஸஹ்­ரானின் உடற்­கூ­று­களை டி.என்.ஏ. பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்தி அது தொடர்­பான அறிக்­கையை குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­விடம் சமர்ப்­பிக்­கு­மாறு அர­சாங்க ஆய்­வா­ளர்­க­ளுக்கு நீதவான் உத்­த­ர­விட்டார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தல்­களை மேற்­கொள்ள வெடி குண்­டு­களை கொண்டு செல்லப் பயன்­ப­டுத்­தி­யி­ருக்­கலாம் என சந்­தே­கிக்­கப்­படும் 7 வாக­னங்­களை குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வினர் கைப்­பற்­றி­யுள்­ளனர். இது தொடர்­பான மேல­திக விசா­ர­ணை­க­ளையும் அரச ஆய்வுத் திணைக்­களம் மேற்­கொண்டு வரு­கி­றது.

குறித்த வாகன உரி­மை­யா­ளர்­களின் சார்பில் வாதா­டிய சட்­டத்­த­ரணி இந்த வாக­னங்கள் அனைத்தும் பய­ணிகள் போக்­கு­வ­ரத்­துக்­காக மாத்­தி­ரமே பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தாக நீதி­மன்­றத்தில் சுட்­டிக்­காட்­டினார்.

குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவின் ஆலோ­சனை மற்றும் சட்­டத்­த­ர­ணியால் முன்­வைக்­கப்­பட்ட ஆதா­ரங்­களைத் தொடர்ந்து குறித்த வாக­னங்கள் குண்­டு­களை ஏற்றிச் செல்ல பயன்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­பது விசா­ர­ணை­களில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்டால் அவர்­களை விடு­விக்­கு­மாறு நீதிவான் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு உத்­த­ர­விட்டார்.

இதற்­கி­டையில் பிர­பல வர்த்­தகர் மொஹமட் இப்­ராஹிம்,   சர்­வ­தேச அமைப்­பு­க­ளிடம் இருந்து பயங்­க­ர­வாத அமைப்­புக்­காக நிதி பெற்­றுக்­கொண்­ட­தாக முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டி­னையும் விசா­ரித்து வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வர்த்தகர் இப்ராஹீமுடன்  பணிபுரிந்த இஷானா என்டர்பிரைஸஸ் நிறுவனத்தின் கணக்காளரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.